எழுத்துரு அளவு Larger Font Smaller Font


10.5.2018 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
2298 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி

இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

திறனாய்வு நூல்: “திமுக வரலாறு” பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு நக்கீரன் பதிப்பகம் தொடர் சொற்பொழிவு - 9

நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர்)

ஆத்தூரில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

திருச்சி, மே 6 திருச்சி மண்டல பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கூட்டம், 1.5.2018 அன்று மாலை 4 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் துறையூர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இலால்குடி மாவட்ட ப.க. செயலாளர் கோ.பாலசுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ப.க. தலைவர் அழகிரிசாமி, மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சி.இரமேசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அரியலூர் மாவட்ட ப.க. தலைவர் தங்கசிவமூர்த்தி, பெரம்பலூர் மாவட்ட ப.க. செயலாளர் பெ.நடராஜன், கரூர் மாவட்ட ப.க செயலாளர் தி.முத்துகிருஷ்ணன், நாமக்கல் மாவட்ட ப.க. தலைவர் வழக்கறிஞர் இளங்கோ , திருச்சி மாவட்ட ப.க.தலைவர் பா.ரெ.மதிவாணன், செயலாளர் குத்புதீன், பென்னி, இலால்குடி மாவட்ட ப.க.பொருளாளர் அக்ரி.சுப்ர மணியன், திருச்சி மாவட்ட தலைவர்.ஞா.ஆரோக்கியராஜ், மண்டல தலைவர் நற்குணம், மண்டல செயலர் ப.ஆல்பர்ட், இலால்குடி மாவட்ட கழக செயலர் அங்கமுத்து, இலால்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புராஜா, ப.க.ஆசிரியை மு.செல்வி, திருச்சி கவுதமன், ஆசிரிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்பாளர் இரா.கலைச்செல்வன், பூவாளூர் ப.க.தனியரசு, இலால்குடி மாவட்ட ப.க.துணை செயலர் இளஞ்சேட்சென்னி, மணச்சநல்லூர் ப.க. முத்துசாமி, துவாக்குடி நகர தலைவர் விடுதலை கிருஷ்ணன், காட்டூர் அமைப்பாளர் கனகராசு, பாச்சூர் அசோகன், பாச்சூர் இராஜேந்திரன் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துகளை கூறினர். இறுதியாக தீர்மானங்களை பகுத்தறிவு ஆசிரியரணி அ.சண்முகம் படித்தார். நன்றியுரையை துறையூர் நகர ப.க. செயலர் மா.சுப்ரமணியன் கூறினார்.
கூட்டத்தில் ஆத்தூரில் மே 19, 20-இல் நடைபெறும் ஆசிரியர் களுக்கான பயிற்சி முகாமிற்கு கட்டணம் ரூ. 500அய் அரியலூர் மாவட்ட ப.க. தலைவர் தங்கசிவமூர்த்தி, பெரம்பலூர் மாவட்ட ப.க. செயலர் பெ.நடராஜன், கரூர் மாவட்ட

பகுத்தறிவு ஆசிரியரணி முத்துகிருஷ்ணன் ஆகியோர் மாநில ப.க. துணைத்தலைவர் துறையூர் சு.மணிவண்ணனிடம் வழங்கினார்.

இலால்குடி மாவட்ட ப.க.தலைவராக அக்ரி.சுப்ரமணியன், துணைத் தலைவராக மா.சுப்ரமணியன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவராக அ.சண்முகம், மாவட்ட செயலராக பி.பிரபு ஆகியோர் மாநிலத் தலைவரால் நியமிக்கப்பட்டனர்.

பெரியார் ஒரு எரிமலை!
அம்பேத்கர் ஒரு இமயமலை!

திருமுல்லைவாயல், மே 6 புரட்சி யாளர் அம்பேத்கர் பிறந்தநாளை யொட்டி, ஆவடி பகுதிக்கழகத்தின் சார்பில் 22--.04..--2018 ஞாயிற்றுக் கிழமை யன்று மாலை 6 மணியளவில் திரு முல்லைவாயில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு தெருமுனைக்கூட்டமாக அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாடு செய் யப்பட்டி ருந்தது. சிறப்புரையாளராக திராவிடர் கழக தலைமை பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் தனது உரையில், “அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் களுக்கானத் தலைவர் என்வும், பெரியார் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தலைவர் எனவும் சிலர் கூறுவது எவ்வளவு புரட்டு என்பதை முதலில் உதாரணங்களுடன் விளக்கினார்.
அடுத்து இந்துத்துவத்தை வீழ்த்து வதில் பெரியாரியமும், அம்பேத்கரியமும் எப்படி ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டினார். அதேசமயம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி அம்பேத்கரை விழுங்கி செரிக்க எண்ணுகிறது என்பதையும், அதற்குத்துணைபோகிற மாதிரி அம்பேத்கரியவாதிகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் அம்பேத்கர் சிலைக்கு பாலாபிசேகம் செய்வதையும், அவரது கொள்கைகளை பின்பற்றாமல் இந்துத்துவத்தின் வலையில் வீழ்ந்து கொண்டிருப்ப தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தொடர்ந்து காந்தி அம்பேத் கருக்கிடையிலான பூனா ஒப்பந்தத்தையும், அதில் அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்த தந்தை பெரியாரின் நிலைப்பாட்டையும் சொல்லி, இருவருக்கிடையில் இருக்கும் மிக நுட்பமான ஒரு வேறு பாட்டை, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்கிற, “தந்தை பெரியார் ஒரு எரிமலை! அம்பேத்கர் ஒரு இமயமலை! என்ற எடுத்துக் காட்டைச் சொல்லி, அம்பேத்கரின் சிந்தனைகள் பார்ப்பனரல்லாதார் மக்களின் மேம் பாட்டுக்கானவை! ஆகவே, இதை சரியாக புரிந்து கொண்டு இந்துத்து வாவை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

கழகத்தின் ஆவடி பகுதித்தலைவர் அருள்தாஸ் (எ)இரணியன் தலைமையில் மண்டலச் செயலாளர் வீ.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அமைப் பாளர் உடுமலை வடிவேல், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த கி.மு. திராவிடமணி, முல்லை சவுந்தரராஜன், முல்லைத்தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதிவாணன், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த எல்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். தாம்பரம் மோகன்ராஜ், அம்பத்தூர் நடராஜன், வஜ்ரவேல், கொரட்டூர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் இராமதுரை, மாவட்ட இளைஞரணி தரைவர் வெ. கார்வேந்தன், சி.அறிவுமதி, ஆவடி நாகராஜ் மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner