
- ஏ.கே.அந்தோணி
கொச்சி, பிப்.4- மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வயது விவகாரம் குறித்தும், இது தொடர்பாக பிரதமருடன் நடத்திய சந்திப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தோணி பதிலளித்தபோது,
இந்த விவகாரம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதனால் ஊடகங்கள் இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இராணுவ தளபதி வி.கே. சிங் நிதியமைச்சர் பிராணப் முகர்ஜியை சந்தித்தார். இச்சந்திப்பின் விவரம் குறித்து பதிலளிக்க பிராணப் முகர்ஜி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.