ஜாதியின் பெயரால் அவமதித்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 20- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சமையலர் பாப்பம் மாள் பிரச்சினை ஊடகங்களின் மூலம் வெளியே தெரிந்ததால் சார் ஆட்சியர் தலையிட்டு பாப்பம் மாளை மீண்டும் திருமலைக்கவுண்டன் பாளையத் துக்கே மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட எட்டு பேர்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதியவும் உத்தரவிட்டுள் ளார். இதை வரவேற்கிறோம். ஜாதியின் பெயரால் சத்துணவு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுக் கும்நிலை தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் இருக்கிறது. ஜாதிவெறியர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக் காததால்தான் அது மற்ற பகு திகளுக்கும் பரவுகிறது.

பள்ளிகளில் தலைவிரித்தாடும் ஜாதி வெறியால் இளம் குழந்தை களின் மனமும் நஞ்சாகிறது. எனவே இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி பள்ளிகளில் நிலவும் தீண்டாமை உள்ளிட்ட பாகுபாடுகளைக் களைய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.