எழுத்துரு அளவு Larger Font Smaller Font

22.7.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் பேரவை - திங்கள் கூட்டம் பம்மல்: மாலை 5 மணி * இடம்: இம்மானுவேல் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பொழிச்சலூர் நெடுஞ்சாலை, பசும்பொன் நகர், பம்மல் * தலைமை: வை.பார்த்திபன் * வரவேற்புரை: சி.முத்தையா * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (சுயமரியாதை ஊடகத்துறை அமைப்பாளர், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) * தலைப்பு: மத்திய அரசின் நவீன குல (கொலை)க் கல்வித்திட்டம் * நன்றியுரை: பொன்.இராமசந்திரன்

23.7.2018 திங்கட்கிழமை

திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கடலூர்: காலை 10 மணி * இடம்: ஓட்டல் துரை, கடலூர் * வரவேற்புரை: நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்).  சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்). த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * கருத்துரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும், விழிப்புணர்வு பிரச்சார பெரும்பயணம் தொடர்பாக * குறிப்பு: கழக பொறுப்பாளர்கள் மாநில, மண்டல, மாவட்ட, நகர, கிளை கழக, பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், விவசாய அணி, வழக்குரைஞரணி  பொறுப்பாளர்களும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

24.7.2018 செவ்வாய்க்கிழமை

அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல்

அரியலூர்: மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், கல்லக்குறிச்சி சாலை, அய்யப்பன்நகர், அரியலூர் * தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), பேரா. ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப்பினர்), மு.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), இரா.கோவந்தராஜன் (நகர தலைவர்), மு.கோபால கிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்) * பொருள்: 3.9.2018 அன்று அரியலூரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சாரப் பயண தொடக்க விழா குறித்து...* குறிப்பு: தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது * இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்),  க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

சென்னை மண்டல திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை:  காலை 10 மணி, * இடம்: பெரியார் திடல், வேப்பேரி,சென்னை * தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), * முன்னிலை: தி.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மாணவர் கழக சென்னை மண்டல செயலாளர்), வ.கலைச்செல்வன் (வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) செ.பெ.தொண்டறம் (ஆவடி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), மு.மணிமாறன் (தாம்பரம் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), அருண்குமார் (தென்சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), எழில் (கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்), * பொருள்: பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் திராவிட மாணவர் கழக அமைப்புகள் தொடங்குவது தொடர்பாக அடுத்தக்கட்ட பணிகள். * அழைப்பு: நா.பார்த்திபன் (திராவிட மாணவர் கழக மாநில  துணைச் செயலாளர்), * குறிப்பு: கலந்துரையாடல் சரியாக 10 மணிக்கு தொடங்கும். சென்னை மண்டல மாணவர் கழகத் தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மதுரை மண்டல திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி  பொதுக்கூட்டம்

அய்யனார்குளம்: மாலை 6 மணி * இடம்: அய்யனார்குளம் உசிலம்பட்டி அருகில் மதுரை புறநகர் மாவட்டம் * வரவேற்புரை: த.பணராசா (கிளை செயலாளர்) * தலைமை: து.சேகர் (கிளை தலைவர்)  * முன்னிலை: தே.எடிசன்ராசா (தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), எஸ்.தனபாலன் (தலைவர், மதுரை புறநகர் மாவட்டம்), நா.முருகேசன் (மண்டலச் செயலாளர்) * கருத்துரை: மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), பொ.நடராசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) * பங்கேற்போர்: அ.மன்னர்மன்னன் (மாவட்ட ப.க. தலைவர்), ரோ.கணேசன் (மாவட்ட அமைப்பாளர்), சுப்பிர மணியன் (மாவட்ட ப.க செயலாளர்), அழ.சிங்கராசன் (மாவட்ட துணைத் தலைவர்), பா.முத்துகருப்பன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * நன்றியுரை: ச.பால்ராசு (கிளை அமைப்பாளர்) * கூட்ட ஏற்பாடு: அய்யனார்குளம், மதுரை புறநகர் மாவட்டம் திராவிடர் கழகம்பெரியார் பெருந்தொண்டர் மருத்துவர் பாலுவின் 87ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

ஆவடி மாவட்டம் திருநின்றவூரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் மருத்துவர் பாலு  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டக் கழகத்தின் சார்பில் அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்தினர். 19.7.2018அன்று மருத்துவர் பாலு அவர்களின் பிறந்தநாள் அவரது வீட்டில் எளிமையாக கொண்டாடப்பட்டது. முதுமை காரணமாக அவர் வீட்டிலேயே இருந்து வருவதால், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் நகர செயலாளர் கோ.முருகன்,  ரகுபதி, ராணி, கீதா, ராமதுரை, குப்புராசு, அருண், பவானி, பிரேம் ஆகியோர் திருநின்றவூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அளவளாவி விட்டு வந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner