எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோட்டத்தில் பாதி கிணறு!

பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி!

புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Bachao, Beti Padhao). அதாவது, பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்பதாகும்.

பாலினம் பார்த்துக் கருக்கலைப்பு செய்வதைத் தடுத் தல், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அளித்தல் மற்றும் கல்வி வாய்ப்புகளை உருவாக்கித் தருதல் ஆகியவையே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அந்த வகையில், அரியானாவில், இந்தத் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தது முதல், இப்போது வரை, பெண் குழந்தைகளை பிரதமர் மோடி பாதுகாத்து விட்டார் என்று பாஜகவினரும் கூறி வந்தனர். இந்நிலையில்தான், பெண் குழந்தைகளைக் காப் போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், 56 சதவிகிதத்தை திட்டத்தின் விளம்பரத்திற்கே மோடி செலவிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

மக்களவையில்...

பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்ட நிலைமைகள் தொடர்பாக மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு நலத் துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்துள்ளார்.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தை களைப் படிக்க வைப்போம் திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இதில், ரூ. 364 கோடியே 66 லட்சம் (56.27 சதவிகிதம்) விளம்பரங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது என்று கொஞ்சமும் தயங்காமல் புள்ளிவிவரம் தந்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ், ரூ.159 கோடியே 18 லட்சம் மட்டுமே (24.5 சதவிகிதம்), மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளதாக குறிப் பிட்டுள்ளார்.

2018- -2019 நிதியாண்டில் மத்திய அரசு இத்திட் டத்துக்காக ரூ. 280 கோடியை ஒதுக்கியது என்றால், அதில் விளம்பரப் பணிகளுக்காக மட்டும் ரூ.155 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ரூ. 70 கோடியே 63 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.53 கோடியே 66 லட்சம் நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப் படவே இல்லை. 2017 -2018  நிதியாண்டிலும், மத்திய அரசுஒதுக்கிய ரூ. 200 கோடி நிதியில் 68 சதவிகிதம் விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டு உள்ளது. மொத்தமாக, 2014-  -2015 நிதியாண்டில் ரூ.18 கோடியே 91 லட்சமும், 2015 -2016  நிதியாண்டில் ரூ. 24 கோடியே 54 லட்சமும், 2016 -2017 நிதியாண்டில் ரூ. 29 கோடியே 79 லட்சமும், 2017 -2018 நிதியாண்டில் ரூ. 135 கோடியே 71 லட்சமும் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆக்கப்பூர்வ மான வழிமுறைகளை ஏற்படுத்தி, அதற்கு நிதியை செலவிடாமல், பிரதமர் மோடி தனது சுயதம்பட்டத் திற்கு, குழந்தைகளின் பெயரிலான நிதியை சூறையாடி யுள்ளார்.

மாணவி பாலியல் வன்முறை

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரைச் சேர்ந்த மாணவி (19) ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்புத் தேர்வில் நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்ற இவரை, பங்கஜ் என்ற ராணுவ வீரர் உள்பட பலர் கடத்திச் சென்று வல்லுறவுக்கு உள்ளாக்கினர். பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியது. எனினும், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரைக்கூட, அரி யானா மாநிலபாஜக அரசின் காவல்துறையினர், ஏற்க மறுத்து விட்டனர்.  மாறாக, குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியிலும் இறங்கினர். அப்போது, கொதித்தெழுந்த அந்த மாணவியின் தாயார், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்; பாதுகாப்போம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; அவரது கட்சி, ஆட்சி நடத்தும் அரியானாவில் புகாரைக் கூட வாங்க மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். மேலும், இதுதான் மோடி அரசு பெண் குழந்தை களைப் பாதுகாக்கும் லட்சணமா? என்றும் கேள்வி எழுப்பினார். தற்போது, ரூ.364 கோடிக்கு செய்யப்பட்ட விளம்பரங்கள், மோடி அரசின் லட்சணத்தை தெள்ளத் தெளிவாகவே நாட்டுக்கு காட்டிவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner