எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் அலுவலகம் தலையிட்ட மர்மம்!

'இந்து' ஏடு அம்பலப்படுத்துகிறது

சென்னை, பிப்.9 -"பிரான்ஸ் நாட்டிலிருந்து "ரஃபேல் போர் விமானங்களை வாங்குதற்கான பேச்சுவார்த்தையை பாதுகாப்புத்துறை நடத்திக் கொண்டிருந்தபோது, பிரதமர் அலுவலகம் இணைப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இந்தியாவின்நிலைமையைபலவீனப்படுத்தியதுபாது காப்புத்துறையின்கடுமையானஎதிர்ப்பையும்மீறிஇந்த முறைகேடு நடைபெற்றுள்ளது என்று மூத்த பத்திரிகை யாளரும், "தி இந்துஆங்கில நாளேட் டின் ஆசிரியருமான என்.ராம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து "தி இந்துஆங்கில நாளேட்டின் 8.2.2019 இதழில் என்.ராம் எழுதிய தலைப்புச் செய்தியாக வெளி யிடப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது: -சர்ச்சைக்குரிய 7.87 பில்லியன் (787 கோடி) டாலர் "ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தி யாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை உச்சக்கட்டத்தில் இருந்த போது, பிரதமர் அலுவலகம் பிரான்சுடன் நடத்திய "இணைப் பேச்சுவார்த்தைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் பல மான எதிர்ப்பைத் தெரிவித்தது. பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் இத்தகைய இணைப் பேச்சுவார்த்தைகள் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், பேச்சுவார்த்தை அணியும்  நடத்தி வந்த பேச்சுவார்த்தையை பலவீனப்படுத்தி விட்டது. இதனை பாதுகாப்புத்துறை அமைச்சகம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியிட்ட குறிப்பு ஒன்றின் மூலம் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கவனத்துக்கு கொண்டு வந்தது. அதில், "இந்திய பேச்சுவார்த்தை அணியில் இடம் பெறாத அதிகாரிகள் பிரான்ஸ் அரசாங்கத்துடனான இணைப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறலாம்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வந்த பேச்சு வார்த்தையின் முடிவு சாதகமாக இருக்கும் என்பதில் பிரதமர் அலுவலகம் உறுதியாக இல்லாவிட்டால், பேச்சுவார்த்தைக்கான நடைமுறைகளில் உகந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தின் தலைமையிலான பேச்சுவார்த்தையை இந்தப் பிரச்சினையில் இடம் பெறச் செய்யலாம் என்று கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன் றத்தில் அரசு அளித்த வாக்குமூலத்தின்படி, "ரஃபேல் போர் விமானக் கொள் முதலுக்கான பேச்சுவார்த்தை இந்திய விமானப்படையின் அலுவலர்களின் துணைத் தலைவர் தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட அணியால் மேற் கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது. அதில் இந்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் அலுவலகத் திற்கு எந்தப் பங்கும் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.

எனினும், "தி இந்துவின் வசமுள்ள ஆவணங்கள், பிரதமரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நிலை, "இந்திய பாது காப்பு அமைச்சகமும், பேச்சுவார்த்தை அணியும் எடுத்த நிலைக்கு முரணாக இருந்தது என்று தெரிவிக்கின்றன. அப்போதைய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் இதனை அதிகாரப்பூர்வமாக தன் கைப்பட எழுதிய குறிப்பில் தெரிவித்துள்ளார். "ஆர்.எம். இதனை தயவு செய்து பார்க்கலாம் அது (இணைப் பேச்சுவார்த்தை) நம்முடைய பேச்சுவார்த்தை நிலையை கடுமையாகப் பலவீனப்படுத்துவதால் அத்தகைய பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படுவது விரும்பத்தக்கதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறையின் கடுமையான எதிர்ப்பு

பாதுகாப்புத் துறைச் செயலாளரின் உறுதியான எதிர்ப்பு 2015 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி துணைச் செயலாளர் (விமானப்படை மிமி) எஸ்.கே.சர்மாவால் தயாரிக்கப்பட்டு, இணைச் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர் (விமானப் படை) மற்றும் அமைச் சரவையில் உள்ள தலைமை இயக்குநர் (கொள் முதல்) ஆகியோரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட குறிப்பில் பதிவு செய்யப்பட்

டுள்ளது. நீண்ட காலம் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் உருவான மூல (ஒரிஜினல்) பேரத்தின் அடையாளமே இல்லாத புதிய ரஃபேல் பேரம் பிரதமர் நரேந்திர மோடி யால் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாரீஸ் நகரில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தம் ஒன்றும், இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இடையே 2016 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் பிராங்கோய்ஸ் ஹாலண்ட் டில்லிக்கு வருகை தந்தபோது கையெழுத்தானது. 2016 ஆம்ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொலைப்பேசி உரையாடல்

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி, பிரதமர் அலுவலகத்தால் இணைப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதுபற்றிய விவரங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரான்ஸ் பேச்சுவார்த்தை அணியின் தலைவர் ஜெனரல் ஸ்டீபன்ரெப்பால் எழுதப்பட்ட கடிதத்தின் மூலமே கொண்டு வரப்பட்டது. அந்தக் கடிதம், "பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் ஜாவத் அஷ்ரப் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரின் ராஜதந்திர ஆலோசகர் லூயிஸ்வாஸி இடையே நடைபெற்ற தொலைப் பேசி உரையாடல்பற்றி குறிப்பிட்டது. இந்த உரையாடல் 20.10.2015 அன்று நடைபெற்றது.

ஜெனரல் ரெப்பின் கடிதம் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய பேச்சுவார்த்தை அணியின் தலைவரான இந்திய விமானப்படை அலுவலகர்களின் துணைத் தலைவர் ஏர்மார்ஷல் எஸ்.பி.பி.சின்கா, எ.வி.எஸ். எம்.வி.எம்.மும்கூட பிரதமரின் இணைச் செயலாளர் அஷ்ரஃபுக்கு கடிதம் எழுதினர். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ஏர்மார்ஷல் சின்காவுக்கு அளித்த பதிலில் அஷ்ரஃப், பிரஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சரின்  ஆலோசகர் லூயிஸ்வாஸியுடன் தான் கலந்தாலோசனைகள் (பேச்சுவார்த்தைகள்) நடத்தியதை உறுதிப்படுத்தினார். "பிரஞ்சு அதிபரின் அலுவலகத்தின் அறிவுரையின் பேரில் அவரிடம் பேசினேன். ஜெனரல் ரெப்ஸின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார். 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் "லி மாண்டே (பத்திரிகை) குறிப்பிட்டபடி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத் திடம் அதிபர் ஹாலண்ட், வெள்ளிக்கிழமை மாண்ட்ரீவில் நடைபெற்ற ஒரு மாநாட்டின் பின்னணியில் ஏஜென்ஸி பிரான்ஸ் பிரஸ்ஸி (பிரஞ்சு செய்தி நிறுவனம்) யால் கேள்வி கேட்கப்பட்டது. ஹாலண்ட் புதிய நடைமுறையின் (ஃபார் முலா) ஒரு பகுதியாக ரஃபேல் போர் விமான பேரத்தின் பேச்சுவார்த்தையில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு தீர்மானத்தின்படி ரிலையன்ஸ் குழுமத்தின் பெயர் காணப் பட்டது.

பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குறிப்பு

அந்த குறிப்பு அனில் அம்பானிக்குச் சொந்தமான "ரிலையன்ஸ் பாதுகாப்பு (ரிலையன்ஸ் டிஃபன்ஸ்) பற்றிய தாகும். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் குறிப்பும் கூட, "பிரஞ்சு பாதுகாப்புத் துறை அமைச்சரின் ராஜதந்திர ஆலோச கருக்கும் பிரதமரின் இணைச் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற விவாதம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் முறையாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை அணி பிரஞ்சு அணியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்தபோது அதற்கு ஒத்ததாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நலன்களுக்கு கேடு

"இத்தகைய இணை பேச்சுவார்த்தைகள் நம்முடைய நலன்களுக்கு கேடாக அமையும் அதன்மூலம், அத்தகைய விவாதங்களைத் தங்களின் லாபத்திற்கு சாதகமாக விளக்க மளித்து ஆதாயம் பெறுவதோடு, இந்திய பேச்சுவார்த்தை அணியின்நிலையை பலவீனமும் ஆக்கும். இந்தப் பிரச் சினையில் இதுதான் நிகழ்ந்துள்ளது என்று குறிப்பில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒரு வெளிப்படையான உதாரணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் குறிப்பு குறிப்பிட்டு, "ஜெனரல் ரெப் தனது கடிதத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பிரஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சரின் ராஜதந்திர ஆலோசகருக்கும், பிரதமரின் இணைச் செயலாளருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை கணக்கில் எடுத்துக்கொண்டு போர் விமானங்களை வழங்கும் நடைமுறையில் வங்கி உத்தரவாதம் நிபந்தனையாக சேர்க்கப்படவில்லை. ஆறுதல் கடிதம் தொழில் ரீதியாக விமானம் வழங்குபவர்களுக்கு அவற்றை வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்த போதுமான அளவுக்கு உறுதிமொழிகளை அளித்துள்ளது.

இவ்வாறு அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

"பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நிலைக்கும், இந்திய பேச்சுவார்த்தை அணியால் தெரிவிக் கப்பட்ட நிலைக்கும் எதிரானதாக வர்த்தக செயல்பாடு இறையாண்மை அரசு உத்தரவாதத்துடன் இல்லையேல் வங்கி உத்தரவாதத்துடன் அளிக்கப்படுவது விரும்பத்தக்கதாகும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணை பேச்சுவார்த்தைமூலம் எடுக்கப்பட்ட மற்றொரு முரண்பாடான நிலை நிலைக்கான அடையாளம் நடுவர் தீர்ப்பு ஏற்பாடாகும் என்று குறிப்பில் குறிப்பிப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் முரண்பாடான நிலைகள் எடுக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறைக் கோப்பில்

குட்டு வெளிப்பட்டது

"இணை பேச்சுவார்த்தைகளால் மட்டுமே எடுக்கப் பட்டதல்ல. இது ஏற்கெனவே எல்லா இடங்களில் வெளி யிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2016 ஜனவரியில் பாரீஸில் பிரஞ்சுத்தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். "தி இந்துவுக்கு கிடைத்துள்ள ஆவணங்கள் ரஃபேல் பேரத்தில் இறையாண்மை உத்தரவாதம் அல்லது வங்கி உத்தரவாதத்திலிருந்து விலகி இருக்கும்படி பாரிக்கருக்கு தோவல் அறிவுரை கூறியுள்ளார். இதுவும் பாதுகாப்புத் துறை அமைச்சரால் கோப்பு குறிப்பின்மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு "தி இந்து ஆங்கில நாளேட்டில் என்.ராம் எழுதியுள்ள சிறப்புச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner