எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி

மதுரை, பிப்.10   'மிஸ்டு காலில்' கட்சியை நடத்துபவர்களால் தமிழ்நாட்டில் எப்படிக் கால் ஊன்ற முடியும் என்ற வினாவை எழுப்பினார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (9.2.2019) மதுரையில்  நடைபெற்ற யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப் பட்டோர் பணியாளர் நல சங்கத்தின்  25ஆவது ஆண்டு வெள்ளி விழா மற்றும் 11 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்கச் சென்ற  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவ் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடை களைக் குறைப்போம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, ஒவ் வொரு பண்டிகையும் வருகின்ற நேரத்தில், இவ்வளவு விற்பனை இலக்கு நிர்ண யம் என்று செய்வது வேதனை யான ஒன்றாகும்.

மத்திய அரசு பட்ஜெட்; தற்காலிக பட்ஜெட்தான்!

எனவேதான், மத்திய அரசினுடைய மோடி பட்ஜெட், தேர்தல் கண்ணோட்டத்தோடு போடப்பட்டது. அது ஒரு தற்காலிக பட்ஜெட் தான். மூன்று மாதங்களே இருக்கக்கூடிய ஒரு ஆட்சி, ஏதோ 5 ஆண்டுகள் இருப்பதைப் போலவே கற்பனை செய்து கொண்டிருக் கிறார்கள்.

அதேபோல, இந்த ஆட்சியைப் பொறுத்த வரையில், சட்டப்படி இவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும், எந்த அளவிற்கு, நாடாளு மன்றத் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த பிறகு, இவர்களுடைய ஆட்சியில் தொடர்வார்களா என்ற கேள்விக்குறி இருக்கும்பொழுது, அந்தக் கடன் சுமையை மக்கள்தானே சுமக்க வேண் டும்?  இது ஒப்பனை செய்யப்பட்ட ஒரு வரவு - செலவு திட்டமாகும். பொதுவாக, அதனுடைய வரவு என்பது  182 கோடி ரூபாய் என்ற அள விற்கு வந்தாலும், செலவு என்பது அதிகமாக இருக்கிறது.

மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்தவில்லை!

மாநில அரசாங்க பட்ஜெட்டில் ஒரு வித்தி யாசம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது, முன்பே செலவை நிர்ணயித்து, அதற்கேற்ப வரவை தேடவேண்டும். ஆனால், வரி ஏதும் போட முடியாத நிலை இருக்கிறது என்று சொன்னாலும்கூட, நமக்கு நியாயமாக வரவேண்டிய பணம் மத்திய அரசிடமிருந்து வரவில்லை என்பதை, நாடாளு மன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்; அதே போல, துணை சபாநாயகர் தம்பிதுரை சொல்லியிருக்கிறார்; மற்றவர்கள் சொல்லியிருக் கிறார்கள். ஜி.எஸ்.டி. மூலமாக ஏராளமாகப் பணம் வசூலித்தாலும்கூட நம்முடைய மாநிலத் தினுடைய பங்கு வரவில்லை. 15 ஆயிரம் கோடி ரூபாய், கஜா புயலின் சேதத்திற்காக மாநில அரசு, மத்திய அரசை கேட்டது. அதில் 10 சதவிகிதம்கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. வலியுறுத்திக் கேட்கக்கூடிய நிலை யில், மாநில அரசு இல்லை. எனவேதான், இங்கே இருந்து தமிழகத்தினுடைய வரிப் பணம் டில்லிக்குக் கொள்ளை போகிறது. திரும்பவும் நாம் பெறு வது என்பது இல்லாத காரணத்தினால் தான், இதுபோன்ற கடன் சுமை ஒருபக்கம்; பற்றாக் குறை இன்னொரு பக்கம். வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு தீர்வு இல்லை. இந்த சூழ்நிலைகள்தான் இன்றைக்கு இருக்கிறது.

பல ஆண்டுகளாக வேலையில்லாமல்...

அதோடு கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், ஏராளமான ஆசிரியர்கள் படித்து விட்டு, பல ஆண்டுகளாக வேலையில்லாமல், கொத்தனார் வேலைக்குக்கூட தயாராக இருக் கிறோம் என்று அவர்கள் சொல்லக்கூடிய நிலை இருக்கிறது. அவர்களுக்கு எந்தப் பரிகாரமும் இல்லை. அதுபோலவே, ஓய்வூதியத் திட்டம் மற்றும் அவர்களுடைய பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று என்.ஜி.ஓ.,க்கள் அரசு ஊழியர்கள், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட, ஜாக்டோ ஜியோ அமைப்பு எந்தப் பிரச்சினை களுக்காகப் போராடியதோ, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை. அதோடு, போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய பிரச் சினையும் தீர்ந்ததாக இல்லை. இவைகள் எல்லாம் தேர்தல் அறிவிக்கப்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில் பூதாகரமாக' கிளம்பவிருக் கின்றன.

வரி இல்லாத பட்ஜெட் என்று சொல்வதில் பெருமையல்ல!

எனவேதான், இந்த பட்ஜெட் என்பது ஒரு ஒப்பனை செய்யப்பட்ட திட்டமாக இருக்கிறதே தவிர, வேறொன்றும் இல்லை. அதிகாரிகள் தயாரித்துக் கொடுப்பார்கள், அதை அமைச்சர்கள் படிப் பார்கள் என்று சொல்கின்ற அளவில் இருந்தாலும், வரி இல்லாத பட்ஜெட் என்று சொல்வதில் பெருமையல்ல; அரசாங்கத் தில் பணக்காரர் களுக்கு வரி போடவேண்டும். வசதி உள் ளவர்களிடம் வரி போட்டு, வசதி இல்லாதவர்களுக்கு, வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண் டும் என்பது தான் மிக முக்கியம். ஆகவே, பயிர்க்கடன்கள்கூட தள்ளுபடி என்று சொல்வது எந்த அளவிற்குச் செயல்படப் போகிறது என் பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஒப்பனை வெளியே தெரிகிறது;

மூச்சுத் திணறல் உள்ளே இருக்கிறது

எனவேதான், இந்த பட்ஜெட் சடங்கு போல நடந் திருந்தாலும்கூட, எது அத்தியாவசியமோ அது இல்லை. மூச்சுத் திணறிக் கொண்டிருக் கக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. என்றாலும், அந்த மூச்சுத்திணறலோடு மிகப்பெரிய அள விற்கு ஒப்பனை இருக்கிறது; ஒப்பனை வெளியே தெரிகிறது. மூச்சுத் திணறல் உள்ளே இருக்கிறது. இதுததான் உண்மை!

செய்தியாளர்: தமிழகத்தில் பாரதீய ஜனதா காலூன்று வதற்காக  வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தே.மு.தி.க., பா.ம.க., அ.தி.மு.க. தலை மையில் ஒரு கூட்டணி உருவாகப் போவதாக ஒரு தகவல் வெளிவந்திருக்கிறதே...?

தமிழர் தலைவர்: அப்படி இருந்தால், அதனை வரவேற்கவேண்டும். ஏனென்று சொன்னால், ஒரே அளவிற்கு, யாருக்கு யார் நண்பர் என்று புரிந்து, ஒரு கட்சியை மக்கள் புறக்கணிப்பதைவிட, எல்லோரையும் சேர்த்து, ஒரே முத்திரையில், ஒரே பொத்தானை அழுத்து வதிலேயே ஒழித்துவிடக் கூடிய அளவிற்கு வருவது மிக முக்கியம்.

பாரதீய ஜனதா கால் ஊன்றுவதைப்பற்றி கேட்டீர்கள், அதற்குக் கால் இருந்தால் ஊன்ற லாம்; அது மிஸ்டு காலிலேயே இருக்கக் கூடிய கட்சி. அந்தக் கட்சிக்கு இது வரையில் நோட்டாவோடு தான் போட்டி, வேறு எந்தக் கட்சியோடும் போட்டி இல்லை.

மடியில் கனம் இருப்பவர்களை அவர்கள் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

தான் மட்டும் நோட்டா வோடு போட்டி போடக் கூடாது; மற்றவர்களையும் துணை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, அவர்கள் அவசர அவசர மாக, மறைமுகமாக இதுபோன்ற வேலைகளில் ஈடுபடு கிறார்கள். மோடிகூட மதுரைக்கு வந்து ஏமாந்து திரும்பிப் போனார். இப்போது மிரட்டிப் பார்ப்பதற்காக அவர்களுடைய கைகளில் ஆயுதம் இருக்கிறது. மடியில் கனம் இருப்ப வர்களை அவர்கள் பிடித்து இழுத்துக் கொண் டிருக்கிறார்கள்.  எனவே, வழியில் அவர்களைப் பயமுறுத்தி தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்காக முயற்சி எடுக்கிறார்கள்.

தமிழகத்தில் வலுவான மதச்சார்பற்ற கூட்டணி

ஒரு கல்லிலே பல மாங்காய்களை அடிப்பதற்கு வாய்ப்பாக, தமிழகத்தில் சிறப்பான வகையில் ஒரு வலு வான மதச்சார்பற்ற கூட் டணிக் கட்சிகள் இருக்கின்றன. இங்கே இரண்டே பிரச்சினைகள்தான் - யார் வர வேண்டும் என் பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் இந்தி யாவில் நடைபெறக்கூடிய தேர்தல் பிரச்சினை.

மூழ்குகின்ற கப்பலில் ஏறுவது புத்திசாலித்தனமா?

இதுவரையில் பா.ஜ.க.வோடு நண்பர்களாக இருந்தவர்கள், இன்றைக்கு இல்லை. புதிதாக இவர்கள் நண்பர் களாக சேர்ந்தால், மூழ்குகின்ற கப்பலில் இருந்து, குதித்து தப்பிக்கின்ற நேரத்தில், இவர்கள் அந்தக் கப்பலில் ஏறினால், அது அவர்களுடைய 'புத்திசாலித்தனத்திற்கு' ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner