முன்பு அடுத்து Page:

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

சென்னை, அக். 18 தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடத்தூர் தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா & திராவிடர் கழக பொதுக்கூட்டம் 2.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் முடிவடைந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங் கில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி தலைமை யேற்றார். மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்குரைஞர் ந.செல்வம் அனை வரையும் வரவேற்றார். முதலாவ தாகத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் நினைவேந்தல் கழக பொதுக்கூட்டம்

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் நினைவேந்தல் கழக பொதுக்கூட்டம்

மன்னார்குடி, அக்.18 திராவிடர் கழக முன் னாள் மாவட்டத் தலைவர் சுயமரியாதை சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர்  ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 23ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திராவிடர் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. மேலராஜ வீதி, தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் மு.ராமதாசு தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலை வர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், மாநில விவசாய அணி அமைப்பாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

குவைத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

குவைத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

குவைத், அக். 18 உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் 13.10.2018 அன்று மாலை 6.30 மணிக்கு குவைத், ஹீர்ரன்ஜா விடுதியில் தோழர் ஆலஞ்சியார் தலைமையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் குவைத் உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் ச.செல்லப்பெருமாள் வரவேற்புரையாற்றினார். தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த....... மேலும்

18 அக்டோபர் 2018 15:22:03

தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - அறிவிப்பு

தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - அறிவிப்பு

திராவிடர் கழக மாநில மாநாடு தஞ்சாவூரில் 2019 பிப்ரவரி 2, 3 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெறும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம். மேலும்

18 அக்டோபர் 2018 14:48:02

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

செங்கற்பட்டு, அக். 17- செங்கற் பட்டு அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப் புக்கூட்டம் 15.10.2018 -அன்று 12.30 மணிக்கு பெரியார் படிப் பகத்தில் உற்சாகமாக நடை பெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேக ரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தொண் டினையும், திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து செய லாற்ற வேண்டிய அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 18:15:06

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ராமாயணம், ராமன், ராமராஜ்ஜியம் தோழர் தா.பாண்டியன் எழுதிய சமுதாய விஞ்ஞானி பெரியார் பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் நூல்கள் வெளியீடு நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர்....... மேலும்

17 அக்டோபர் 2018 18:05:06

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை, அக். 17- மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத் தில் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நினைவேந்தல் வீரவணக் கம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டமாக நடைபெற் றது. 9.10.2018 அன்று மாலை 6 மணியளவில் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் டாக் டர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றுகின்ற அளவில் நினை வேந்தல் நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட திராவிடர்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:50:05

தந்தை பெரியார் பட ஊர்வலமும் பிள்ளையார் சிலை (உடைப்பும்) கரைப்பும்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள அய்யா பெரியாரின் சிலைக்கு மேட்டூர் கழக மாவட்டத்தின் சார்பில் 17.9.2018 அன்று காலை 10.30 மணிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் கம்பீரமாக கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் படம் திறந்த வேனில் ஒலி பெருக்கியுடன் அமைக்கப்பட்டு பழனி.புள்ளை யண்ணன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தந்தை பெரியாரின்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:33:04

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

சென்னை, அக். 17 உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா அங்கிங்கெனாதபடி  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை வண்டியூர் 23.9.2018 அன்று மதுரை வண்டியூரில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் மணிராஜ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. வண்டியூர் தி.க.ரவி அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்டத் தலைவர் முனியசாமி,....... மேலும்

17 அக்டோபர் 2018 16:20:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தனிப்பட்ட முறையில் ஆசிரியருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்
- ஈ.வெ.கி.ச. இளங்கோவன் உருக்கம்

பல்வேறு கட்சித் தலைவர்களின் மனந்திறந்த பாராட்டுகள் ; தந்தை பெரியாருக்குப் பிறகு ஆசிரியரை  உச்சிமோந்தது ஈரோடு

பிறந்த நாள் விழா காணும் ஆசிரியருக்கும் அவரைக் கண்ணிமையாகக் காத்து தந்தை பெரியார் பணி முடிக்கப் பாதுகாத்துக் கொடுக்கும்

அவர்தம் வாழ்விணையர் வீ. மோகனா அவர்களுக்கும் விழாக் குழு சார்பில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர்

பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே சால்வை அணிவித்து வாழ்த்துக்களை கூறினார்.

தொகுப்பு: மின்சாரம்

ஈரோடு டிச.3  தந்தை பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தொண்டுப் பணி, கண்ட களங்கள், அனைவரையும் ஒன்றிணைக்கும் பாங்கு குறித்தெல்லாம் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாராட்டி உச்சிமோந்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் கொள்கை பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றது.

காலை ரயில் மூலம் ஈரோடு வந்த அந்த நேரம் முதல் நாள் முழுவதும் கழகத் தோழர்களும் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்  தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டே இருந்தனர். சால்வைகள் வேண்டாம் சந்தாக்களைத் தாரீர் என்று தலைமைக் கழகத்தின் வேண்டுகோளைப் பெரும்பாலும் கழகத் தோழர்கள் பின்பற்றினர்.

பூங்கொத்துகள் கொடுக்கும் பழக்கம் அறவே தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரிசை வைத்துக் கொடுப்பதுபோல பழங்களையும் நூல்களையும் ஏராளமானோர் தங்களின் ஒப்பற்ற தலைவருக்கு அளித்துப் பெரு மகிழ்ச்சியுற்றனர்.

காலை 9 மணி முதல் நேரில் வாழ்த்துகள் தெரிவிக்கும் விழா நேர்த்தியுடன் நிறைவேறிய நிலையில், கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வேண்டுகோள்படி ஆயிரக்கணக்கான கழகக் குடும்பத்தினர் எழுந்து நின்று தமிழர் தலைவருக்கு கரஒலி செய்து தந்தை பெரியார் பணிகளை கழகத் தலைவர் வீரமணியின் தலைமையிலே செய்து முடிப்போம் என்று  சூளுரைத்தனர்.

தொடர்ந்து பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து அவர்களின் தலைமையில் 'திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட' என்னும் தலைப்பில் கருத்தரங்கம் கருத்துச் செறிவுடன் நடந்தது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ. பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, இரா. பெரியார்செல்வன், இராம. அன்பழகன், சே.மெ. மதிவதனி ஆகியோர் சிறப்பாகக் கருத்துகளை எடுத்துரைத்தனர். மாவட்டக் கழகத் துணை செயலாளர் மா. மணிமாறன் நன்றி கூறினார்.

விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான புலால் உணவு அளித்து உபசரிக்கப்பட்டது.
திறந்த வெளி மாநாடு

மாலை 5 மணிக்கு விறுவிறுப்பான பட்டிமன்றம், ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் (பேருந்து நிலையம் அருகில்) தொடங்கியது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்து - தமிழர் தலைவர் அவர்களுக்கு நடைபெற்ற பவள விழா, 80ஆம் ஆண்டு விழா, இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் தன்மைகளை எடுத்துரைத்தார்.
தனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்கு அவர் வைத்த நிபந்தனையையும் எடுத்துக் கூறினார்.

லட்சிய ஏடான விடுதலைக்கு சந்தாக்களை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் முன்வைத்த நிபந்தனையில் அடங்கியிருக்கும் கொள்கை உணர்வை விளக்கினார்.

தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நடுவராக இருந்து நடத்திய பட்டிமன்றம் தொடங்கப்பட்டது. (மாலை 4 மணியிலிருந்தே கழகக் குடும்பத்தினரும், பொது மக்களும் விழா நடக்கும் வீரப்பன் சத்திரம் அருகேகூட ஆரம்பித்தனர்) மழை இடை இடையே மிரட்டினாலும் தங்கு தடையின்றி விழா சிறப்புடன் நடந்தது.

தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது பெரியார் கொள்கையை உலகமயமாக்கியதே என்ற அணியில் பேராசிரியர் அதிரடி க. அன்பழகன், கோபி. குமாரராஜா, புலியகுளம் வீரமணி ஆகியோர் எடுத்துக்காட்டுகளுடன் தங்கள் உரை வீச்சை விறுவிறுப்பாகப் பதிவு செய்தனர்.

இந்த அணியினர் தங்கள் வாதத்தில் குறிப்பாக எடுத்துரைத்ததாவது:

தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டு  உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியாரின் தத்துவக் கருத்தைப் பரப்புதல் (அந்த அமைப்புதான் ஆண்டுதோறும் சமூக நீதிக்கான வீரமணி விருது அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்) ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் மூன்று நாள்கள் நடத்தப்பட்ட பெரியார் பன்னாட்டு மாநாடு, பல மொழிகளிலும் தந்தை பெரியாரின் கருத்துகளைக் கொண்டு சென்றது; உலக நாத்திகர்கள் மாநாடுகளை நடத்தியது, வெளி மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகள், மாநாடுகளில் பங்கு கொண்டு தந்தை பெரியார் கருத்துக்களைப் பரப்பி வருவது மிபிணிஹி என்ற பன்னாட்டு மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தையும் இடம் பெறச் செய்தது உட்பட தந்தை பெரியார் கருத்துகள் உலகமயமாக்கப்பட்டதில் தமிழர் தலைவரின் பங்கினைப் பெருமிதமாக எடுத்துரைத்தனர்.

"தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது பெரியார் கொள்கையை சட்ட வடிவமாக்கியதே" என்ற அணியில், வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், வழக்குரைஞர் பூவை. புலிகேசி, மாநில திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பலமாக வாதிட்டனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான உச்ச வரம்பினை நிபந்தனையாக வைத்த எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 39 இடங்களில் 37 இடங்களில் அதிமுக தோல்வியைத் தழுவச் செய்தது. அதன் தொடர்ச்சியமாக பிற்படுத்தப்பட்டோருக்கு அதுவரை இருந்துவந்த 31 விழுக்காடு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தச் செய்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கும் மேலாகப் போகக் கூடாது என்ற நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி பிரிவின் கீழ் சட்டமுன் வடிவையே தயாரித்துக் கொடுத்து, அன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பயன்படுத்தி  நிறைவேற்றச் செய்தது - அச்சட்டம் பாதுகாப்புக்காக 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்படச் செய்தது.
எல்லாம் தமிழர் தலைவரின் சாதனையல்லவா!

முதல் சட்டத் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால் 76ஆம் சட்டத் திருத்தம் தமிழர் தலைவர்  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களால் ஏற்பட்டது என்ற சரித்திர சாதனை மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் நடக்கச் செய்வதற்குக் காரணமாக இருந்தது. இந்திய அளவில் சமூகநீதியாளர்களை அதற்காக ஒருங்கிணைத்து அதன் விளைவாக சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்த நிலையில், இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடங்களை அளிக்கச் செய்தது என்பது உட்பட நிரல்படுத்தி இந்த அணியினர் அடுக்கடுக்காக ஆதாரங்களை எடுத்து வைத்தனர்.

நடுவர் - முனைவர் துரை. சந்திரசேகரன் "தமிழர் தலைவரின் தொண்டில் விஞ்சி நிற்பது - பெரியார் கொள்கையை சட்ட வடிவமாக்கியதே" என்று பலத்த கரவொலிக்கிடையே தமது தீர்ப்பைப் பதிவு செய்தார்.
தொடக்கத்தில் ப. தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

திறந்த வெளி மாநாடு

தமிழர் தலைவரின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 'விடுதலை' சந்தா அளிக்கும் விழா, ஜாதியை ஒழிக்க அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்ட போராட்டத்தில் (1957 நவம்பர் 26) அறுபதாம் ஆண்டு நிறைவு நினைவு விழா ஆசிரியர் முப்பெரும் விழாக்கள் அடங்கிய திறந்த வெளி மாநாடு மாலை 6.30 மணிக்குத் தொடங்கப்பட்டது.

தொடக்க விழா நிகழ்ச்சியாக நமது மாநாட்டுக்கே உரிய ஜாதி மறுப்புத் திருமணம் ஒன்றைத் தலைமை வகித்து நடத்தினார் திராவிடர் கழகத் தலைவர்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

பொத்தனூர் க. சண்முகம் தலைமை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும் 95ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க. சண்முகம் முப்பெரும் விழாவுக்குத் தலைமை வகித்தார்.

85 வயதில் 75 ஆண்டு பொது வாழ்வுக்கு சொந்தக்காரர் - 'விடுதலை' நாளேட்டுக்கு தொடர்ந்து 55 ஆண்டு காலமாக ஆசிரியராக இருக்கும் சாதனையாளர் நமது தலைவர் ஆசிரியர் என்றும், அவர் வாழ்நாள் நீடிக்க 'விடுதலை' சந்தா என்னும் டானிக்கை அளிப்போம் என்று கூறி, அனைவரின் வாழ்த்துகளோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தம் தலைமையுரையில் குறிப்பிட்டார். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகம்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்தொலிக்கிடையே திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். அவர், தமது உரையில் கடலூருக்கு, ஈரோடு விழா எடுப்பது பொருத்தமானது என்றும், 1917ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் ஈரோடு நகர மன்றத் தலைவராக இருந்தபோது கொங்கப்பறைத் தெரு என்றிருந்ததை வள்ளுவர் தெரு என்று மாற்றியமைத்ததை எடுத்துக் கூறி, தமிழர் தலைவர் பற்றி தந்தை பெரியார் சூட்டிய புகழாரத்தின் மணத்தினை எடுத்து விளக்கினார்.

மூத்த வழக்குரைஞர் ப.போ. மோகன்

தமிழகத்தை ஒன்றுபடுத்தும் சக்தி ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உண்டு. இங்கே மேடையில் வீற்றிருக்கும் தலைவர்கள், கட்சிகள், அவர்களின் அமைப்புகள் அடங்கிய இந்தப் படை நாட்டில் தலை தூக்கி நிற்கும் மதவாத அரசியலை, மதவாத ஆட்சியைத் தூக்கி எறியும் ஆற்றல் படைத்தது என்று குறிப்பிட்ட மூத்த வழக்குரைஞர் மோகன், சென்னை ஆர்.கே. நகரில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலின் முடிவு அதற்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஒன்று சேர்ந்தால் எந்தத் தீய சக்தியையும் எதிர்த்து முறியடிக்கவும் முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தோழர் பி. மாரிமுத்து (சிபிஎம்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் பி. மாரிமுத்து அவர்கள் தன்னுரையில் மத்தியில் மதவாத அமைப்பான பிஜேபி அதிகாரத்தில் அமர்ந்த நிலையில், சமூக சீர்திருத்தவாதிகளான கல்புர்கி முதல் கவுரி லங்கேஷ் வரை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தார்.

தோழர் ந. பெரியசாமி

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் ந. பெரியசாமி அவர்கள் தன்னுரையில் 92 ஆண்டு கால வரலாறு படைத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்ட அவர், தமிழர்களுக்குத் தந்தை - பெரியார் என்றால், எங்களைப் போன்றோருக்குத் தந்தையாக நமது தலைமுறையில் ஆசிரியரை மதிக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

சட்டப் பேரவை உறுப்பினர் உ. தனியரசு

நேரடியாக நமது ஆசிரியருடன் எனக்குத் தொடர்பு இல்லையென்றாலும் எனது மாணவப் பருவந்தொட்டு, ஆசிரியர் அவர்களை நான் தொடர்ந்து கொண்டே வருகிறேன். சமுதாய, பொருளாதார, அரசியலில் அவர் கூறும் கருத்துகள் என்னைப் பாதித்தே வந்திருக்கின்றன.

"தமிழா இனவுணர்வு கொள்!" என்ற அவரின் இன முழக்கம் என்னுள் இனவுணர்வை விதைத்தது.

குறிப்பாக சமுதாயத்தில் பார்ப்பனர் ஆதிக்கம், பார்ப்பனீயத்தின் வருணாசிரம ஏற்பாடுகள்பற்றி ஆசிரியர் அவர்கள் சொல்லி வந்த கருத்துகளை உள் வாங்கி அதன் அடிப்படையில் நடைபோட்டு வருகிறேன்.

85 வயதிலும் என்னைக் கண்டபோது எழுந்திருந்து வரவேற்ற அந்தப் பண்பாட்டைக் கண்டு வியந்து போனேன் - இன்றைய தலைமுறையினர் பின்பற்றத் தக்க பெரும் பண்பினை தமிழர் தலைவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் உ. தனியரசு அவர்கள் மதவாத சக்தியைப் புறங்காண தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் ஒன்றிணைவோம் என்றார்.

ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பது எனது அடிப்படைக் கடமையாகும்.

தொடர்ந்து மழை இந்தப் பகுதியில் இருந்து வருவதால் இந்த விழா தடைபடுமோ என்று முதலில் நினைத்தேன். நடத்துவது திராவிடர் கழக விழா, கருப்புச் சட்டைத் தோழர்கள் நடத்தும் விழா, எவ்வளவுதான் கடும்மழை இருந்தாலும், புயல் அடித்தாலும், சுனாமி வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாதவர்கள் திராவிடர் கழகத்தினர் -அதனால் கண்டிப்பாக இந்த விழா நடந்தே தீரும் என்ற உறுதியான எனது எண்ணத்தின் அடிப்படையில் சென்னையிலிருந்து விமானத்தைப் பிடித்து இங்கே வந்து சேர்ந்தேன்.

மூன்றரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு நான் வர முடிகிறது. ஆனால் தந்தை பெரியார் பொது வாழ்க்கையை மேற் கொண்ட கால கட்டம் எத்தகையது? இந்த வசதிகள் உண்டா? கட்டை வண்டி போன்ற வாகனத்தில் தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்து வந்தாரே  எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

95 வயது வரை தந்தை பெரியார் வாழ்ந்து  தொண்டாற்றி வந்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இருவர்; ஒருவர் அன்னை மணியம்மையார் இன்னொருவர் ஆசிரியர் வீரமணி என்று அவர் குறிப்பிட்டபோது பலத்த கரவொலி!

ஆசிரியருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி  - பாராட்டு!

இந்த நேரத்தில் எனது நன்றியை எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆசிரியர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தன் தந்தையார் சொத்துகளை அப்படியே பாதுகாத்து வந்தார் தந்தை பெரியார். பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு, அந்தச் சொத்துகள் வாரிசுதாரர் என்ற முறையில் மணியம்மையாருக்குச் சென்றது. அவர்களும் அந்தச் சொத்தினை சரியாகப் பாதுகாத்து வந்தார். மணியம்மையார் மறைவிற்குப் பிறகு அந்த சொத்துகளை சற்றும் தாமதமின்றி, தயக்கமின்றி எங்கள் குடும்பத்தாரிடம், எனது தாயாரிடம் ஒப்படைத்தார் ஆசிரியர் அதன் மூலப் பத்திரங்கள் உட்பட பத்திரமாகப் பாதுகாத்து எங்களிடம் ஒப்படைத்தாரே அந்தப் பெருந்தன்மையை, நாணயத்தை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும். என் தந்தையார் சொத்துகளை முடிந்து விட்டார். இந்த நிலையில் ஆசிரியர் உதவி முக்கியமானது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆசிரியர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அவர்கள் எங்களிடம் அளித்த அந்த மூலப் பத்திரங்கள் பிறகு எங்களுக்கு முக்கியமாகத் தேவைப்பட்டிருந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அவர்களை, நான் கடுமையாக விமர்சித்ததுண்டு. ஆனால் எப்பொழுதுமே என்மீது அவர் அன்பு செலுத்தி வந்திருக்கிறார்.

இது எனது குடும்பச் செய்தி என்றாலும் நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் கருஞ்சட்டைத் தோழர்கள் மத்தியில் தானே நான்  சொல்ல வேண்டும் என்று சொன்ன பொழுது மீண்டும் பலத்த கரவொலி!
திராவிடர் கழகத்திற்கு உள்ள வாய்ப்பும், உரிமையும் மற்ற கட்சிகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் ஓட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. அதனால் எந்த கருத்தையும் துணிவாக அவர்களால் சொல்ல முடிகிறது.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில்  காங்கிரஸ் இருந்தாலும், அவர்தான் கடைக்கோடி கிராமங்கள் வரை காங்கிரசை கொண்டு சென்றவர்  கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் அவர் களுக்கும் முன்னோடி பெரியார்தான் என்று குறிப்பிட்டார்.

எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

ஆசிரியர் அவர்களுக்கு எடுக்கப்படும் இந்த விழா வெறும் பிறந்த நாள் பாராட்டு விழா அல்ல; விடுதலை சந்தாக்கள் விழா, ஜாதி ஒழிப்புப் போராட்டமான அரசமைப்புச் சட்டத்தை கொளுத்திய அந்தப் போராட்டத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு - நினைவு இவற்றை முன்னிறுத்தி நடத்தப்படும் விழா என்பது எதையும் கொள்கைப் பூர்வமாக அணுகக் கூடியது திராவிடர் கழகம் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

'வியப்பின் மறுபெயர் வீரமணி' எனும் நூல் இங்கு வெளியிடப்பட்டது. உண்மைதான் இதனை அப்படியே நான் வழிமொழிகிறேன். இந்த வயதில் போர்க் குணத்தோடு ஆசிரியர் செயலாற்றி வருகிறாரே - அது என்ன சாதாரணமா? வியப்புக்குரியதுதானே!

பெரியார் இருந்திருந்தால்...

இயக்கத்தைக் கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார், கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார், கல்வி நிறுவனங்களைப் பெருக்கிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார் சார்பில் இப்பொழுது இருந்து, இவற்றை எல்லாம் பார்க்க நேர்ந்தால் எந்தளவு பூரித்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

'விடுதலை' சந்தா சேர்ப்பில் திராவிடர் கழகத் தோழர்கள் 67 லட்சம் ரூபாயைத் திரட்டி ஆசிரியரிடம் அளித்தனர். எனக்கு மிகப் பெரிய வியப்பாக இருக்கிறது. அரசியல் கட்சி திரட்டியது என்றால் அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை; பதவிக்காக செய்யக் கூடியவர்கள், ஆதாயம் பெறலாம் என்ற நிலையில் போட்டிப் போட்டுக் கொண்டு வசூலிப்பார்கள். அதற்குரிய ஒரு நோக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் எந்த ஒரு எதிர்ப் பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றும் தோழர்கள் 67 லட்சம் ரூபாயை திரட்டியிருப்பது பெரும் வியப்பான ஒன்றுதான்.

ஆசிரியரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் ஊக்கம் பெறுகிறேன். அவரை இரண்டாம் பெரியாராகப் பார்க்கிறேன். (கழகத் தலைவர் ஆசிரியர் தனது உரையில் இதுபற்றிக் குறிப்பிட்டதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும், தயவு செய்து என்னை இரண்டாம் பெரியார்  என்றெல்லாம் சொல்லாதீர்கள் - நான் பெரியாரின் தொண்டன்தான். புத்தர் ஒருவர்தான், இரண்டாம் புத்தர் கிடையாது, அம்பேத்கர் ஒருவர்தான், இரண்டாவது அம்பேத்கர் யாரும் கிடையாது - பெரியார் ஒருவரேதான் - இன்னொருவர் எவரும் பெரியார் ஆக முடியாது -பெரியார் ஒருவரே ஒருவர்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர்).

அவரோடு பல நேரங்களிலும் களத்தில் நான் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் உலகம் என்ற ஒன்றை உருவாக்கி வருகிறார் ஆசிரியர். இதெல்லாம் சாதாரணமான பணியல்ல!

ஜாதியைப் பாதுகாக்கும் பகுதி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காக அந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தி இருக்கிறார் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் நண்பர்தான்  அண்ணல் அம்பேத்கர் அதற்காக அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஜாதியை ஒழிக்க அரசு சட்டம் வழி செய்யவில்லை என்கிறபோது தனது நண்பர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்பதற்காக அவர் கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. பகிரங்கமாக எதிர்த்திருந்தார். அதற்காக திராவிடர் கழகத் தோழர்கள் மூன்றாண்டு காலம் வரை சிறையேகியிருக்கிறார்கள்.

ஜாதியை ஒழிக்கப் பயன்படாத சட்டத்தால் எப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்று கேட்டார்.
சட்டத்தை எரித்த

முதல் தலைவர் பெரியார்தான்

அரசமைப்புச் சட்டத்தை எரித்த முதல் தலைவர் தந்தை பெரியார்தான் அந்த சட்டம் உருவாக்கப்படத் தொடங்கிய காலந்தொட்டே, அது குறித்த விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

திருமாவளவன் பிறக்கும்முன்பே, திருமாவளவன்கள் விடுதலை பெற வேண்டும் என்கிற முறையில் பாடுபட்டுள்ளார்.

நாங்கள் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் பேசும் கருத்துகளையெல்லாம் 1950களிலேயே தந்தை பெரியார் பேசி இருக்கிறார்.

திருமாவளவனைப் பொறுத்தவரை பெரியாரைப் படித்தே, அம்பேத்கரை அறிந்தவன். எனது மாணவப் பருவம் 20 வயதுகளில் நான் வளர்ந்த இடம் பெரியார் திடல் தான். அந்த வகையில் பெரியார் மூலம்தான் அம்பேத்கரை அறிந்தேனே தவிர அம்பேத்கரைப் படித்து பெரியாரைத் தெரிந்து கொள்ளவில்லை.

அந்த தருமபுரியை மறக்க முடியுமா?

பெரியாரியலை எந்த நிலையிலும் விட்டுக் கொடுத்ததில்லை நமது தமிழர் தலைவர். தருமபுரி மாவட்டத்திலே சேரிகள் எரிக்கப்பட்ட பொழுது நான் கலங்கிப் போயிருந்தேன். அந்த நேரத்தில் எனக்குத் தைரியம் கொடுத்தவர் தமிழர் தலைவர்.
அந்த சம்பவம் நடந்த பத்தே நாள்களிலே அதே தருமபுரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி, அந்த

மேடையிலே திருமாவளவனைப் பேச வைத்தவர் தலைவர் ஆசிரியர் (பலத்த கரஒலி)

அன்றைய கால கட்டத்தில் ஆசிரியரைத் தவிர வேறு யார் முன் வந்தார்கள்? திராவிடர் கழகத்தைத் தவிர வேறு எந்த கட்சி முன்னெடுத்தது?

என்னை ஜாதி வெறியன் என்று தூற்றுகிறார்கள் - பழி போடுகிறார்கள். நான் ஜாதி வெறியனாக இருந்திருந்தால், என்னைப் பக்கத்தில் சேர்த்துக் கொள்வாரா தமிழர் தலைவர்?

நான் திமுகவின் கூட்டணியில் இருக்கும் பொழுதுதான் ஜாதி வெறியன் என்று தூற்றுகிறார்கள். திமுக கூட்டணியில் இல்லாமல் இருக்கும் பொழுது அமைதியாக இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் திமுக செயல் தலைவர்  தளபதி மு.க. ஸ்டாலின் முதல் அமைச்சராக வரக் கூடாது என்பதுதான்.

இடதுசாரிகளோடுகூட நான் பேசி இருக்கிறேன். மதவாத அரசியலை, வீழ்த்த வேண்டுமானால் இந்த நேரத்தில் காங்கிரசையும், பிஜேபியையுயும் இடதுசாரிகள் சமதூரத்தில்  வைத்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் அது மதவாத சக்திகளின் வெற்றிக்குத் துணை போவதாக ஆகி விடும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என்று கூறினார் எழுச்சித் தமிழர் திருமாவளவன்.

முன்னதாக இ.யூ.முசுலிம் லீக் மாவட்டத் தலைவர் எம். நூர் முகம்மது ஆசிரியருக்கு  வாழ்த்துகள் கூறிப் பேசினார்.

நிகழ்ச்சியில்

திறந்த வெளி மாநாட்டுக்கு பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் தலைமையேற்க, அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் வரவேற்புரையாற்றிட, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ராம்கண் (மறைந்த ஈரோடு எஸ்.ஆர். சாமி அவர்களின் பெயரன்) நன்றி கூறிட விழா இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. முன்னிலை வகித்தவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழநி.புள்ளையண்ணன், ஈரோடு மண்டல தலைவர் ப. பிரகலாதன், மண்டல செயலாளர் கோபி. இராசமாணிக்கம், ஈரோடு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. நற்குணம் மாவட்ட செயலாளர்

கு. சிற்றரசு, கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. சீனிவாசன், மாவட்ட செயலாளர் ந. சிவலிங்கம், நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்

அ.கு. குமார், மாவட்ட செயலாளர் வை. பெரியசாமி கோபி மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் நம்பியூர் மு. சென்னியப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் இராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'விடுதலை' 'உண்மை'யைப் படியுங்கள்  
விடுதலை சிறுத்தைகளுக்கு
எழுச்சி தமிழர் வேண்டுகோள்

"ஆவடியில் உண்மை வாசகர் வட்டத்தில் நான் பேசும்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டேன்; விடுதலைச் சிறுத்தைகள் 'உண்மை' சந்தாதாரராக ஆக வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். திராவிடர் கழகத்தின் கருத்துகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் தோழர்களின் அடிவேர்வரை சேரி மக்களின் ஆணிவேர் வரை செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். 'விடுதலை', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஏடுகளை விடுதலைச் சிறுத்தைகள் படிக்க வேண்டும் சந்தாதாரர் ஆக வேண்டும் என்று கூறிய எழுச்சித் தமிழர் ஈரோடு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக உண்மை இதழுக்கு ரூ.35,000 சந்தா தொகையை ஆசிரியரிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார் எழுச்சித் தமிழர்.

அன்பரசு -- தேன்மொழி இணையர் தாலியை அகற்றல்

முக்கிய பதிவுகள்
வாழ்க்கை இணையேற்பு விழா

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் காமலாபுரம் மு. சிசுபாலன் - செல்வராணி ஆகியோரின் அன்புமகன் சி. பகத்சிங்கிற்கும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் தொழுவூர் செயராமன் - சந்திரா ஆகியோரின் அன்பு மகள் செ. கிருட்டிணவேணிக்கும் 2.12.2017 அன்று ஈரோடு முப்பெரும் விழா மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். இது ஒரு  ஜாதி மறுப்புத் திருமணம்.

தாலி அகற்றம்

தோழர்கள் குடியாத்தம் அன்பரசு - தேன்மொழி இணையர் அடிமைத்தளையாம் தாலியை அகற்றி அதனைக் கழகத் தலைவரிடம் அளித்தனர்.

பெயர் சூட்டல்

ஈரோடு அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மணிகண்டன் - முத்துலட்சுமி இணையரின் குழந்தைக்கு சமூகநீதி என்று தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.

இசை ஒலிப் பேழை வெளியீடு

தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி கவிஞர்கள் கலி. பூங்குன்றன், அறிவுமதி, யுகபாரதி, காளமேகம் பாடல்கள் கொண்ட இசைப் பேழை வெளியிடப்பட்டது.

தமிழர் தலைவர் கி.வீரமணி 85-ஆம் பிறந்தநாள் சிறப்பு வெளியீடு கருஞ்சட்டை யுத்தம்

இசை: தாஜ் நூர்

1. வெற்றி வெற்றி என்று...
பாடல்: கவிஞர் கலி.பூங்குன்றன் -
குரல்: வேல்முருகன்

2. பெண்ணே உனது...
பாடல்: கவிஞர் யுகபாரதி -
குரல்: மீனாட்சி இளையராஜா

3. மானமும் அறிவும்...
பாடல்: கவிஞர் காளமேகம் - குரல்: ஆஜித்

4. அலை முட்டும்...
பாடல்: பாவலர் அறிவுமதி - குரல்: ஜெயமூர்த்தி

வெளியீடு: திராவிடர் கழகம்

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

இசைப் பேழையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ந. பெரியசாமி வெளியிட சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் பி. மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.

நூல்கள் வெளியீடு

1. நீதிமன்றங்களில் தந்தை பெரியார் வழக்குகள்/ வாக்கு மூலங்கள்/தீர்ப்புகள் - கி. வீரமணி.

2. ஆசிரியர் கி. வீரமணியின் வாழ்வியல் சிந்தனை முத்துகள் - பேரா. இரா. கலைச்செல்வன்.

3. வியப்பின் மறுபெயர் வீரமணி - மஞ்சை வசந்தன்.

4. ஆசிரியர் கி. வீரமணி தொண்டற வாழ்வு - தொகுப்பாசிரியர் மஞ்சை வசந்தன்.

5. Life and Happiness - Dr. K. Veeramani

6. Swimming against the Current. Dr. K. Veeramani

7. பெரியார் பகுத்தறிவாளர் நாட்குறிப்பு.

8. விடுதலை இரு மாத நாள்காட்டி 2018.
இந்த நூல்களை தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி. ச. இளங்கோவன் வெளியிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொ. திருமாளவன் பெற்றுக் கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner