எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சி.பி.அய். விசாரணைக்கு மாற்றம்

சென்னை, மார்ச் 13 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் முகநூல்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்முறை செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் வன்முறை செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

இதில் சபரிராஜன் (வயது 25), திரு நாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்தக் கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ் விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கொடூரக் கும்பல் 200 -க்கும் அதிகமான பெண்களை  கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஅய் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  இந்த வழக்கில்  முறையாக விசாரணை நடைபெற வில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சிபிஅய் விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, இந்த வழக்கில் கைதான 8 பேரில் 4 பேர் மீது குண்டர் சட்டத் தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டம் 600 பேர் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சியில் நேற்று பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமாகிய கவிஞர் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். கனிமொழி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கையும் உரிய தண்டனையும் வழங்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

திருவண்ணாமலை அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அடையாற்றில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர்.

வரும் 16 ஆம் தேதி மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner