எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' படப்பிடிப்பு

* மத்திய தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும்  சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான பங்குகள் வளர்ச்சி என்பது 2018 ஆம் ஆண்டில் 30 விழுக்காடாக இருந்தது.

* அணிகலன் மற்றும் வைரம், நகை தொழில்துறையில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை மற்றும் தொழில் தேக்க நிலை பணமதிப்பிழப்பால் ஏற்பட்டுவிட்டது.

* அத்தொழில்களில் போதிய நிதி பெற முடியாததால், குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்பட முடியாமல், வளர்ச்சி அடையாமல் தொழில் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டது.

* பன்னாட்டு பொருளாதார திட்டமிடலுக்கான கழகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு 370 பில்லியின் டாலர் மதிப்பில் நிதி தேவைப்படும் நிலையில், வெறும் 139 பில்லியன் டாலர் நிதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

* வங்கிகள் அளிக்க வேண்டிய பங்கு தொகைகள் 2016 செப்டம்பர் முதல் இன்று வரை மறுக்கப்பட்டு வருகிறது.

* உற்பத்தி துறையில் 45 விழுக்காடும், ஏற்றுமதித் துறையில் 40 விழுக்காடும் மட்டுமே எட்டப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் காரணமாக பண மதிப்பிழப்பும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்புமே காரணமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை, மார்ச் 15 மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வந்த சிறு தொழிற்சாலைகளை மறையச் செய்து விட்டது. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளைக் காண வில்லை. பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புக் களிலிருந்து தமிழ்நாடு இன்னமும் மீளவில்லை.

இது  குறித்து,  தி  நியூ  இந்தியன்  எக்ஸ்பிரஸ்' ஆங்கில  நாளேட்டின்  14.3.2019  இதழில்  வெளியிடப்பட்டுள்ள  சிறப்புச்  செய்தியில்  குறிப்பிடப் பட்டிருப்பதாவது:-

நூற்றுக்கணக்கான   சிறுதொழில்   கூடங்கள் அமைந்திருந்த கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கேட்டுக்  கொண்டிருந்த  எந்திரங்களின்  ஓசையும், தொழிலாளர்களின்  கூச்சல்களும்,  முரட்டுக்  குரல் களும்,  மெல்லமெல்லக்  குறைந்து,  காளான்கள்  போல் பெருகி  வரும்  தகவல்  தொழில்  நுட்ப  நிறு வனங்கள் பெருகி,  சிறுதொழில்  துறையையே  முற் றிலும்  முடங்கி அமைதி அடையச் செய்து விட்டது.

சிறு  மற்றும்  குறுந்தொழில்  நிறுவனங்கள்  அமைந்துள்ள,  கிண்டி  திரு.வி.க.  தொழிற்பேட்டையில்  இருக்கும் சிறுதொழிற்சாலைகள் மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள்  போன்றவை  மென் பொருள்  நிறுவனங்களாக   மாற்றப்பட்டுள்ளன''   என்று   சிறு தொழில்  மேம்பாட்டுக்  கழக  (சிட்கோ)  அலுவலர்  ஒருவர்தெரிவித்துள்ளார்.

2015 ஆம்  ஆண்டு  சென்னையைத்  தாக்கிய பெரும்  வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட  இந்தத்  தொழிற்பேட்டை  அடுத்தடுத்து  பல்வேறு  பிரச்சி னைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. பண மதிப் பிழப்பாலும், சரக்கு மற்றும்  சேவை  வரி  (ஜி.எஸ்.டி.)யாலும்  ஏற்பட்ட  பண முடக்கத்தால்  அவை  பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளன. அலைக்கும்   ஆழ் கடலுக்கும்   இடையே   சிக்கிக்கொண்டதைப்  போல,  நாங்கள்  குறைவான  நிதிக்கும் வரி  செலுத்த  வேண் டியுள்ளது.  எல்லோருமே  சிறு, குறு  மற்றும்  நடுத்தரத்  தொழில்களைப் பற்றி  பேசிக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால்  ஒருவரும்  அதில் உண்மையானதைப் பேசுவதில்லை. அவற்றுக்காக பல திட்டங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளன.  ஆனால்  எந்தத்திட்டமும்  கடந்த  5  ஆண்டுகளில்  செயல்படுத்தப்படவில்லை  என்று  தொழிற்பேட்டை  உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.வி.கனகாம்பரம் கூறியுள்ளார்.

தற்போது  அம்பத்தூர்,  கிண்டி,  ஆலந்தூரில்  உள்ள 5000-க்கும்  மேற்பட்ட  துணைத்  தொழிற் சாலை  பணி ஆணைகள்  எதுவும்  இல்லாததால்  சிறுகச்  சிறுக இறந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில்   தொழிற்பேட்டையில்   நிலங்கள் விலைக்கு  விற்கப்படவோ,  லீசுக்கு  (குத்தகைக்கு) விடப்படவோ  செய்வதால்  சிறுதொழில்களை  நடத் துவதற்கு    இயலாமல்  உள்ளது  என்று  தமிழ்நாடு  மிகச்சிறிய  (நுண்)  தொழிற்சாலைகள்  சங்கத்  தலை வர் வி.எஸ்.நரசிம்மன்  சொல்கிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத் தரத் தொழில்  நிறுவனங்களின்  வளர்ச்சி  மத்திய  அரசால் உறுதி  அளிக்கப்பட்ட  அளவுக்கு  இல்லை.  நலிந்த தொழிற்சாலைகள்பற்றி தமிழ்நாட்டில் சரி யான புள்ளிவிபரங்கள் இல்லாத போது அரசு கொள்கைக் குறிப்பில் 50  ஆயிரம்  நிறுவனங்கள்  நலிந்த  நிறுவனங்களாக இருப்பதாகக்  குறிப்பிடப்பட் டுள்ளது.  அதனால்  அவை மூடப்பட்டுள்ளன.  அதன்மூலம்  5  லட்சம்  வேலைவாய்ப்புகள்  இழக்கப் பட்டுள்ளன.''

கடந்த  அய்ந்து  ஆண்டுகளில்,  சிறு,  குறு  மற்றும் நடுத்தரத்  தொழில்களின்  வளர்ச்சி  பாதிக் கப்பட்டுள்ளது.  நாடு  முழுவதும்  ஒரே  மாதிரியாக  இருக்கும் என்றும் அதன் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே  தெரிவிக்கப்பட் டிருந்தது.  நாடு முழுவதும்  ஒரே  மாதிரி  வரி விகிதம்  இருக்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  அதில் மாற்றத்தைக் கொண்டு வந்து மத்திய அரசு தனது உறுதிமொழியை மீறி விட்டது. தாங்கள் சரக்கு மற்றும் சேவை வரி கட்டப் பயப்படவில்லை என்றும், ஆனால் அதில் அவர்கள் மாற்றம் கொண்டு வந்தது... ஏன்?'' என்று சென்னை மாவட்ட சிறு தொழிற்சாலைகள் சட்டத் தலைவர் டி.வி.அரிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதைத் தவிர்ப்பதற்கு தங்கள் சொந்தப் பணத்திலிருந்து வரி கட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வாஜ்பேயி காலத்தில் சிறு தொழில்கள் சுங்கத் தீர்வை காரணமாக பாதிக்கப்பட்டபோது, அவர் குப்தா கமிட்டியை அமைத்தார். அதன் பரிந்துரையின் பேரில் வரிகள் குறைக்கப்பட்டன. ஆனால், இப்போது ஏராளமான நிறுவனங்கள் திவாலாவாகி விட்டன.

தொழிற்பேட்டையில் உள்ள நலிந்த நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள 526 பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் பொறியியல் பட்டதாரிகளைப் பணிய மர்த்த முடியவில்லை. ஏனெனில், அவர்கள் அழுக் குப்படாத பணிகளையே  விரும்புகின்றனர். சிலர் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகிவிடுகின்றனர். சிலர் வேறு தொழில்களுக்கு மாறி விடுகின்றனர்'' என்று சரக  அலுவலர் ஒருவர் கூறியுள்ளார். - இவ்வாறு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner