முன்பு அடுத்து Page:

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

சென்னை, ஜன.18 திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் 16.1.2019 அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் தொடங்கியது. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கத்தினை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தொடங்கிவைத்தார். மக்கள் திரளின் மகிழ்ச்சியான ஆட்டத்தோடு பெரியார் திடல் நோக்கி ஊர்வலமாக வந்தது பறை முழக்கம். பெரியார்....... மேலும்

18 ஜனவரி 2019 16:25:04

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை'' வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், த.க.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி  தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான தூய்மை விருதினை பள்ளி முதல்வர் க.வனிதாவிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார். மேலும்

14 ஜனவரி 2019 17:07:05

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் முதன்மை  செயல் அலுலவர் பேரா. எஸ்.தேவதாஸ் மற்றும் கல்விப்புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர்  முன் னிலை வகிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி அவர்கள் தலைமை வகிக்க கூட்டு  பணியாளர் நலமன்ற சார்பாக பணி யாளர்களுக்கு உறியடி போட்டி,....... மேலும்

14 ஜனவரி 2019 17:03:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இன்றி வாழ்ந்தவர் தந்தை பெரியார். பகுத் தறிவு பகலவன் என்றால் - குழந்தையும் சொல் லும் பெரியார் தாத்தா என்றே! பேரறிஞர் என்பது யாரைக் குறிக்கும்? அண்ணாவை! கலைஞர் என்றால் மாண்புமிகு மு.கருணாநிதி!, தமிழர் தலைவர் என்றால் - மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கே உரியது. இது தமிழர் தீர்ப்பு.
திருக்குறள் காட்டும் தலைமைப் பண்பு டைய (அதிகாரம் 1) தலைவர் யார்? என கேட் பவருக்கு இயக்கத்தவரின் இனிய பதில் - தமிழர் தலைவர் - மானமிகு கி.விரமணி என்ப தாகும்.

இயக்கத்தவருக்கு இதயமாக இருப் பவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார் கள்.

பெரியாரின் இடி முழக்கம்!

திராவிடர் கழகம், தனது வலிமை யையும், வரலாற்றையும், நாகரிகத்தையும், சீரையும், சிறப்பையும் மறந்து அடிமை வாழ்வு நடத்தி வரும் ஒரு பெரும் இன மக்களுக்கு எல்லா வகையிலும் தன்மானத் தையும், அறிவு வளர்ச்சியையும் உண் டாக்கும் இயக்கம் ஆகும்" இது பெரியார் 25.10.1956இல் வெளியிட்ட அடிப் படை சாசனம் ஆகும்.

மேலும் நமது நோக்கம் 25.5.1930; நமது அரசியல் கொள்கை 10.3.1935; எது என தெளி வுபடுத்தியுள்ளார் தந்தை பெரியார் அவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னை "பெரியார் பரம்பரை" என்று கூறுவதில் மகிழ் வடைவார். "பெரியார் பரம்பரை" என்பது "வீண் பழியையும், இழிவையும் தாங்கி கொள் ளும் பண்பு" என்று விளக்குவார்.

பனித்துளியில் பனைமரம்!

எதிரியின் அடி மூலத்தை அழித்தவர் பெரியார். விதவை தன்மையை அனு மதியாதே (28.4.1935); மதநம்பிக்கையையும், தெய்வ நம்பிக்கையையும் விரட்டு! சுய மரியாதையும் சமத்துவமும் கிடைக்கும். (11.1.1931); பார்ப்பனர் அல்லாதார் செய்தாலும் தவறு தவறுதான் என்ற கண்ணோட்டம் மிக்கவர் பெரியார். ஈரோட்டு மாநாட்டில் சமபந்தி விருந்து ஆக்கி படைத்த படைப் பாளி பெரியார்!...

எங்கும் இல்லாதது,

இங்குமட்டுமே காண முடிந்தது!

பெண்கள் ஆண்களுடன் சரிசமமாகத் தங்களைக் கருதிக் கொண்டது மற்றும் அவர்கள் நிர்பந்தங்கள் ஒழிந்ததுமான சம்பவங்கள் இவ்வியக்கத்தின் பயனாய் காணப்பட்டது போல வேறு எதிலாவது காணப்பட்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்"

- தந்தை பெரியார், குடியரசு: 6.9.1931

அருட்கொடையே பெரியார்!

செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு (1929); விருதுநகர் மாநாடு (1931); சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு (1971); போன் றவை பெண்க ளுக்கு சமத்துவம் பெற்று தந்தது. இது போன்ற பன்முக படைப்புகள் அய்யாவின் அருட் கொடையாகும்!

பெரியாரின் இலட்சியம், தொடர - நிலைபெற - என்போன்றோர்க்கு வாழ் வியல் சிந்தனை களஞ்சியம், வழங்கி - மனித இனம் வழுக்காதிருக்க - மானுடம் போற்றுபவர் - மானுடம் காப்பவர் - நமது தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி ஆவார்!
இயற்கை முறையை தனது கேடயமாக கொள்ளும் தமிழர் தலைவர் - எங்களுக்கு இதயகீதம்.

இயக்கத்தவருக்கு தமிழர் தலைவரே இருப்பு ஆவார். 100 ஆண்டுகள் கடந்து வென்று வாழ்க தமிழர் தலைவர்! - அவரே உலகின் அகமும் - புறமும் ஆவார்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner