இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு! தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அரங்கத்தில் நாளையும், நாளை.......
22 பிப்ரவரி 2019 15:17:03
மேலும்உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக்…
தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் …
ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு…
பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக…
பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக…
மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை…
கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது…
புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல்…
திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது…
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
Amount of short articles:
Amount of articles links:
You can order sections with dragging on list bellow:
புதுடில்லி, செப்.12 பீமாகோரேகான் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அப்பகுதியில் நடைபெற்ற போரில் உயிர்நீத்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத் தும் 200ஆவது ஆண்டு விழாவையொட்டி விழாவுக்கு முதல் நாளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 அன்று கலவரம் வெடித் தது. அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள்மீது இந்துத்துவ வன்முறைக் கும்பல் தாக் குதலை நடத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதா பரத் வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கொன்சால் வேஸ் ஆகிய சமூக செயற்பாட்டாளர்கள் கடந்த ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டனர். செயற்பாட்டாளர்களின் கைதுக்கு நாடு முழுவதும் உள்ள அறிஞர் பெருமக்கள், தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டு வருகிறார்கள். செயற்பாட்டாளர்களைக் கைது அச் சுறுத்துவதன் மூலம் முடக்க நினைப்பது என்பது மக்களிடையே பாஜக செல்வாக்கு இழந்து வருவதிலிருந்து திசை திருப்புவ தாகும். சமூக செயற்பாட்டாளர்கள், மூத்த குடிமக்களைக் கைது செய்து முடக்குவதன் மூலம் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்ட மும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின் றன என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிட்டுள்ளார்.
பிரஸ் கிளப் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் அருந்ததிராய் கலந்துகொண்டு பேசினார்.
சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதன்மூலமாக பாரதிய ஜனதா கட்சி யின் செல்வாக்கு இழந்து வருவதிலிருந்து திசை திருப்பி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்கின்ற முயற்சியி லும் ஈடுபட்டு வருகிறது. சமூக செயற்பாட் டாளர்களைக் கைதுசெய்வதன்பொருள் என்னவென்றால், கருணை என்பதே இல் லாத மிகவும் ஆபத்தான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரித்தாள்வது என்பது பழைய முறை. தற்பொழுது திசைதிருப்பும் முறையுடன் உள்ளது.
குற்றம்- வரையறை
சிறுபான்மையராக இருப்பது குற்றம். தாக்கப்படும் அளவிற்கு, கொலை செய் யப்படும் அளவிற்கு சிறுபான்மையராக இருப்பது குற்றமாக உள்ளது. பாதிக்கப் படுபவர்களுக்காக குரல் கொடுப்பது அரசுக்கு விரோதமானதாக உள்ளது. இது போன்ற கைதுகளின் விளைவாக, மக்களின் குரலை ஒலிக்கக்கூடிய, மக்கள் பிரதிநிதிகளாக உள்ள லட்சக்கணக்கிலான சமூக செயற்பாட்டாளர்கள் தனிமைப்படுத் தப்பட்டு விடுவார்கள். தற்பொழுது நடைபெற்றுவருகின்ற காட்சி அரசமைப் புச்சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இது நெருக்கடிநிலையைவிட மிகவும் மோச மான பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அரசமைப்பை மீறக்கூடியதாக மாறுகின்ற முயற்சியாக உள்ளது. இந்து ராஷ்டிராவை பிரகடனப்படுத்துகிற ஆணையாக இருப் பதுடன், அதை ஏற்றுக்கொள்ளாத பெரும் பான்மையான மக்களை குற்றவாளிகளாக ஆக்கிவிடுகிறது இவ்வாறு எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிட்டார்.
ஜிக்னேஷ் மேவானி
குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது: இது போன்ற கைதுகள் அறிவிக்கப்படாத நெருக்கடி, பாசிசம் மற்றும் குஜராத் மாட லுடன் இணைந்ததைப்போன்று தோன்று கிறது. ஆட்சியாளர்களின் கொள்கையை எதிர்ப்பவர்கள் மற்றும் மக்களின் உரிமை களுக்காக போராடுகின்ற ஒவ்வொருவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இயக்கங்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக பேசு பவர்களை மதிப்பிழக்கச் செய்யும் இரண்டாவது முயற்சியாகும் இதுபோன்ற கைதுகள். சமூக செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகள் அரசுடனான போருக்காக அல்ல. ஆனால், அதை அரசு தொடங்கி வைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடிமீது பச்சாதாபம் ஏற்படவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியைக் கொல்லும் சதி என்று கதை கட்டி விடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி), விவசாயி தற்கொலைகள் இன்னும் பல உண்மை யான அசைக்க முடியாத பிரச்சினைகளாக உள்ளன. இவற்றை திசைதிருப்பவே இது போன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. எப்படி இருப்பினும், எங்கள் குரலை நாடுமுழுவதும் முன்னெடுத்து செல்லும் போது, நாங்கள் பயங்கரவாதிகள் ஆகி விடமாட்டோம் இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறினார்.
அருணாராய்
சமூக செயற்பாட்டாளரும், மஸ்தூர் கிசான் சங்கதன் தொழிலாளர் அமைப்பின் நிறுவனருமாகிய அருணா ராய் கூறிய தாவது: தற்போதைய சூழலில் அரசமைப் புச்சட்டம் முடக்கப்பட்டு, சட்ட ஆட்சி தோல்வி நிலையில் உள்ளது. இன்று மிக வும் மோசமான நிர்வாகமாக இருந்து கொண்டிருக்கிறது. அரசமைப்புக்கு அளிக்க வேண்டிய மரியாதை அளிக்கப் படுவதில்லை. தொடர்ச்சியாக கருத்துரிமை பறிக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத் துக்கு ஆபத்தானது. தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் மற்றும் பிற மக்களின் உரிமைகளுக்காக எவர் ஒருவர் பேசினாலும், அவர்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கப்படும் என்கிற எச்சரிக்கை யாக இதுபோன்ற கைதுகள் உள்ளன என்றார்.
பிரசாந்த் பூஷன்
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், இதுபோன்ற கைதுகள் சிறுபான்மையினத்தவர், தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் பிற மக்களின் உரிமை களுக்காகப் பேசுவோருக்கு எதிரான சதியாக உள்ளது. இதுபோன்ற கைதுகள் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச்சட்டம் முடக்கப்படுவதையே உணர்த்துகின்றன என்றார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் இன்று தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள், சிறுபான்மை மக்கள்மீதான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருப்பதை காணலாம். முதலில் அந்த பிரிவினரைத் தாக்கலாம், பிறகுபரிதாபத்துக்குரிய அம் மக்களின் உரிமைகளுக்காக பேசுவோரைத் தாக்கலாம். கும்பலாக சேர்ந்து தாக்கு பவர்கள் எளிதில் தப்பவிடலாம். மேலும் பாதிக்கப்படுவோர்மீதே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. யாரெல்லாம் மனித உரிமைகளுக்காக பேசுகிறார்களோ, அரசை எதிர்க்கிறார்களோ, உரிமைகளுக்காக வாதாடுகிறார்களோ அவர்களெல்லோரும் நகர்ப்புற நக்சல்கள் (Urban Naxal) என்று கூறப்படுகிறார்கள் இவ்வாறு பிரசாந்த் பூஷன் கூறினார்.
பெஸ்வாடா வில்சன்
சஃபாய் கர்மச்சாரி அந்தோலன் அமைப்பின் நிறுவனர் பெஸ்வாடா வில்சன் கூறியதாவது:
இதுபோன்ற கைதுகள் அடிப்படை உரிமைகள்மீதான தாக்குதலாக உள்ளது. நாடுமுழுவதும் மக்களிடையே அரசால் திட்டமிட்டு தொடர்ச்சியாக அச்சம் உருவாக்கப்பட்டு வருகின்றது. பீமா கோரே கானில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது எப்படி தவறாகும்? நாம் இன்று ஒரு முறை பேசுவதற்கு முன்னதாக இருமுறை சிந்தித்து பேச வேண்டியதாக உள்ளது. நாட்டுப்பண் ஒலிக்கின்றபோது அனை வரும் எழுந்து நின்று மரியாதை செலுத்து கின்ற அதேநேரத்தில், அரசமைப் புச்சட் டத்துக்கு அளிக்கப்பட வேண்டிய மரியா தையை அளிக்கிறோமா? இது நாட்டை ஆளுகின்ற முறையல்ல. பிரதமர் மக்களின் குரலை கேட்கவேண்டும். மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் என்றார்.