எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய செறிவான உரை

நாகர்கோவில், மார்ச் 14 ஜூலியஸ் சீசர் வந்தார், வென்றார் என்று கூறப்படுவதுபோல, இந்தி யாவில் மதச்சார்பற்ற ஆட்சியை, சமுகநீதிக்கான ஆட்சியைக் கொண்டுவர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களே வருக, நல்லாட்சி தருக  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

நாகர்கோவிலில் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

நேற்று (13.3.2019)  நாகர்கோவிலில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இந்தியாவிலே வேறு எவரும் சொல்லாத நேரத்தில்....

மிகப்பெரியதொரு வரலாற்றைப் படைக்கப் போகின்ற, ஒரு அரசியல் திருப்பத்தை ஏற் படுத்தப் போகின்ற, தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஒரு மதச்சார்பற்ற ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து, இந்த நாட்டைக் காக்கக் கூடிய ஆற்றல் படைத்த நிலையில் வந்திருக்கக்கூடிய, எதிர்காலப் பிரதமர் என்று எல்லோராலுமே உறுதி செய்யப்படக்கூடிய இந்தக் காலகட்டத்திலே, அதுவும் நம்முடைய தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களால், இந்தியாவிலே வேறு எவரும் சொல்லாத நேரத்தில், இவர்தான் அடுத்த பிரதமர், மதச்சார்பின்மையைக் காக்கக் கூடியவர், இவர்தான் ஆர்.எஸ்.எசுக்கு அடி கொடுக்கக் கூடியவர்; இவர்தான் கோட்சேக்கள் இல்லாத நாட்டை உருவாக்கக் கூடியவர்; இவர்தான் காமராசர் கொள்கையை, சமுகநீதியைப் பாது காக்கக்கூடியவர் என்பதை எடுத்துச் சொல்லி, அதற்காக மிகப்பெரிய போராட்டத்தை இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடத்தி வருகின்ற நம்முடைய அன்பிற்கும், பாராட்டு தலுக்கும் உரிய ராகுல் காந்தி அவர்களை அடையாளம் காட்டி, மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியிருக்கின்ற முதல் பிரச்சார பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் அன்புச்சகோதரர் கே.எஸ்.அழகிரி அவர்களே,

கலைஞர் இருக்கிறார், மறையவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் தளபதி

அருமைத் தலைவர் காங்கிரசு பேரியக் கத்திற்கு ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சி, இந்தி யாவினுடைய வரலாற்றை திருப்பிக் கொண்டு வருவதற்குக் காரணமாக இருக்கக்கூடியவரும், தமிழ்நாட்டில் இத்தனைக் கட்சிகளையெல்லாம் கூட்டணிகளாக அல்ல - கூட்டு அணிகளாக, கொள்கை அணிகளாக, லட்சியப் போருக்குத் தயாராக ஆக்கியிருக்கின்ற எங்கள் தளபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர், இதோ கலைஞர் இருக்கிறார், மறையவில்லை என்பதை நிரூபித்துக் கொண் டிருக்கின்ற எங்கள் தளபதி அவர்களே,

இன்று காலையில்கூட சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், அதேபோல, செய்தியாளர்கள் கூட்டத்தில் பல கேள்விகளைக் கேட்கிறார்கள்; அதற்கெல்லாம் காங்கிரசு பேரி யக்கத்தின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மிகச் சிறப்பான வகையில் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு கருத்தை அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.

பிரதமர் ஆவதற்கு முழு தகுதி படைத்தவர் ராகுல்காந்தி

அடுத்து யார் பிரதமர்? என்று அவரிடம் கேட்கப்பட்டபொழுது, அழகாகச் சொன்னார், செய்தியாளர்கள் அத்துணைப் பேரும் மட்டு மல்ல, எதிரிகள்கூட வாயடைக்கக் கூடிய வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வரக்கூடியவர் பிரதமர் என்று தன்னடக்கத்தோடு சொன்னாரே, இது ஒன்றே அவர் பிரதமர் ஆவதற்கு முழு தகுதி படைத்தவர் என்பதற்கு அடையாளம்.

மீண்டும் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டு இருக்கின்ற ஆபத்து!

மீண்டும் கோட்சேக்களின் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டிய கட்டம்!

புதிய கருத்தைத் தருக!

அதேபோல, தமிழ்நாட்டில் ஒரு கொத்தடிமை ஆட்சி நடைபெறுகிறது; வெறும் அடிமை ஆட்சியல்ல; இதற்கு முன்பு லேடி தலைவராக இருந்தார்; இப்பொழுது மோடி தலைவராக வருவார் என்று கூறக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அப்படிப்பட்ட கொத்தடிமைகளை அழிக்க, ஒரு புதிய சகாப் தத்தை இந்திய அரசியலிலும், அதேபோல தமிழ்நாட்டிலும் உருவாக்க வந்திருக்கின்ற நீங்கள் வருக, புதிய கருத்தைத் தருக!

நேரத்தின் நெருக்கடி - நெருக்கடி காலத் தைத்தான் நாங்கள் சந்தித்திருக்கின்றோம். இப்பொழுது நெருக்கடியும் இருக்கிறது; ஆனால், உங்கள் வரவு, ஒரு புதிய வரலாற்றை உருவாக்குவது. எனவே, வாருங்கள், இருபெரும் தலைவர்களே, கருத்துகளைத் தாருங்கள், தாருங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன்.

நாளை ஆட்சி நமதே!

ஜூலியஸ் சீசர் வந்தார், கண்டார், வென்றார்'' என்கிற பழமொழி உண்டு.

அதுபோல, நீங்கள் தமிழ்நாட்டில் வந்தீர்கள்; கண்டீர்கள்; வென்றீர்கள்; நாளை ஆட்சி நமதே! நாற்பது மட்டுமல்ல, இந்த நானிலமே, இந்தியாவினுடைய ஆட்சியே நமது, நமது என்று சொல்லி,

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

வருக மதச்சார்பின்மை ஆட்சி!

காக்கப்படட்டும் சமுகநீதி என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner