எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல்  இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி  12 பேர் பலியாகியுள்ளனர்.

கரையோர மாவட்டங்களில் புயலால் மரங்கள் சாய்ந்தன. மின்சார கம்பங்கள் பாதிக்கப்பட்டன. சில பகுதிகளில் வீடுகளின் சுவர் இடிந்தது.  மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் முழுவதுமாக கரையை கடந்தது.  தற்போது நிலப்பரப்பை நோக்கி புயலின் தாக்கம் நகர்ந்து வருவதால் சில மாவட்டங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. அதி ராம்பட்டினத்தில் 16 செ.மீ. மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.

சில மாவட்டங்களில் அடுத்த 6 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது

கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட் டம் அதிராம்பட்டினத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நாகை, கடலூர் மாவட்டங்களில்...

நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந் தன் (40) என்பவர் உயிரிழந்தார்.

விருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பவர் உயிரிழந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.

அதிராம்பட்டினத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண் ணாமலைநகராட்சி செய்யாறுஅருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங் கையில் வீடு இடிந்ததில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மின்சாரம் துண்டிப்பு

கஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங் களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக் கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள் ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து

சென்னை தவிர தமிழகத்தில் பிற பகுதிகளில் அரசு சட்டக்கல்லூரி தேர்வு கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து

புயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் கடும் மழை, புயலின் தாக்கம்

புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் ரோமண் ரோலண்ட் தெரு, கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட 7 இடங்களில் மரங்கள் விழுந்தன. பாகூரில் தாசில்தார் அலுவலகத்திலும் மரம் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் களத்தில் இறங்கி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கோரிமேட்டில் உயர் மின்விளக்கு சரிந்து சாலையில் விழுந்ததையும் அகற்றினர்.

புதுவை முதல்வர் பேட்டி

புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் மரங்கள், மின்கம்பங்கள் சில இடங்களில் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் காரைக்காலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3000 பேர் வரை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள் தற்போது காரைக்காலில் 300 கையிருப்பில் உள்ளன. தேவையைப் பொறுத்து 2000 மின்கம்பங்கள் வரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நானும், அமைச்சர்களும் இன்று காரைக்கால் புறப்பட்டுச் செல்ல உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 செ.மீ. மழையளவு பதிவாகியிருந்தது.

கேரளா

கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம்  வழியாக மூணாறைக் கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபிக் கடலில் இன்று மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

கஜா புயல் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட் டுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்ட படி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து புயல் காற்று காரணமாக சென்னை- திருச்சி ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் ரோமண் ரோலண்ட் தெரு, கந்தப்ப முதலியார் வீதி உள்ளிட்ட 7 இடங்களில் மரங்கள் விழுந் தன. பாகூரில் தாசில்தார் அலு வலகத்திலும் மரம் விழுந்தது. தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் களத்தில் இறங்கி மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கோரிமேட்டில் உயர் மின் விளக்கு சரிந்து சாலையில் விழுந்ததையும் அகற்றினர்.

புதுவை முதல்வர் பேட்டி புயல் பாதிப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் மரங்கள், மின்கம்பங்கள் சில இடங்களில் விழுந்ததைத் தவிர பெரிய பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் காரைக்காலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3000 பேர் வரை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப் பட்டுள்ளனர். மின்கம்பங்கள் தற்போது காரைக்காலில் 300 கையிருப்பில் உள்ளன. தேவை யைப் பொறுத்து 2000 மின்கம் பங்கள் வரை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நானும், அமைச்சர் களும் இன்று காரைக்கால் புறப்பட்டுச் செல்ல உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 செ.மீ. மழையளவு பதிவாகியிருந்தது.

கேரளா

கஜா புயல் திருச்சி, மதுரை, தேனி மாவட்டம்  வழியாக மூணாறைக் கடந்து கேரள மாநிலம் கொச்சி அரபிக் கடலில் இன்று மாலை குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வு நிலையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இன்று பலத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner