எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"மக்களாட்சி காப்போம்!  மக்கள் நலன் காப்போம்!''

கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத்துறையினர் 274 பேர் கையொப்பமிட்டுக் கூட்டறிக்கை

சென்னை, ஏப்.12 மக்களாட்சிக் கலாச்சாரத்தின் வேரினை வீழ்த்தும், கலைஞர்களை, எழுத்தாளர்களைப் படுகொலை செய்யும், உண்ணும் உணவில்கூட மதவாதத்தைத் திணிக்கும் பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாடு தாங்காது; எனவே, வரும் தேர்தலில் பி.ஜே.பி. - அதன் கூட்டணி கட்சிகளைத் தோற்கடிப்பீர் என்று கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுத் துறையினர் 274 பேர் சென்னையில் கூடி கையொப்பமிட்டு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

11.4.2019 வியாழன் மாலை சென்னை அடையாறு டி.என்.இராசரத்தினம் அரங்கில் "ஜனநாயகத்தைக் காப்போம்!'' என்ற பொருளில் கலைஞர்கள், எழுத்தா ளர்கள், அறிவுத் துறையினர் பங்கேற்று கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை வருமாறு:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னெப் போதும் காணாத ஒரு நெருக்கடியை மக்கள் முன்னே தோற்றுவித்துள்ளது. பொதுவாக, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்யும் போது, குடிமக்கள் தங்கள் அரசியல் தேர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே சார்புகளற்ற பொது மன்றக் கலாசாரத்தை வளர்க்க உதவும்.

ஆனால், கடந்த அய்ந்தாண்டுகளாக மத்தியில் ஆளும் கட்சி நம் நாட்டின் மக்களாட்சி கலாச்சாரத்தின் அடிப்படைகளையே ஆபத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில், மக்களாட்சியின் தூண்களான நிறுவனங்க ளெல்லாம் மமதையுடன் சிதைக்கப்படும் நிலையில், சமுகம் முழுவதும் அச்சமும் வெறுப்பும் பரவும் நிலையில், குடிமக்கள் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக  மக்களாட்சியின் இருப்பைக் காக்க  முன்வர வேண்டிய தேவை இருக்கிறது.

கடந்த அய்ந்தாண்டுகளில் நாம் கண்ட காட்சிகள் நம் தேசத்திற்குப் புதியவை; தாங்கள் உண்ணும் உணவிற்காகவும், வழிபடும் கடவுளுக்காகவும்' சாதாரண மக்கள், அதிகாரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட கும்பல் களால் கொல்லப்பட்டார்கள்; மூளைச்சலவை செய்யப்பட்ட குண்டர்களால் அறிஞர்களும், எழுத்தா ளர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்; இந்தக் கொலைகளால்வெகுண்டஎழுத்தாளர்களும், கலைஞர்களும் அரசிடமிருந்து, அரசு சார் அமைப்பு களிலிருந்து தாங்கள் பெற்ற பட்டங்களையும், விருதுகளையும் திருப்பியளித்தார்கள்; அரசின் கலாச்சார அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் தகுதியற்ற நபர்கள் அரசியல் சார்புகளுக்காகப் புகுத்தப்பட்டு அவை சீரழக்கப்பட்டன; வரலாறு காணாத அளவில் மாநில ஆட்சியில் மத்திய அரசு தலையிடுவதும், தங்கள் மேலாதிக்கத்தை திணிப்பதும் நிகழ்ந்தன; சுற்றுச் சூழலைக் காக்க, போராடிய பொதுமக்கள் காலனீய காலத்து ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட அதிக குரூரத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்; ஒரு சில நபர்களின் தான்தோன்றித்தனமான எதேச்சதிகார முடிவுகளால் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி ஏழை மக்கள் அவதியுற்றார்கள்; சிறு குறு தொழில்களும் வியாபாரமும் நசிந்தன; மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் பதவி விலகினார்கள்; உளவுத்துறை தலைமைக்குள் இருக்கும் விரிசல்கள் வெளிப்படையாக வெடித்து அலங்கோலமான காட்சிகள் அரங்கேறின; உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நீதிமன்றத்தின் செயல்முறையை பொதுவெளியில் கண்டித்தார்கள்; அரசு இயந்திரத்திலும், ஊடகத்திலும், மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வாடிக்கையாகின.

ஜனநாயகத்தைக் காப்போம் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுத் துறையினர்

உலகின் அய்ந்தில் ஒரு பங்கு மக்கள்தொகையும், அளப்பரிய பன்மையும், கலாச்சார மூலங்களும் கொண்ட, மக்களாட்சிப் பாதையில் 1950 முதல் சமரசமின்றிப் பயணிக்கும் பெருமைக்குரிய இந்த நாட்டின் குடிமக்கள் இதுவரைவளர்த்தெடுக்கப்பட்டமக்களாட்சியின் வேர்கள்அழிக்கப்படுவதைஅக்கறையின்றிபார்த்துக் கொண் டிருக்க முடியாது. நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றால் இனி தேர்தல்களே நடக்காது என ஆளுங்கட்சி எம்.பி., ஒருவரே சூளுரைப்பதையும் பார்க்கிறோம்.

மேற்சொன்ன அவலங்களுக்குக் காரணமாகிய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி  மத்தியில் மீண்டும் அமைய  அனுமதிக்கவேண்டாம்  என தமிழக எழுத் தாளர்களும், கலைஞர்களும், குடிமக்களுமாகிய நாங்கள்  மக்களாட்சி மாண்புகளில் நம்பிக்கையுள்ள வாக்காளர்களை  வேண்டுகிறோம்.   அதன்பொருட்டு எதிர்வரும் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கும், அதன் கூட்டணி   கட்சிகளுக்கும்  வாக்களிக்க  வேண்டாம்  எனக் கேட்டுக்கொள்கிறோம்.   இனி வரும்காலங்களில் ஆட்சியாளர்கள் மக்களாட்சி நெறிமுறைகளை மீறா திருக்க, நமது  உரிமைகளை மறுக்காதிருக்க நாம் குரல் கொடுப்போம்.

நன்றி!

இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கையொப்பமிட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு

மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் எழுத்தாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் ஆகாச முத்து, ஊடகவியலாளர் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன், பெங்களூரு எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன், எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் அஜயன்பாலா, வழக்குரைஞர் அஜீதா, திரைப்பட இயக்குநர் அமீர், கவிஞர் அமிர்தம் சூர்யா, ஆவணப்பட இயக்குநர் ஆ.பி.அமுதன், திரைப்பட இயக்குநர் ஆனந்த் குமரேசன்,  சமுக ஆய் வாளர் எஸ்.ஆனந்தி, பொள்ளாச்சி எதிர்பதிப்பகம் அனுஷ்கான், எழுத்தாளர் அப்பண்ணசாமி, கவிஞர் அரங்க மல்லிகா, கல்வியாளர் வீ.அரசு, எழுத்தாளர் டி.அய்.அரவிந்தன், பாடலாசிரியர் பாடகர் அறிவு, ஊடகவியலாளர் திரைப்பட இயக்குநர் அருள் எழிலன், வழக்குரைஞர் அருள்மொழி, செயற்பாட்டாளர் அருண் தமிழ் ஸ்டுடியோ, பாடகர், ஃபுளூட் கலைஞர் அருண்மொழி, விழுப்புரம் எழுத்தாளர் அசதா, ஊடகவியலாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் அதியன் ஆதிரை, எழுத்தாளர் பாக்கியம் சங்கர், ஃபிரீ பிரஸ் பவுண்டேஷன் பாலசுப்பிரமணியம் தர்ம லிங்கம், எழுத்தாளர் பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், ஒசூர், சிறீவில்லிபுத்தூர் கவிஞர் பால்ராஜ் கு., ஊடகவியலாளர் பாரதி தம்பி, எழுத்தாளர்  பவா.செல்லதுரை திருவண் ணாமலை, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, கல்வியாளர் பவானி ராமன், திரைப்பட இயக்குநர் பிரம்மா, ஊடகவியலாளர் பிருந்தா, எழுத்தாளர் சி.மோகன்,

எழுத்தாளர் சந்திரா, திருநெல்வேலி ஓவியர் சந்துரு, எழுத்தாளர் சாரு நிவேதிதா, திரைப்பட இயக்குநர் சோழன் மு.களஞ்சியம், ஊடகவியலாளர் எஸ்.தயாளன், எழுத்தாளர் தீபா லட்சுமி, ஒளிப்பதிவாளர் தீபக் பகவத், கல்வியாளர் தீபக் மேத்தா, குழந்தைகள் உரிமைகளுக்கான செயற் பாட்டாளர் தேவநேயன், ஊடகவியலாளர் தளவாய் சுந்தரம், எழுத்தாளர் தமயந்தி, ஆவணப்பட இயக்குநர் மதுரை  திவ்யபாரதி, ஊடகவியலாளர் துரை அரசு, புதுடில்லி கல்வியாளர்  தர்பா சட்டோராஜ், ஊடகவியலாளர் இளமதி சாய்ராம், எழுத்தாளர் இருகூர் இளஞ்சேரல், மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், செயற் பாட்டாளர் மருத்துவர் நா.எழிலன், மொழிபெயர்ப்பாளர் ஆரணி ஜி.குப்புசாமி, ஊடகவியலாளர் கவாஸ்கர், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் கீதா நாராயணன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், ஊடகவியலாளர் கோவி.லெனின், ஊடகவியலாளர் குணவதி, வேலூர் எழுத்தாளர் எச்.பீர் முகம்மத், ஊடகவியலாளர் ஹாசீப், கவிஞர் இளம்பிறை, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், கவிஞர் இருகூர் இளவேனில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, ஊடகவியலாளர் இனியவன், எழுத்தாளர், இசைக்கலைஞர் பேராசிரியர் இரா.பிரபாகர், ஊடகவிய லாளர் இரா.தமிழ்க்கனல், கவிஞர் இருகூர் இசை, கவிஞர் அய்யப்பா மாதவன், மூத்த ஊடகவியலாளர் இரா.ஜவகர், ஊடகவியலாளர் ஜயாபாதுரி, மொழிபெயர்ப்பாளர் திருவண்ணாமலை கே.வி.ஜெயசிறீ, எழுத்தாளர் , மூதத ஊடகவியலாளர் ஜீவசுந்தரி, புதுச்சேரி எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம், ஊடகவியலாளர் ஜெயராணி, கோயம்புத்தூர் கவிஞர் ஜான்சுந்தர், அவினாசி எழுத்தாளர் கே.என்.செந்தில், புதுச்சேரி ஆய்வாளர் கா.பஞ்சாங்கம், கண்டராச்சிபுரம் கவிஞர் காலபைரவன், இடைக்கால் கவிஞர் கலாப்ரியா, ஊடகவியலாளர் கமலா, திரைப்பட இயக்குநர் கமலக்கண்ணன், கண்டராச்சிபுரம் கவிஞர் கண்டராதித்தன், நாகர்கோவில் காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சுந்தரம், எழுத்தாளர் கரண் கார்க்கி, விழுப்புரம் கவிஞர் கரிகாலன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், கார்ட்டூனிஸ்ட் கதிர், திரைப்பட இயக்குநர் கவின் ஆண்டனி, எழுத்தாளர் கவின்மலர், சின்னத்திரை, திரைப்பட இயக்குநர், கவிஞர் கவிதா பாரதி, ஊடகவியலாளர் கவிதா கஜேந்திரன், ஊடக வியலாளர் கவிதா முரளீதரன், எழுத்தாளர் கி.ராஜநாரா யணன், எழுத்தாளர் கோணங்கி, நாகர்கோவில் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் மு.யூசுப், திருவண்ணாமலை எழுத்தாளர் குமார் அம்பாயிரம், மத்த ஊடகவியலாளர் அ.குமரேசன், கவிஞர் குட்டி ரேவதி, கல்வியாளர் பேராசிரியர்  லட்சுமணன்,  எழுத்தாளர் லட்சுமி, கவிஞர் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி, கவிஞர் லிபி ஆரண்யா, சுவிட்சர்லாந்து அரங்க கலைஞர் லிவிங் ஸ்மைல் வித்யா, புலம் பதிப்பகம் லோகநாதன், பெருந்துறை கவிஞர் மா.மதிவாணன், ராஜபாளையம் மொழிபெயர்ப்பாளர் மதுமிதா, ஊடகவியலாளர் மககேஸ்வரி, புதுடில்லி கவிஞர் மாலதி மைத்ரி, ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத் தினம், அரங்க செயற்பாட்டாளர் ஏ.மங்கை, ஊடகவியலாளர் மணிகண்டன், திரைப்பட நடிகர் மணிகண்டன், கவிஞர் ஊடகவியலாளர் மண்குதிரை,புதுச்சேரி எழுத்தாளர் மனோ மோகன், ஈரோடு புதுஎழுத்து சிற்றிதழ் ஆசிரியர்  மனோன்மணி, புதுச்சேரி எழுத்தாளர் மனுஷி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், புதுடில்லி கல்வியாளர் மிதுல்பாரா, ஈரோடு கவிஞர் மோகனரங்கன்,கோவை எழுத்தாளர் கலைஞர் மோனிகா, தஞ்சாவூர் நாடகாசிரியர் மு.ராமசாமி, கோவில்பட்டி நாடகாசிரியர் முருகபூபதி, வேலூர் எழுத்தாளர் ஜி.முருகன், ஜீதருப்பூர் எழுத்தாளர் இரா.முருகவேல், மதுரை இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், மதுரை எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஊடகவியலாளர் நா.வினோத்குமார், ஆவணப்பட இயக்குநர் நச்சி, எழுத்தாளர் நச்சியல் சுகந்தில், கார்ட்டூனிஸ்ட் நன்மாறன், மொழிபெயர்ப்பாளர் ஆரணி நர்மதா குப்புசாமி, கோவை கவிஞர் நறுமுகை தேவி, நாகப்பட்டினம் கலைஞர் நடராஜன், திரைப்பட இயக்குநர் நவீன்,  கருப்புபிரதிகள் பதிப்பகம் நீலகண்டன், ஊடகவியலாளர் நீரை  மகேந்திரன், வேலூர் எழுத்தாளர் நீதிமணி, ஊடகவியலாளர் பா.அசோக், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பா.விஜய், கோவை எழுத்தாளர் பாமரன், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்  பழநிபாரதி, வேலூர் கவிஞர் தி.பரமேஸ்வரி, திருப்பத்தூர் திரைத்துறை பார்த்திபராஜா, திரைப்பட நடிகர் பாவேல், ஊடகவியலாளர் பீர்முகம்மத், ஒசூர் கவிஞர் நா.பெரியசாமி, பழனி கவிஞர் பெரு.விஷ்ணுகுமார், அமெரிக்கா கவிஞர் பெருந்தேவி, மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் பூங்குழலி, புதுச்சேரி எழுத்தாளர் பொப்பு, கும்பகோணம் எழுத்தாளர் பொதிய வேற்பன், மதுரை எழுத்தாளர் ஜெ.பிரபாகரன், புதுக்கோட்டை பிரகதீஸ்வரன், நாடகாசிரியர் பிரளயன், திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன், புதுடில்லி எழுத்தாளர் பிரேம், நாகப்பட்டினம் எழுத்தாளர் பிரேமா ரேவதி, திரைப்பட இயக்குநர் பிரின்சு என்னாரெசு பெரியார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, அய்தராபாத்  அரங்க கலைஞர் பிரீதம் சக்ரவர்த்தி, மூன்றாம் பாலினத்தவருக்கான செயற்பாட்டாளர் பிரியாபாபு, மும்பை எழுத்தாளர் புதிய மாதவி, மதுரை மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆர்.முரளி, பெங்களூரு ஊடகவியலாளர் ரா.வினோத், திரைப்பட இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில், புதுடில்லி எழுத்தாளர் ராஜன்குறை, ஊடகவியலாளர் ராஜா சங்கீதன், நாகல்கோவில் கவிஞர் என்.டி. ராஜ்குமார், எழுத்தாளர் ராமானுஜம், புதுச்சேரி எழுத்தாளர் ரமேஷ் பிரேதன், திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், மதுரை வாசல் பதிப்பகம் ரத்னா விஜயன், கவிஞர் ரவிசுப்பிரமணியம், புதுடில்லி கல்வியாளர் ரவீந்திரன் சிறீ ராமச்சந்திரன், புதுடில்லி கல்வியாளர் ரீதா கோத்தாரி, புதுடில்லி சமுக தொண்டர் ரோச்சனா மித்ரா, திரைப்பட நடிகை  ரோகிணி, நாகல்கோவில் செயற்பாட்டாளர் எஸ்.பி.உதயகுமாரன், கோத்தகிரி எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, கவிஞர் சபரிநாதன், சேலம் கவிஞர் சாகிப்கிரண், கவிஞர் சல்மா, மதுரை கவிஞர் சமயவேல், சாம்ராஜ் எழுத்தாளர் சென்னை,  சாம்சன் கவிஞர் இயக்குனர் கோவை, சம்சுதீர் ஹீரா எழுத்தாளர் கோவை, சாமுவேல் ராஜ் செயற்பாட்டாளர் சென்னை, சந்தான மூர்த்தி எழுத்தாளர் திரைக்கலைஞர் சென்னை, சரஸ்வதி பேராசிரியர் எழுத்தாளர் சென்னை, சரவணா ராஜா செயற்பாடாளர் சென்னை, சாரோ லாமா பதிப்பாளர் பாதரசம் சென்னை, சரோஜா ஊடகவியலாளர் சென்னை  சசி திரைப்பட இயக்குனர் சென்னை, சத்தீஷ் ஜே ஊடக வியாளர் சென்னை  சலீமா பிரியதர்ஷன் கவிஞர் சென்னை, செந்தளிர் ஊடகவியாளர் சென்னை, செந்தில் குமார் ஊடகவியாளர் சென்னை, செந்தில் நாதர் பதிப்பாளர் பரிசல் சென்னை  ஷாஜகான் ஆர் ஊடகவியாளர் டில்லி  ஷாலினி மரியா லாரன்ஸ் சமூக செயற்பாட்டாளர் சென்னை, ஷான் சரவணக்குமார் ஊடகவி யாளர் சென்னை, சங்கர் ராம சுப்பிரமணியன் கவிஞர் சென்னை, ஷீலு மகளிர் உரிமை செயல்பாட்டாளர் சென்னை, சிவராமன் மருத்துவர் சூற்றுப்புறச்சூழல் ஆர்வலர் சென்னை, சிறீராம் எழுத்தாளர் சென்னை, சிறீஜித் சுந்தரம், திரை இயக்குனர் சென்னை, சிறீகுமார் பதிப்பாளர் சென்னை, சிறீநேசன் கவிஞர் சென்னை, சிறீசங்கர் கவிஞர் சென்னை, ஸ்டாலின் ராஜாங்கம் எழுத்தாளர் மதுரை, ஸ்டாலின் சரவணக்குமார் கவிஞர் தஞ்சாவூர், சு.தமிழ் செல்வி எழுத்தாளர் விழுப்புரம், சுபகுணராஜன் எழுத் தாளர் சென்னை, சுசித்திரா ஊடகவியாளர் சென்னை, சுதா ராமலிங்கம் வழக்குரைஞர் சென்னை, சுதிர் செந்தில் கவிஞர் கவின்மலர், சுகந்தி செயற்பாட்டாளர் சென்னை, சுகிர்தா ராணி, கவிஞர் சென்னை, சுகுமாரன் கவிஞர் திருவனந்தபுரம், சுந்தரராஜன் சமூக செயற்பாட்டாளர் சென்னை, சுரேஷ் ஊடகவியாளர் சென்னை, சுசீலா ஆனந்த் வழக்குரைஞர் சமூக செயற்பாட்டாளர் சென்னை, சுவர்க்கஜோதி கல்வியாளர் டில்லி, தமிழ் மகன் எழுத்தாளர் சென்னை, தமிழ் செல்வன் சா எழுத்தாளர் சிவகாசி, தாமிரா திரைப்பட இயக்குனர் சென்னை, தபு சங்கர் இயக்குனர் சென்னை, தராசு சியாம் ஊடகவியாளர் சென்னை, திலகவதி ஜீ எழுத்தாளர் சென்னை, திருச் செந்தாழை எழுத்தாளர் மதுரை, திருமாவேலன் ஊடகவியாளர் சென்னை, மருது ட்ராஸ்கி செயற்பாட்டாளர் சென்னை, உமாமகேஷ்வரன் ஊடகவி யாளர் சென்னை, வானகைதி நேசன் கவிஞர் மதுரை, வண்ணதாசன் எழுத்தாளர் திருநெல்வேலி, வரதன் எழுத்தாளர் மதுரை, வாரணாசி செந்தில்குமார் திரைத்துறை சென்னை, வசந்திதேவி கல்வியாளர் சென்னை, வாசுதேவன் எழுத் தாளர் சென்னை, வேடியப்பன் பதிப்பாளர் டிஸ்கவரி புத்தக நிலையம் சென்னை, வெளிரங்கராஜன் எழுத்தாளர் சென்னை, பா.வெங்கடேசன் எழுத்தாளர் ஓசூர், வெங்கடேஷ் ஆத்ரேயா பொருளாதார நிபுணர் சென்னை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி திரை இயக் குனர் ஆய்வாளர் அய்தராபாத், வெற்றிமாறன் திரை இயக்குனர் சென்னை, வெற்றி செல்வன் வழக்குரைஞர் சமூக செயற்பாட்டாளர் சென்னை, விக்னேஷ் திரைத் துறை சென்னை, விஜ யானந்த் ஊடகவியாளர் சென்னை, விலாசினி பதிப்பாளர் சென்னை, வின்செண்ட் பவுல் புகைப்படக்கலைஞர் சென்னை, யாழ் சிறீதேவி ஊடகவியாளர் சேலம், யவனிகா சிறீராம் கவிஞர் சின்னாளப்பட்டி, யாழ் ஆதி கவிஞர் ஆம்பூர், யாழினி முனுசாமி எழுத்தாளர் சென்னை, யுகபாரதி பாடலாசிரியர் கவிஞர் சென்னை, யுமா வாசுகி எழுத்தாளர் சென்னை, யுவ கிருஷ்ணா ஊடகவியாளர் சென்னை, டி. எம். கிருஷ்ணா இசைக் கலைஞர் சென்னை, மாரிசெல்வராஜ் நாடகக் கலைஞர், ரெஜின் திரைக் கலைஞர் சென்னை விஜய்சங்கர் மூத்த ஊடக வியாளர், சென்னை, விடுதலை ராஜேந்திரன் மூத்த ஊடகவியாளர் செயற்பாட்டாளர் சென்னை, சுந்தர பாரதி மணியன் எழுத்தாளர் திருப்பூர், கோ.சுகுமாரன் மனித உரிமை ஆர்வலர் புதுச்சேரி, பா. துக்கையந்தி எழுத்தாளர் சென்னை, பிருந்தா சேது கவிஞர் சென்னை.

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner