தற்போதைய செய்திகள்

முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்

முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்

மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம்! புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர்; மக்களின் உரிமைகளுக்காக புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு அறவழிப்பட்ட.......

17 பிப்ரவரி 2019 13:08:01

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

Image - தமிழர் தலைவருக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாநில தலைவர் சிவ. வீரமணி தல

ஞாயிறு, 17 பிப்ரவரி 2019

முழுஅடைப்பிற்கு பிறகாவது பிஜேபி அரசு திருந்துமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொருளாதார சீரழிவிற்கும், பெட்ரோல் விலை உயர் விற்கும் மோடி அரசே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதி கரித்து தற்போது தினமும் ஒரு புது உச்சத்தை எட்டி வருகின்றன.   இந்த விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் கலால் வரியை குறைக்கலாம் என எதிர்க் கட்சிகள் தெரிவித்த ஆலோசனையை மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்துக்கு முந்தைய அரசே காரணம் என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதற்காக அருண்ஜெட்லி, தர்மேந்திரப் பிரதான் போன்றவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இவை உண்மையானதல்ல என்பது பொருளாதார வல்லு நர்கள் கூறும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.

"முந்தைய அரசு ஈரானுக்குத் தரவேண்டிய 50,000 கோடி ரூபாயை தராமல் விட்டு விட்டதால் அந்தச்சுமை அனைத்தும் எங்களின் மீது விழுந்துவிட்டது" என்று பெட் ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறினார். ஆனால் இதில் உண்மை இல்லை.

கடந்த 2013-2016 ஆண்டு வரை;யில் ஈரானுக்கு இந்தியா தரவேண்டிய பாக்கி தொகை ரூ. 43000 கோடி ஆகும்.  கடந்த 2013க்கு முன்னால் இந்திய ரூபாயில்  தொகை செலுத்தப்பட்டு  வந்தது.  அதன் பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார கொள்கை காரணமாக செலுத்த முடியாமல் போனது.   இவை அனைத்தும் பாஜக ஆட்சியில் நிகழ்ந்தவை ஆகும். பண்டமாற்றில் டாலர் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் 2015ஆம் ஆண்டு மோடி கையெப்பமிட்டு வந்தார் என்பதை அருண் ஜெட்லி உள்ளிட்ட அனைவரும் மறைத்துவிட்டனர். இன்றைய விலை உயர்விற்கு முக்கிய காரணம் மோடி அமெரிக்காவுடன் இட்ட அந்த ஒப்பந்தமாகும். மோடி முன்பே பொருளாதார வல்லுநர்களைக் கலந்து ஆலோசித்து நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த அளவு கடன் தொகை அதிகரித்திருக்காது.

காங்கிரசு அரசின் மானியங்களால் நிதிநிலை சீர்கெட்டது என்று மோடி பேசிவருகிறார். இது முற்றிலும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யே!

மானியங்கள் அதிகம் அளிப்பதால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுமா - வளர்ச்சி அடையுமா என்பது விவாதத்துக்குரியது. மானியம் அளிப்பது என்பது பலரது துயர் துடைக்கும் செயல் என்றாலும்,  மக்களால் விளைவுகளைப் புரிந்து கொள்ள இயலாத சூழல் உண்டாவது உண்மை தான்.  மானியம் என்பது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே.   இவ்வகையில் முந்தைய அரசு மானியம் அளித்ததை குறை கூறும் தற்போதைய அரசும் மானியங்கள் வழங்குவதை மேலும் அதிகரித்துள்ளது.  இதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என்னும் நோக்கில்  கட்சிகள் செயல்படுகின்றன.

கணக்குத் தணிக்கை அலுவலக அறிக்கையின் படி கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து மானியங்கள் அளிப்பது அதிகரித்து வருகிறது.    உலகின் பல நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.   மேலும் முந்தைய அரசு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடனை அளித்துள்ளது என்று அமித்ஷா போன் றோரும், தமிழக பாஜகவினரும் மேடைக்கு மேடை பொய்களைக் கூறி வருகின்றனர்.  இதை பாஜக ஆதரவு ஊடகங்களும் விளம்பரச் செய்தி போல் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.  சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தின் படி ரூ. 9 லட்சம் வாராக் கடன்களில் ரு. 4 லட்சம் கோடி வாராக்கடன் வசூல் ஆகி உள்ளது.   இதில் முந்தைய அரசு அளித்த அனைத்து வாராக் கடன்களும் திரும்ப வந்துள்ளன  என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த தகவலை நிதி அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் வெளியிட்டுள்ளன.  இதன் மூலம் முந் தைய அரசு அளித்த அனைத்து வாராக்கடன்களும் திரும்ப வந்துள்ளதை பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48ம், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.15.35 கலால் வரி விதிப்பதும் விலை உயர்வுக்குக் காரணமே! "இந்தியாவில் உள்ள தனியார் (ரிலையன்ஸ்) மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் அயல்நாடுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை என்ன விலைக்கு விற்கின்றன" என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட போது இந்திய அரசு, "2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஹாங்காங், மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நாடு களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 32 - 34 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 34 - 36 வரையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டன" என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் உள்நாட்டில் 75 ரூபாயில் தொடங்கி செப் டம்பர் முதல் வாரம் மும்பையில் அதிகபட்சமாக ரூ88  பெட்ரோல் மற்றும் டீசல் ரூ.76 என மத்திய அரசு விற்பனை செய்கிறது.

உள்நாட்டு மக்களை வஞ்சித்து வெளிநாட்டு மக்களை மஞ்சத்தில் அமர்த்துவது ஏன்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...