கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 28- மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மக்களுக்குகான பணி என்பதால் இதனை நிறுத்த முடியாது என்று கூறிய நீதிமன்றம் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு நில ஆக்கிரமிப்பு செய்யும் பணி தொடங்கப்பட்டதில் இருந்தே பல கட்டங்களில் எதிர்ப்பு உருவாகி வருகிறது.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி ஜார்ஜ் டவுன் கட்டட உரிமையாளர்கள் நல சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதால் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கு எதிர் மனு தாக்கல் செய்திருந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பொதுமக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் ஆழ்துளைகுழாய் கிணறு, கிணறுகளை மூடவும் அதற்கு நிவாரணமாக குடும்பங்களுக்கு வேறு கிணறுகளை அமைக்க ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் கே. சர்மா, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இது மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்பதால் அதற்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#2 tamilvanan 2012-01-31 08:36
இது என்ன கேள்வி? சில சமயம் பொது நன்மைக்காக சில பேரின் நலம் பாதிக்கப்படுவது உண்மையே. அதற்கு என்ன செய்வது. எடுத்துகாட்டாக ஒரு அணை கட்ட, பல பேர் நிலங்களை கைப்பற்ற வேண்டி இருக்கிறதே. இது நடை முறைதான் எல்ல அரசிலுமே. அது தி மு க ஆக இருந்தாலும், காங்கிரஸ் ஆக இருந்தாலும், கம்யூனிஸ்ட் ஆக இருந்தாலும் அப்படித்தான்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 Kathiravan Ponmannan 2012-01-28 15:25
மக்களுக்காக திட்டம் என்றால் மக்களை விரட்டியடித்து தான் செயல்படுத்த வேண்டுமா?? கிணறுகளை மூட வேண்டுமா??? மக்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து அவர்கள் வாயை மூடவைக்க வேண்டுமா???? இது எப்படி சரியாகும்????? வேண்டுமென்றால் வேறு மாற்றுவழிக் கண்டு அதன் வழி திட்டத்தைச் செயல்படுத்தலாமே ? இன்னும் என்னென்ன தொல்லைகளைத் தரப்போகிறதோ இந்த அரசும், அரசியல் பொறுக்கித் தின்னி ஞமலிகளும்?? அந்தோ!!!!!!!!!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்