தற்போதைய செய்திகள்

திருப்பத்தூரைத் தொடர்ந்து, சென்னை, தாராபுரம், சோமரசம்பேட்டை, காவராப்பட்டில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதா?

திருப்பத்தூரைத் தொடர்ந்து, சென்னை, தாராபுரம், சோமரசம்பேட்டை, காவராப்பட்டில் தந்தை பெரியார் சிலை அவமத…

இதன் பின்னணியில் இருக்கும் எச்.ராஜாவைக் கைது செய்யாதது ஏன்? ஏன்?? சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு ஒரு நீதி - எச். ராஜாவுக்கு வேறு ஒரு நீதியா? "ஒரு குலத்துக்கொரு நீதி என்ற மனுதர்மம்"தான் கோலோச்சுகிறதா? உரத்தநாடு காவராப்பட்டில் பெரியார் சிலைக்கு கயவர்கள் செருப்பு.......

24 செப்டம்பர் 2018 15:44:03

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

Image - தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில்

திங்கள், 24 செப்டம்பர் 2018

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

தந்தைபெரியார் 140ஆவது பிறந்த நாள் இலவச கண் பரிசோதனை முகாம்

குடியாத்தம், செப்.24 குடியாத்தம் புவனேஸ்வரிப் பேட்டை  பள்ளியில் (23.9-.2018) தந்தை பெரியார் அவர்களின்

திங்கள், 24 செப்டம்பர் 2018

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

சத்தியம் - அசத்தியம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சத்தியம் என்பது ஒரு விஷயத்தில் எல்லோ ருக்கும் ஒன்று போலவேபடும் என்று நினைக்கக் கூடியதாய் இல்லை. நாம் சத்தியமென்று கருதுவது மற்றொருவன் அசத்தியமென்று கருத உரிமையுடைதேயாகும். அன்றியும் சத்தியம் என்று ஒரு மனிதனுக்குப் பட்டதெல்லாம் உண்மையானதும், நியாயமானதும் என்று கருதி விடவும் முடியாது.

(பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.37)


'விடுதலை'க்கு ஆதரவு தருக!

"இது மக்களை நடத்திச் செல்லும் பத்திரிகையே ஒழிய - மக்கள் இஷ்டப்படி நடக்கும் பத்திரிகை அல்ல; எந்த நாட்டிலும் நாட்டு நன்மைக்கோ, மனிதக் கூட்டத்தின் நன்மைக்கோ உழைக்கும் பத்திரிகை எதுவும் மக்களை நடத்திச் செல்லுவதிலேயே கருத்தும், கவலையும், துணிவும் கொண்டு இருக்குமே ஒழிய மக்கள் பின் செல்லுவதில் - கருத்துள்ள பத்திரிகையாக இருந்து வராது.

ஒரு பத்திரிகையானது - தான் மக்களுக்காக வெளியிடும் கருத்துக்களிலோ, இடும் கட்டளை களிலோ மக்கள் மனம் எப்படி இருக்குமோ என்று மயக்கம் கொண்டால் அது மக்களை நடத்தும் பத்திரிகைகளுக்கு ஏற்ற குணமாகாது. எனவே 'விடுதலை' இனியும் தன் கருத்தை எந்தத் துறை யிலும் கூடுமானவரை தைரியமாகவும், தாராள மாகவும் வெளியிட்டு வரும் என்பதை வாசகர்கள் நம்பலாம்.

'விடுதலை' தான் வெளியிடும் கருத்துக்கள் உண்மையானவை, நேர்மையானவை, அவசிய மானவை என்று நம்புவதால் அதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அதற்கு நியாயமிருக்கிறது. 'விடுதலை'யினது உழைப்பின் முக்கிய நோக்கம் மக்கள் சமுதாயத் துறையில், சமயத் துறையில், தன்மானமற்று கீழ்நிலையில் இருப்ப திலிருந்து அவர்களைக் கை தூக்கிவிட வேண்டும் என்பதேயாகும். இத்துறையில் தொண்டாற்ற முற் படுபவருக்குத் தொல்லை அதிகம் என்பது யாவரும் அறிந்ததே. அதனாலேயே அத்துறையில் தொண் டாற்ற ஆட்களும், பத்திரிகைகளும் மிகமிக அரிதாய் இருக்கிறது.

ஒன்று இரண்டு தலைதூக்கினாலும் அவற்றிற்கு தன் நிலையும் ஆதரவும் ஆயுளும் மிகக் குறை வாகவே இருந்து விடுகிறது.

நோயாளி நாளை இறப்பது உறுதி. ஆனாலும் முடிவு வரை முயற்சிப்பது கருத்துள்ள வைத்தி யர்களின் இயல்பு போன்று 'விடுதலை'க்கு எவ்வளவு தான் ஆதரவு குறைவாயிருந்தாலும், ஆயுள் குறைவாய் இருப்பதானாலும் உள்ள வரை முயன்று பார்ப்போம் என்ற ஊக்கத்தாலேயே துணிந்து பல தொல்லைகளிடையேயும், பெரு நஷ்டத்திற்கிடையே யும் வெளிவருகிறது.

'விடுதலை' தொண்டில் உண்மை ஆர்வமும், ஆற்றலுமுள்ளவர்கள் 'விடுதலை'யை ஆதர வளித்து அணைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகின்றோம்."

- தந்தை பெரியார், 'விடுதலை', 8.6.1942

அருமைத் தோழர்களே, மேலே கண்ட அறிக்கை இன்றைக்கு 76 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

தந்தை பெரியாரே "வேண்டிக் கொண்டிருக் கின்றோம்!" என்று கேட்டுக் கொண்டு எழுதியதற்குப் பிறகு புதிதாக நாம் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

'விடுதலை' பரவ வேண்டும் ஒவ்வொரு தமிழன் இல்லத்திலும் அது இடம் பெற்று சுயமரியாதை ஒளியை, பகுத்தறிவு ஒலியைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என நாம் வேண்டு கோள் விடுப்பது, தமிழர் தலைவர் ஆசிரியர் விரும்புவது எந்த நோக்கத்தில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

'விடுதலை' ஏட்டால் பயன் அனுபவிக்காத, பலன் பெறாத ஒரே ஒரு தமிழன் வீட்டைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

கடும் சவால்கள் வட்டமிட்டிருக்கும் இந்தத் தருணத்தில் போர்வாளாம் 'விடுதலை' ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அடக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் வீட்டிலும் தேவை! தேவை!! தேவையே!!

எடுத்துக் கூறுவீர் எல்லோரிடத்திலும்! இலக்கை முடித்துத் தருவீர்! என்று வேண்டிக் கொள்கிறோம். கெடுதலையை முறியடிக்க வேண்டும் "விடுதலை"யே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...