கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுமார் 9 லட்சம் பக்தர்கள் திரண்டிருந்த ஒரு கோவில் ஊரில் (ஜுனாகத் நகர் கிர்னார் மலையடிவாரம்) திடீ ரென்று இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட பெரும் சப்தம் கேட்டு, மிரண்டு திடீரென ஏற்பட்ட நெரிசலால் அங்கு திருவிழாவிற்கு வந்தவர்களில் 6 பேர் (பக்தர்கள்) பலியாயினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்து, அனைவரது ஆழ்ந்த அனுதாபங்களையும் பெற்ற வண்ணம் உள்ளது!

சிவராத்திரிக்காக விருதுநகருக்குச் சென்று திரும்பும்போது கார் - வேன் மோதி பலி என்ற செய்தி இன்று காலை தொலைக்காட்சிகளில் ஒளிபரப் பாயின.

 

கடவுளர்களை தரிசிக்க, திருப்பதி, சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் விபத்தினாலும் மற்றும் நெரி சலினாலும் இறப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்தபாடே இல்லை! மாறாக, எண்ணிக்கை கூடிக் கொண்டே உள்ளது!

சபரிமலை விபத்து ஒரு நீதி விசாரணைக்கே அவசியப்பட்டது!

இந்தக் கடவுள்களை கருணையே வடிவானவன்; எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அது உண்மையானால், இப்படிப் பட்ட நிகழ்வுகள் பக்தகோடிகளுக்கு ஏற்படலாமா? உயிர்ச்சேதம் - பலிகள் நடைபெறலாமா?
புயல்கள், பூகம்பங்கள், சுனாமிகள் - அதனால் ஏற்படும் அழிவுகளும், சோகங்களும் அன்றாட அவலச் செய்தியாகி, ஏடுகளை ஆக்கிரமிக்கலாமா?

சிந்தியுங்கள் இளைஞர்களே, பக்தர்களே!

தென் அமெரிக்க ஹோண்டூராஸ் சிறைச்சாலை யில் ஏற்பட்ட கோர தீ விபத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் செத்து மடிந்தனரே - உள்ளத்தை உருக்கும் செயல்கள் கடவுளர்களின் கருணையால் தடுக்கப்பட்டு, மக்கள் காப்பாற்றப் பட்டனரா?
எந்த மதக் கடவுளரும் எந்த பக்தரையும் காப்பாற்றவில்லையே!

தீ அணைப்பு வீரர்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு உடனே விரைந்து வந்து தீயை அணைக்கத் தாமதித்தாலோ, கொண்டுவரும் தீயணைப்புக் கருவிகள் சரியாக வேலை செய்யாமல் பழுதுடன் இருந் தாலோ, அவர்கள்மீது எவ்வளவு புகார் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்கள், ஊடகங்கள் எப்படி வானத் திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள்?

ஆனால், எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முணுமுணுக்கும் பக்த கோடிகளும், கடவுள், மத நம்பிக்கையாளர்களும் இந்த மாதிரி நிகழ்வு களுக்குப் பிறகும் தங்களது கடவுள் நம்பிக்கை அடிப்படையற்ற கற்பனை என்பதை ஏனோ புரிந்து, கடவுள் நம்பிக்கை என்ற வைரஸ் நோயிலிருந்து விடுபட மறுக்கிறார்கள்?
ஆதிமனிதன் - காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில், காற்றை, தீயை, மின்னலை, இடியை, மழையை - வெள்ளத்தை, நோய் சாவினை கடவுள்களாகப் போற்றி பயந்து வணங்கியது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த 21 ஆம் நூற்றாண்டில், புதிய கிரகங்களைக் கண்டறிவது, விண்வெளியில் பயணம் செய்வது ஏவுகணைவிட்டு - விண்கலனை உருவாக்கி விண் வெளிப் பயணம் செய்வது - இவ்வளவு செய்தும் இன்னமும் இந்தப் பலவீனம் - பக்திச் சுரண்டலுக்குப் பலியாகி, பொருளையும் அறிவினையும் இழக்கலாமா?

காஞ்சிபுரம், திருப்பரங்குன்ற அர்ச்சகர்கள் - மகளிரைச் சூறையாடுகின்ற அவலம் கோவில் கருவறைகளிலும், வெளியிலும் நடைபெறுவதன் ஓலத்தின் ஓசை கேட்ட பிறகுமா மணியாட்ட கோவிலுக்கு ஆறறிவு படைத்த மனிதர்கள் போவது?

பக்திப் போதையைத் தெளிவிக்க பகுத்தறிவு வெளிச்சத்தை - பெரியார்தம் சுயமரியாதைச் சூரணத் தைத் தந்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரைவோம், வாரீர்!

- கி.வீரமணி



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#5 Harish K M 2012-02-21 17:06
பக்தி வந்தால் புத்தி போச்சு ... புத்தி வந்தால் பக்தி போச்சு..
அப்டின்னு பெரியார் சும்மாவா சொன்னார்கள்.

இல்லாத கடவுளால் உயிர் சேதம் நிகழ்கிறதே; கடவுள் பக்தர்கள் இறந்தாலும் அவர்களுக்காக கவலைப்படுவது, ஆறுதல் சொல்லுவது கடவுளை நம்பாத நாத்திகர்கள்.

இல்லாத ஒன்றை சொல்லி சொல்லியே நம் மக்களை அறியாமை கடலில் தள்ளுகிறார்களே !

விபத்தை உருவாக்குவதும், விபத்து வராமல் தடுப்பது இரண்டுமே கற்பனையான கடவுள் என்றால், அது கடவுள்தானா ? என்று சிந்தித்துப் பார்க்க சொன்னால் கூட மக்கள் கேட்க தயங்குகிறார்கள் .

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பக்தி போதையில் இருந்து வெளி வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#4 kanesh 2012-02-21 05:18
அவருடைய கருத்தை நான் வர வேற்கிறேன் ...
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#3 kanesh 2012-02-21 05:15
Quoting tamilvanan:
எவ்வளோ சமயங்களில் பெரiய விபத்துக்கள் நடந்தும் உயிர் சேதம் இல்லாமல் தப்பி இருக்கிறார்களே, பல சமயம், விபத்து நடக்காமலும் இருந்து இருக்கிறதே. அப்போது எல்லாம் கடவளுக்கு நீங்கள் நன்றி சொல்லுவதில்லையே .

அவருடைய கருத்தை நானும் வர வரவேற்கிறேன் ....
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#2 pugazhendhi 2012-02-21 03:08
எல்லா சமயங்களிலும் பக்தர்களை காப்பாற்றினால்த ான் அவர் கடவுள்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#1 tamilvanan 2012-02-20 20:48
எவ்வளோ சமயங்களில் பெரiய விபத்துக்கள் நடந்தும் உயிர் சேதம் இல்லாமல் தப்பி இருக்கிறார்களே, பல சமயம், விபத்து நடக்காமலும் இருந்து இருக்கிறதே. அப்போது எல்லாம் கடவளுக்கு நீங்கள் நன்றி சொல்லுவதில்லையே .
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்