எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, டிச. 27 தமிழர் தலைவர் அறிவிப்புக்கிணங்க வரும் டிசம்பர் 30ஆம் தேதி, ஓசூர் ஜாதி & தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையும், ஒகேனக்கல் பயிற் சிப் பட்டறையையும் வெற்றிகர மாக்க முன் தயாரிப்பு கலந்துரை யாடல் கூட்டம் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 16.12.2018 அன்று தருமபுரி பெரியார் மன்றத் தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத் திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளைய.மாதன் தலை மை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சி.காமராஜ் வரவேற்புரை ஆற் றினார். மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார். மண்டலத் தலைவர் வீ.சிவாஜி கருத்துரை ஆற்றினார். மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் இரா.வேட்ராயன், ப.க. ஆசிரியரணி தலைவர் இர.கிருஷ்ணமூர்த்தி, வழக் குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன், மாவட்ட தலைவர் எம்ஆர்ஆர்சி, கே.சின்னராஜ், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ம.சுதா, பாப்பாரப்பட்டி நகர தலைவர் சுந்தரம், மாணவர் கழக கோவி. சந்திரபோஸ், தருமபுரி நகர செய லாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக கருத்துக்களை தெரிவித்தனர். மறைந்த  பொருளாளர் பிறை நுதல்செல்வி அவர்களுக்கு கலந்துரையாடல் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாட்டிற்கு தீவிர வசூல் பணியில் ஈடுபட்டு, கிருட்டினகிரி மாவட்ட தோழர்களுக்கு பொரு ளாதார பங்களிப்பில் தோள் கொடுப்பது எனவும் தீர்மானிக்கப் படுகிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner