எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அது  பதவிக்கான கூட்டணி

* இது மக்கள் உதவிக்கான கூட்டணி

தமிழர் தலைவர் உரை வீச்சு

மயிலாடுதுறை, ஏப்.7 விவசாயிகளை வஞ்சித்து வரும் அதிமுக -& பிஜேபி கூட்டணியைத் தோற்கடிப்பீர் என்ற வேண்டுகோளை விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களை ஆதரித்து நேற்று (6.4.2019) மயிலாடுதுறை  சின்னக்கடை வீதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் வரவேற்புரை வழங்கினார். கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில் குறிப்பிட்டதாவது:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தொகுதியில் உதயசூரியன் போட்டியிடுகிறது. முதலில் அதற்காக தி.மு.க. தலைவர் தளபதி அவர்களுக்குப் பாராட்டுகள். இந்த தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே உள்ளது பதவிக்கான கூட்டணி. இங்கே அமைந்துள்ள நமது கூட்டணி மக்கள் உதவிக்கான கூட்டணி.

இப்போது காவியும் & ஆவியும்  கூட்டணி அமைத்து உள்ளார்கள். இது திராவிட பூமிஅல்லவா! பெரியார் மண்ணல்லவா!  சமூகநீதி மண்ணல்லவா! மோடியின் ஆட்சி மே 23க்குப் பிறகு இந்தியாவில் இருக்காது.

இந்தத் தேர்தல் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய தேர்தல். எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்துகிறார்கள்.

வருமானவரித் துறையை கையில் வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறை ஓட்டுப் போடுங்கள், இனிமேல் தேர்தலே வராது என்று மோடியை பற்றி அவர்களின் கட்சித் தலைவர்களே சொல்கிறார்கள். இங்கே கொத்தடிமைகள் ஆட்சி கோட்டையில் இருக்கிறது. பா.ஜ.க.தென்னாட்டில் காலூன்ற முடிய வில்லை. வடநாட்டிலும் தோல்வியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே மட்டும் தான் மோடிக்குக் கருப்புக்கொடி காட்டுகிறார்கள் என்று நினைக்காதீர்கள்.  அசாமிலும் காட்டத் தொடங்கி விட் டார்கள் மக்கள். எனவே  இங்கே கணக்குத் திறக்க வேண்டும் என்பதற்காகத்தான் தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.

விவசாயிகளை வாழ வைத்தனரா?

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும் பிரதமர்தானே? புயலால் பாதித்த போது ஒரு அனுதாப வார்த்தை கூடக் கூறவில்லை; ஆறுதலாக ஒரு அறிக்கை தந்தாரா? ரூபாய் 15000 கோடி நிவாரணம் கேட்டதற்கு மத்திய அரசு வழங்கிய தொகை வெறும் ரூ.353 கோடி. இதற்கு பிறகும் எங்களுக்கு ஒத்துழைக்கிறார் என்று சொல்கிறீர்களே! விவசாயிகளை வாழ விடவில்லை. காவிரி ஆணையத்திற்கு ஒரு நிரந்தர  தலைவர் உண்டா? நமது மாநிலத்தின் விவசாயத் துறை அமைச்சர் வந்தால் நீங்கள் கேள்வி கேளுங்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாற்பதுக்கும் நாற்பது வெற்றி நமக்குத்தான்.எனவே இந்தத் தொகுதியில் திருவிடைமருதூர் செ.ராமலிங்கம் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றோர்

பரப்புரைக் கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இரவிச்சந்திரன், மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜெகவீரபாண்டியன், குத்தாலம் அன்பழகன், காங்கிரசு கட்சி மாவட்ட துணைத் தலைவர் அன்பானந்தம், தி.மு.க.நகர செயலாளர் செல்வராஜ், வி.தொ.கட்சி மாவட்ட செயலாளர் சேகர், இ.ஜ.கட்சி மாவட்ட தலைவர் ஜெயராமன், தமிழ்நாடு விவசாய கட்சி மாவட்ட பொறுப்பாளர் முருகன், மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் மூர்த்தி, தி.மு.க.ஒன்றிய செயலாளர் இளையபெருமாள்,  மண்டல கழக செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.மோகன், மாவட்டக் கழகச்  செயலாளர் வீர.கோவிந்த ராசு,அரியலூர் மண்டல கழகத் தலைவர் சி.காமராஜ், நாகை மாவட்டக் கழகத்  தலைவர் நெப்போலியன், மாவட்ட செயலாளர் புபேஷ் குப்தா, மயிலாடுதுறை பொறுப்பாளர்கள் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன், முத்து, இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் அரங்க. நாகரெத்தினம் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner