தற்போதைய செய்திகள்

பெரியார் காண விரும்பிய பேதமற்ற ஒப்புரவு உலகத்தை நோக்கிப் பயணிப்போம்! பயணிப்போம்!!

பெரியார் காண விரும்பிய பேதமற்ற ஒப்புரவு உலகத்தை நோக்கிப் பயணிப்போம்! பயணிப்போம்!!

சமதர்ம - சம ஈவு - சம நோக்கு - சம நுகர்ச்சி - சம அனுபவ - சம நிறை சமுதாயமே திராவிடத் தத்துவம்! தஞ்சை: திராவிடர் கழக மாநில மாநாட்டில் கழகத் தலைவர் வெளியிட்ட திராவிடக் கொள்கை அறிக்கை.......

23 பிப்ரவரி 2019 16:11:04

மேலும்

தமிழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

மக்கள் தொடர்புப் பணிகளுக்காக தேசிய விருதுகள்

சென்னை, பிப்.22 தென்னிந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான - சென்னையைச்

வெள்ளி, 22 பிப்ரவரி 2019

இந்தியா

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

உலகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழகம்

Edit

Amount of short articles:

Amount of articles links:

You can order sections with dragging on list bellow:

 • தமிழகம்
 • இந்தியா
 • உலகம்
 • கழகம்
Save
Cancel
Reset

கழக நிகழ்ச்சிகள்

Image - கழக நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் ஆக

சனி, 23 பிப்ரவரி 2019

அட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருஞ்சட்டை

 

'விஜயபாரதம்‘ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் - எவ்வளவு மொத்துப் பட்டாலும் புத்தி கொள்முதல் பெறுவதாகத் தெரியவில்லை.

அடால்ப் ஹிட்லரின் சீடர்கள் அல்லவா - அதனால் அவர் அமைச்சரவையிலிருந்த அந்தக் கோயல்பல்சின் அசல் நகலாக பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்துக் கொட்டிக் கொண்டே திரிகிறார்கள். இது அவர்களின் கடைந்தெடுத்த பிழைப்பாகவே ஆகி விட்டது.

சமூக வலை தளங்களில் பொய்களை உலவ விடுவதற்காகவே தனிக் குழு அமைத்து செயல்படும் கும்பல் அல்லவா!

திராவிடர் கழகத் தலைவர் வீட்டுத் திருமணத்தில் தாலி கட்டப்பட்டது - சடங்குகள் செய்யப்பட்டன என்று இதே விஜய பாரதம் எழுதி மூக்குடைப்பட்டு, (விரைவில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட உள்ளனர்) அதன் ரத்தம் இன்னும் வழிந்தோடும் நிலையில் அடுத்த கட்ட பொய்க்குத் தாவி இருக்கிறது இந்த மங்கி 'பிராண்டு!'

இந்த வார விஜயபாரதத்தில் 'ஈ.வே.ரா. மணியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் (10.8.2018, பக். 27) கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈ.வே.ரா. தனக்கு அடுத்த வாரிசாக யாரை நிய மிக்கலாம் என்பது பற்றி ராஜாஜியிடம் கலந்து ஆலோ சித்தார். திராவிடர் கழகத்தில் இருந்த அண்ணாதுரை, நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், அன்பழகன், கருணாநிதி போன்றவர்களில் ஒருவரை தனக்கு அடுத்த வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. இவர்கள் மீது ஈவேராவிற்கு நம்பிக்கையில்லை. அதனால்தான் ராஜாஜியிடம் தனக்கு அடுத்த வாரிசாக மணியம் மையை நியமிக்கப் போவதாகவும், அவரையே திரு மணம் செய்து கொள்ள போவதாகவும் ஆலோசித் துள்ளார். ராஜாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழ்.

இது உண்மையா? ராஜாஜி சம்மதம் தெரிவித்தாரா? மாறுபட்ட கருத்தைச் சொன்னாரா?

இதுபற்றி உண்மை நிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆதாரபூர்வமாக ஆவணங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தினார்.

“பெரியார் மணியம்மை திருமணம்“ என்னும் தலைப்பில் உண்மை நிலவரங்கள் வெளிப்பாடு என்னும் நூலாகவே  (பக்கம் 225, 226) வெளிவந்துள்ளது. (2007ஆம் ஆண்டு)அந்த விவரம் இதோ:

ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்

அந்தரங்கம்

அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,

தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.

என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்தவிதத்திலாவது உதவும்.

தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடை யாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.

இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்பு வதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களு டைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் பட்ட பின் செய்வது நலம்.

எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன் னிக்க வேண்டும்.

இவை அன்புடன்

இராசகோபாலாச்சாரி

இந்த நூல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைக்கு முற்றிலுமே மாறாக இப்படியொரு அண்டப்புளுகு, ஆகாசப் புளுகு பொய் மலத்தில் புழுத்த புழுவாக, தன் பூணூல் புத்தியைக் காட்டிக் கொள்வது என்பதை மக்கள் உணர்வார்களா? இது எந்தத் தரத்தைச் சார்ந்தது?

அப்பாவித்தனமாக அந்த அமைப்புகளில் சிக்கிக் கொண்ட அனுமார்த் தமிழர்களும் உணர்ந்து திருந்து வார்களாக?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
Banner

வாசகர் கருத்துகள்

 • வீரவணக்கம்! வீரவணக்கம்!! மேலும்...
 • மிக சிறப்பு மேலும்...
 • இந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...
 • கமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...
 • இதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...