தென்பெண்ணையாற்று நீரைத் தடுக்கவும் புதிய அணையாம்!
36 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் கதி என்ன?

கிருஷ்ணகிரி, பிப். 22- காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழ் நாட்டு மக்களின் வயிற் றில் அடித்த கருநாட கம், அடுத்த கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வயிற்றில் அடிக்கும் வண்ணம் தென்பெண்ணையாற்றின் குறுக்கேயும் அணை கட்டும் திட்டத்தை அறி வித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டத்திற்கு தண்ணீர் தரும் தென்பெண்ணையாற்று நீரை தமிழகத்திற்கு வரா மல் தடுக்கும் முயற்சி களில் கருநாடக அரசு ஈடுபட்டுள்ளது. இத னால், தமிழகத்தின் நதி நீர் உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆறு கருநாடக மாநிலம் நந்திமலை தொடரில் ஹொசகோட்டை ஒரத் தூர் வழியாக தமிழகத் தில் கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓசூர் அருகே உள்ள கொடியாளம் அணையை வந்தடை கிறது.
இந்தத் தென் பெண்ணையாற்று நீரால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 36,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கரும்பு, நெல், கேழ்வரகு, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கத் தரிக்காய், வெற்றிலை, வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களும், மலர்வகைகளும் சாகு படி செய்யப்படுகின்றன. ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளின் குடிநீர் தேவையையும் தென்பெண்ணையாறுதான் நிறைவு செய்கிறது.
இந்த நிலையில், தென்பெண்ணையாற்று நீரை தமிழகத்திற்கு வராமல் தடுத்து கரு நாடக எல்லைப் பகுதி யில் உள்ள ஒரத்தூர் ஏரியில் இருந்து மாலுர் வட்டத்திற்கு உள்பட்ட 160 ஏரிகளுக்கு தண் ணீரைத் திறந்துவிடும் புதிய திட்டத்தை கரு நாடக அரசு அறி வித்துள்ளது. இதற்காக கருநாடக அரசு முதல் கட்டமாக ரூ.36 கோடி ஒதுக்கியுள்ளது. இத்தக வலை கருநாடக மாநில அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும், மாலுர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கிருஷ் ணய்யர் செட்டி தெரி வித்துள்ளார்.
ஏற்கெனவே காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதி நீர் பகிர்வு பிரச்சினைகளில் உரிமையை இழந்து வரும் தமிழகம், இத் திட்டம் நிறைவேற்றப் பட்டால், தென் பெண்ணையாற்றின் நீர் உரிமையையும் இழக்கும் அபாயம் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கிருஷ்ணகிரி மாவட்டத் தின் ஒட்டுமொத்த விவ சாய நிலங்களும் பாலை வனமாக மாறும் அவல நிலையும் ஏற்படும்.
ஆகவே, இத்திட் டத்தை கைவிடுமாறு கருநாடக அரசை தமி ழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.