தற்போதைய செய்திகள்

பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!

பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!

சென்னை, செப்.22 பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: குஜராத்தில்... குஜராத் மாநிலத் தலைநகரம் காந்தி நகரில் அமைந்துள்ள குஜராத் மத்திய பல் கலைக்கழகத்தில் தந்தை பெரியார்.......

22 செப்டம்பர் 2018 13:28:01

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

Image - ‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண

சனி, 22 செப்டம்பர் 2018

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

பாலியல் வன்முறை: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது!

கொல்கத்தா, செப். 21 -மேற்கு வங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல்

வெள்ளி, 21 செப்டம்பர் 2018

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • கழகம்
Save
Cancel
Reset

ஆர்.எஸ்.எஸ். செய்த அருந்தொண்டு? 'அமெரிக்காவுக்கும் ஜாதியை கொண்டு வந்துவிட்டனர்'

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கண்டனம்

நியூயார்க், செப்.11 இந்திய சமூகம் ஜாதியச் சமூகமாக இருக்கிறது. இந்தியர்கள் எங்கே சென்றாலும் ஜாதியையும் தூக்கிக் கொண்டே சென்றுவிடுவார்கள். பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலும், தங்களின் ஜாதிய பகுமானத்தை அவர் கள் விடுவதில்லை. இதன்மீதுதான் அமெரிக்கர்கள் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஜாதி பேதம் கடைப்பிடிக்கும் இந்துக்கள், அதனை தங்கள் நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து, பிரச்சனைகளை உருவாக்கி வருவதாக அவர்களிடமிருந்து குற்றச் சாட்டுக்கள் எழத் துவங்கியுள்ளன.

கென்னத் ஜே கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அமெ ரிக்காவில் இந்தியர்கள் திணித்த ஜாதி என்று கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், அமெரிக்காவிலுள்ள இந்தி யர்கள் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் ஜாதியைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று புள்ளிவிவரமாக எழுதி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர்கள் தேன்மொழி சவுந்தர் ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோளாகக் கொண்டு இந்தக் கட்டுரையை அவர் எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் 3- இல் இரண்டுபட்டியலினஜாதியினர்ஒடுக்கு முறைகளைச்சந்திக்கிறார்கள்;ஏனைய ஜாதி இந்துக்களின் பாகுபாட்டுக்கு ஆளாகிறார்கள்; பள்ளி மாணவர்களும்கூட இந்த பாகுபாட்டுக்கு தப்புவதில்லை; அலுவலகம், வெளியிடங்கள், திருமணம் என அனைத்து விஷயங்களிலும் ஜாதி இந்துக்கள், ஜாதியை- தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர் என்று கென்னத் ஜே கூப்பர் கூறியுள்ளார்.

நிறவேற்றுமைபிரச்சினையில்,அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கடைப்பிடிக் கும்பாஸ்ஸிங் என்று அழைக்கப்படும், மறைந்துவாழும் முறையையே, இங்கு வசிக்கும்பட்டியலினமக்களும்கடைப் பிடிக்கின்றனர்:அதாவது, ஜாதி இந்துக் களிடம் இருந்து அடக்குமுறைகளை தவிர்க்க இவர்கள் தங்கள் ஜாதியை எல்லா இடங்களிலும் மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் உள்ள பட்டியலின மக்கள், ஜாதி இந்துக்களை விட அதிகம் படித்து இருந்தாலும்கூட ஒடுக்குமுறைக்கு தப்பமுடியவில்லை என்கிறார். ஒப்பீட்டளவில், அமெரிக்கா வில் உள்ள இந்தியர்களில் ஜாதி இந் துக்களை விட, பட்டியலின மக்கள் கால் சதவிகிதம் அதிகம் படித்து இருக் கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இவ்வாறு கூறும் கென்னத்ஜே கூப்பர், இதுதான் தங்களுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலும் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்துவந்தனர். அதைத் தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பதுபோலஇடஒதுக்கீடு அளிக் கப்படுகிறது.ஆனால்,அமெரிக்கச்சட் டத்தில் ஜாதியப் பாரபட்சம் குறித் தான வரையறையோ, அதற்கு எதிரான சட்டங்களோ இல்லை. ஆனால், இந்தியர்கள் தங்களின் ஜாதியப் பாகு பாட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு வந்துள்ளதால், அமெரிக்காவிலும் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்தின் அவசியத்தை இக்கட்டுரை மூலம் கென்னத் ஜே கூப்பர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.


இந்நாள்...இந்நாள்...

1938 - தமிழ்நாடு தமிழருக்கே' எனப் பெரியார் முதல் முழக்கம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

  • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
  • மிக சிறப்பு மேலும்...
  • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
  • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
  • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...