எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜெயங்கொண்டம் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்  தமிழர் தலைவர் வேதனை

ஜெயங்கொண்டம், ஏப்.6 மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு  மண்டல தலைவர் சி.காம ராசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் வரவேற்புரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது:

அவர்களின் கூட்டணியில் கொள்கை இல்லை. இங்கே நமது கூட்டணியில் கொள்கை இருக்கிறது.மேலும் அது கொத்தடிமை கூட்டணி.இன்றைக்கு நாட்டை அடகு வைத்து விட்டார்கள்.ஆவியோடு பேசுங்கள் என்று உத்தரவிட்டார்கள். ஆனால், ஆவியும் வேண்டாம் காவியும் வேண்டாம். மோடியா? லேடியா?' என்று கேட்டார்  அம்மையார் ஜெயலலிதா. ஆனால் அவரது அமைச்சர் ஒருவர் மோடி எங்கள் டாடி என்கிறாரே? அதேபோல நோட்டாவோடு போட்டி போட்டவர்கள் இன்றைக்கு நோட்டை கொடுத்து ஒட்டு வாங்கலாம் என்று பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டை மட்டுமல்ல, அ.தி.மு.க.கட்சியையும் மீட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.வெளிநாட்டுக்காரர் ஒருவர் சொன்னார் ஆம்புலன்ஸில் நாங்கள் நோயாளியை படுக்க வைத்து கொண்டு செல்கிறோம்.ஆனால் நீங்களோ நோட்டுக் கட்டை படுக்க வைத்து கொண்டு போகிறீர்களே! என்று கூறி ஏளனம் செய்கிறார்கள். இந்த நிலையெல்லாம் மாற வேண்டும். இந்த தொகுதியில் போட்டியிடும் நண்பர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.பானை என்பது ஆர்க்கானிக் வடிவம் தான்.இன்றைக்கு சமையலில் பானையைதான் தொலைக்காட்சியில் சமையல் குறிப்புகள் நிகழ்வில் காட்டுகிறார்கள்.எனவே பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

பரப்புரை கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், தி.மு.க.மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, வி.சி.க. மாவட்ட செயலாளர் பெ.மு.செல்வநம்பி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் ரெ.மணிவேல், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் கு.சின்னப்பா, மாவட்ட தி.க.செயலாளர் சிந்தனைச் செல்வன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா, மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட அமைப்பாளர் இரத்தின.ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் இரா.திலீபன், நகர தலைவர் வை.செல்வராசு, நகர செயலாளர் கே.எம்.சேகர்,மண்டல இளைஞரணி செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திகேயன், மீன்சுருட்டி நகர தலைவர் இராஜா.அசோகன், மண்டல மாணவரணி செயலாளர் கா.பெரியார் செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மா.கருணாநிதி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner