Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

கழகம்

பேரன்புடையீர் வணக்கம். தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை ஆண்டு மலரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், முனைவர் தவமணி, மாநில ப.க. துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, என்.ஆர்.எஸ்.பிரின்ஸ் ஆகியோர்களை கொண்ட குழுவினர் பங்கேற்கும் கழக இளை ஞரணி, மாணவரணி கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்களுக்கு கணிணி மற்றும் இணையதள பயிற்சி முகாம் தஞ்சை வல்லத்தில் 20.5.2012 காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது.

கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

கழக இளைஞரணி, மாணவரணி மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்.


-தஞ்சை இரா.செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் - 98425 98743
ம.திராவிடஎழில் மாநில மாணவரணி செயலாளர்  - 98949 05215

கோவை, மே 18-2012 கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை குறிச்சி சந்திரசேகர் இல்லத்தில் 14.5.2012 திங்கள் மாலை 5.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது.

கோவை மண்டல தி.க. செய லாளர் ம.சந்திரசேகர் தலைமையிலும், குறிச்சி நகர செயலாளர் புண் ணியமூர்த்தி, தோழர் சா.சிவக்குமார் ஆகி யோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பயிற்சி யாளர்களாக கோவை யில் இயங்கி வரும் பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வரும் இளையராஜா, கல்வி அகம் கு.வெ.கி. செந்தில், கோதண்ட ராமன் ஆகியோரும் இணைந்து தமிழகத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களையும், பெருகிவரும் வேலை வாய்ப்புகளையும், எதிர் காலத்தில் மாணவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் எதைப் படிப் பதினால் நமது அறி வாற்றல் பெருகி வேலை வாய்ப்பில் நிலைத்து நிற்க முடியும் என்பது பற்றி 2 மணிநேரம் வந் திருந்த மாணவர்களுக் கும், கழகத் தோழர்க ளுக்கும் எடுத்துக்கூறி னார்.

நிகழ்ச்சியில் இயக்க குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தி.க. கார் முகிலி, தி.க. யாழினி, த.க.கவுதமன், க.சி.தமிழ் நியூட்டன், த.க. யாழினி, பு.கதீனாமூர்த்தி, க.சி.இனியா, பு.க. பூங் குழலி, வி.வனிதா, ராசி, பிரபாகரன், க.ஜெய கிருஷ்ணன், க.ஜெயந்தி ம.சக்தி, ஆ.குமரவேல், கெ.ஜோ.பிரியதர்சினி, ரா.கீர்த்திகா, ஆ.விக் னேஷ், இ.பிரபாகரன், திருநாவுக்கரசு, புனிதா, இராகுல், கழக மகளி ரணிதோழியர்கள் ராஜேஸ்வரி, திலகமணி, ஜோதி, கவிதா, செல்வி, வளர்மதி, ஆ.நத்திலா, தேவிகா, பிரீத்தி, மற் றும் கழகத் தோழர்கள் பழனிச்சாமி, இருதய ராஜ், குரு, சிவக்குமார், வெற்றிச்செல்வன், நாக ராஜ் இன்னும் கழகம் சாராத பல்வேறு மாண வர்களும் இப்பயிற் சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை கோவை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் தி.க. தமிழ் முரசு ஒருங்கிணைத்து நடத்தினார். இரவு 8.30 மணிக்கு இப்பயிற்சி நிறைவுபெற்றது.

கோவையில் இயக் கம் சார்ந்து நடத்திய கல்வி வழிகாட்டுதல் பயிற்சியில் பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை மாணவர் கள் கேட்டுப் பெற்ற துடன், மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும்? என தக்க ஆலோசனைகளை பயிற்சியாளர்கள் அளித் தனர்.

கணிப்பொறி சம் பந்தமான நிறுவனங் கள், பயன்தரும் படிப்பை வழங்கி வரும் கல்லூ ரிகள், குறைந்த செலவில் நிறைந்த பயனைத்தரக் கூடிய கல்வி சம்பந்த மான விபரங்கள் ஆகிய பயனுள்ள நல்ல தக வல்களை பயிற்சியா ளர்கள் வழங்கியது, வந் திருந்த அனைவர்க்கும் அருமருந்தாய் திகழ்ந் தது. திராவிடர் கழகம் இதைபோன்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து செய்தால் ஏராளமான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பேசி கொண்டது இயக்கத் திற்கு மேலும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்தது எனலாம்.

குமரி, மே 18-தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் உடல் வளத் தையும் உள்ள வளத் தையும் பேணும் வகை யில் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம், குருந்தன்கோடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாபெ ரும் கராத்தே பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் கரையான் விளையில் 18.5.2012 வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திங்கள் நகர் ம.ப.நூர்தீன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திராவிடர் கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர், பெ.சுப்பிர மணியம், கழக திங்கள் நகர் கிளைத் தலைவர் சா.பாலையன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். கழக மாநில பொதுக்குழு உறுப்பி னர் ம.தயாளன், கராத்தே பயிற்சிமுகாமினை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

கழக கன்னியாகுமரி மாவட்ட அமைப்பா ளர் ஞா.பிரான்சிஸ், கழக மாவட்ட மகளி ரணி தலைவர் ச.ச.மணி மேகலை, நாகர்கோவில் நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முக மது, திங்கள் நகர் கிளைக் கழக செயலா ளர் தா.ஜெபராஜ், மயிலாடி கிளைக் கழக தலைவர் கே.வெங்கடா சலம், வெட்டூர்மணி மடம் ம.செல்வராசு, மணி மற்றும் ஏராளமா னோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கராத்தே பயிற்றுநர் தலக்குளம் ஆ.சிவக் குமார் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பினை நடத்தினார். திங்கள் நகர் தலக்குளம் பகுதியினை சார்ந்த 40க்கும்மேலான மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வீர விளையாட்டான கராத்தே பயிற்சி பெற் றனர். இந்த பயிற்சி முகாம் மே 18 (இன்று) தொடங்கி மே 30 வரை தொடர்ந்து நடைபெறு கிறது.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்