முன்பு அடுத்து Page:

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

சென்னை, ஜன.18 திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் 16.1.2019 அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் தொடங்கியது. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கத்தினை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தொடங்கிவைத்தார். மக்கள் திரளின் மகிழ்ச்சியான ஆட்டத்தோடு பெரியார் திடல் நோக்கி ஊர்வலமாக வந்தது பறை முழக்கம். பெரியார்....... மேலும்

18 ஜனவரி 2019 16:25:04

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை'' வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், த.க.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி  தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான தூய்மை விருதினை பள்ளி முதல்வர் க.வனிதாவிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார். மேலும்

14 ஜனவரி 2019 17:07:05

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் முதன்மை  செயல் அலுலவர் பேரா. எஸ்.தேவதாஸ் மற்றும் கல்விப்புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர்  முன் னிலை வகிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி அவர்கள் தலைமை வகிக்க கூட்டு  பணியாளர் நலமன்ற சார்பாக பணி யாளர்களுக்கு உறியடி போட்டி,....... மேலும்

14 ஜனவரி 2019 17:03:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழர் தலைவர் எனத் தமிழ் உலகம் போற்றும் எனது ஆருயிர் அய்யா அவர் களின் 85ஆம் பிறந்த நாள் விழாவினை காணும் அரிய பெரும் நாளில் மகிழ்ந்து உற்சாகமடைகின்றோம்.

தமிழர் தலைவர் அவர்கள் தனது பத்தாவது வயதில் 1944 ஆம் ஆண்டில் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட் டில் அவரது எழுச்சி மிகு உரையினை கேட்ட பேரறிஞர் அண்ணா, அவர்களால் "திராவிட இயக்கத்தின் திருஞான சம் பந்தர்" எனச் சிறப்பாக போற்றப்பட்டவர்.

தந்தை பெரியாரின் அன்புக்கும் நன் மதிப்புக்கும் ஆளாகி அவரின் முழுமுதல் அணுக்கத் தொண்டாற்றி மிக அருகி லிருந்து வளர்ந்து பகுத்தறிவுச் சிந்தனையில் ஊறித் திளைத்த பெருமகனார் ஆசிரியர் அவர்கள்.

அறிவாசன் தந்தை பெரியார், அறிவு அன்னை மணியம்மையார் ஆகியோருக் குப் பின் திராவிடர் கழகத்தின் தலைவராய் உயர்ந்து பகுத்தறிவு, சுயமரியாதை இன உணர்வு, மொழி கசப்பு, தன்மானம் காத்த இடஒதுக்கீடு போன்ற கொள்கைகளை உயர்த்திப் பிடித்து தமிழகத்தையும் தமிழர் களையும் வழிநடத்தும் விடுதலை ஆசிரி யர் அவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே, மகிழ்வாய், பெருமையாய் கருதுகிறேன்.

தந்தை பெரியார் அவர்களால் தூய தொண்டால் துவக்கப்பட்ட இயக்கத்தினை வலிமை மிகு பேரியக்கமாய் பட்டி தொட்டி யெங்கும் பரவிட பெரும் பணியாற்றி வரு கின்றார் அய்யா அவர்கள் என்றால் மிகையல்ல என்றே கூறலாம்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்" என்ற அரிய கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் அதுவே என் நெஞ்சில் தைத்த முள்ளாக உள்ளது என இறுதி நாளில் மாநாட்டின் வாயிலாக போர் முரசு அறைந்து மறைந்த தந்தை பெரியா ரின் கொள்கையினை தன் சிரம் ஏற்று போராடி, கேரள மாநிலத்தின் அரசில் வெற் றிக்கனியை பறித்துள்ள ஆசிரியர் அவர் கள் தமிழ்நாட்டிலும் நிலைநாட்டிட அரும் பாடுபட்டு வருகின்றார். வெற்றியை காணச் செய்வார் என்ற உறுதியை ஏற்போம்.

அகில இந்தியாவிலேயே இடஒதுக்கீடு என்ற கோட்பாட்டினை தமிழகத்தில் 69 சதவீதத்தினை வாதாடி போராடி பெற்ற ஒரே மாத்தலைவர் அய்யா ஒருவர்தான். இது வரலாற்றின் வைர பதிவுகள் என்றே கூறலாம்.

"நம்மால் முடியாதது யாராலும் முடி யாது. யாராலும் முடியாதது நம்மால் முடி யும்" என்ற எழுச்சி முழக்கத்தினை எங் களின் இதயத்தில் கொண்டு வீரநடைபோடு கின்றோம் என்றால் தமிழர் தலைவரின் உற் சாகமூட்டும் வைர வரிகளாகும்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமு தாய மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி உரத்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழர் தலைவர் வாழ்க வாழ்க என தமிழர் கள் சார்பாக மகிழ்வை பகிர்ந்து கொள்கி றேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner