எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜூலை 8 இல் குடந்தையில்

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு

வரும் ஜூலை 8 ஆம் தேதி கும்ப கோணத்தில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு - மாநில மாநாடாக நடைபெற உள்ளது. அந்தக் கும்பகோணத்தில்தான் முதலில் திராவிட மாணவர் கழகமே தோற்றுவிக்கப்பட்டது. அதனால்தான் அதன் பவள விழா மாநாடு அதே கும்பகோணத்தில்.

இம்மாநாட்டில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கழக மாணவர்கள், பொறுப்பாளர்கள், தோழர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண் டும் என்று கருதுவதைத் தீர்மானமாக வரும் 25.6.2018-க்குள் தலைமைக் கழகத்துக்கு எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உறையில், குடந்தை மாநாடு -  தீர்மானம் என்று குறிப்பிடவும்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்