கடவுளைப் பரப்புபவன்...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமீபத்தில் பேஸ்புக்கில் சுவாமியின் படத்தினைப் போட்டு, இந்தப் படத்தினை ஷேர் செய்தால் இன்னும் 7 நிமிடங்களில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும் என்றும் ஒருபுறம் இருக்க, இப்போது, வாட்ஸ் அப்பில் சாய்பாபா உங்களை காப்பாற்றுவார்' என்ற வரிகளை 10 வரிகளுக்கு டைப் செய்து, நீங்கள் 10 பேருக்கு அனுப்புங்க. வியாழன் அன்று நல்ல செய்தி வரும்  இது உண்மை என்றும் செய்திகள் வந்தன.

வியாழக்கிழமை அன்று என் தோழிகளிடமிருந்து பத்து மெசேஜ்கள் வந்திருக்கும். பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்போடு இருப்பவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு. இது எந்த வகையில் நியாயம்? இந்த விஞ்ஞான உலகத்தில் இப்படியும் ஒரு நம்பிக்கையா? என்னடா உலகம் இது?

மேற்கண்டவற்றை எல்லாம் ஷேர் செய்துவிட்டு, எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நல்லதே நடக்காது. நமக்கும் அப்பாற்பட்ட சக்தி ஒன்றுள்ளது. எதையும் நல்ல எண்ணங்களுடன் எதிர்கொள்வோம்.

அ. கவிஷ்மா, நாமக்கல்

தினமலர் வாரமலரில்' வெளிவந்த இந்த செய்தியை தோழர் பஞ்சாட்சரம் திருவண்ணாமலையிலிருந்து நமக்கு அனுப்பினார்.

கடவுளை இப்படிப் பித்தலாட்டமாகப் பரப்பித்தான் காப்பாற்ற வேண்டியுள்ளது என்பதை நினைக்கப் பரிதாபமாக இல்லையா?

இப்படித்தான் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கலியுக அவதாரம் என்ற பெயரால் துண்டறிக்கைமூலம் பரப்பினார்கள்.

இதுகுறித்து காரைக்குடி அன்பர் ஒருவர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிக்கு எழுதிக் கேட்டபோது,  அது உண்மைக்கு மாறானது என்று பதில் அளித்ததையும் நினைவூட்டுகிறோம்.

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறியதை இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள்!    - மயிலாடன்