
புதுடில்லி, பிப்.4- 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஜனதா தள தலைவர் சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை நீதிபதி முன் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்தார். இதில், ப.சிதம்பரம் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.இராசாவுடனான உரையாடல் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான தீர்ப்பை இன்று மதியம் 12:30 மணிக்கு வழங்குமென்று டில்லி சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, இரு நாள்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கடந்த 2008 ஜனவரி மாதத்தில் இருந்து தொலைத்தொடர்பு அமைச்சகம் வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ததது குறிப்பிடத்தக்கது.