முன்பு அடுத்து Page:

மானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்!

மானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்!

ஆசிரியர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில், ஜெனரல் பீட்டர்ஸ் சாலை பிரியும் சந்திப்பில் முக்கியமான இடத்தில் கலைஞர் சிலை நிறுவ, முறைப்படி நாங்கள் தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு மனுச் செய்து, அவர்களும் போக்குவரத்துத் துறை (Traffic Cell Clearance) யின் தடையின்மை, காவல்துறை அனுமதி முதலியவைகளையெல்லாம் பெற்ற பிறகு (G.O.) அரசு ஆணை வழங்கினர். அய்யா அவர்களிடத்தில் பயிற்சி எடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு எதையும்,  அதுதானே நடந்து விடும் என்கிற  (Take it....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 15:04:03

கட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி

கட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை, ஆக.14 திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலமின்றி கடந்த 7.8.2018 அன்று மாலை சென்னையில் இயற்கை எய்தினார். கலைஞர் மறைவையொட்டி, கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு, கழகத்தின் சார்பில் ஏழு நாள்கள் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஏழு நாள்கள் கழிந்த நிலையில் கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப்பேரணி கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே தந்தை....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 15:04:03

பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்கு…

பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருச்சி, ஆக. 14 திருச்சி, இலால்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10 மணியளவில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பேசுகையில், நமது இயக்கத் திற்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர்  கழக மாநாட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்து முடித்த தின் விளைவாக, இந்த....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 15:04:03

கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து  சென்னை மெரீனாவில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திற்கு திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ அமைதி ஊர்வலம் சென்று,  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர் (சென்னை, 14.8.2018). மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:43:02

பெரியார் பேருரையாளர் இறையனாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் பேருரையாளர் இறையனாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்

பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களது 13 ஆம் ஆண்டு நினைவு நாளன்று (12.8.2018) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது தலைமையில் இறையனார் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 12.8.2018). 50 ஆம் ஆண்டு திருமண நாள் - 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவண்ணாமலை....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:30:03

குடும்பம் குடும்பமாக வாரீர்!

குடும்பம் குடும்பமாக வாரீர்!

குறிப்பு: பிரபலமான இதயநோய் நிபுணரின் இந்த உரை முக்கியமானது - பயனுள்ளது - தவறாது கலந்து கொள்வீர். - தலைமை நிலையம் மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:05:03

முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மரியாதை

   முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மரியாதை

11.08.2018 அன்று மாலை 3 மணியளவில் தாம்பரம் நகரத்தில் தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகில் அனைத்து கட்சி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் அனைத்து கட்சி தலைவர்கள் கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:32:02

சென்னையில் ஆக.14 காலை 9 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதி ஊர்வலம்!

   சென்னையில் ஆக.14 காலை 9 மணிக்கு  திராவிடர் கழகத்தின் சார்பில்  அமைதி ஊர்வலம்!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் மறைவை யொட்டி ஒரு வார துக்க அனு சரிப்புக்குப் பின்னர் 14.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு சென்னை அண்ணா சாலை (சிம்சன் அருகே) தந்தை பெரியார் சிலையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, அண்ணா சாலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக கலைஞர் நினைவிடம் சென்று மலர்வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். கழகத்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 13:38:01

நாடும் மறக்காது! நன்றியுள்ள தமிழ் உள்ளங்களும் மறக்காது!!

நாடும் மறக்காது! நன்றியுள்ள தமிழ் உள்ளங்களும் மறக்காது!!

பொதுமக்கள் வரிப்பணத்தில் இயங்குகிற அரசு நூலகங்களில் அவர்கள் விரும்பும் நூல்களோ, ஏடுகளோ கிடைப்பதில்லை. மாறாக ஆளுங்கட்சிக்கு துதிபாடும் ஏடுகளும், நூல்களுமே இடம் பெறுகின்றன. குறிப்பாக பகுத்தறிவுச் சிந்தனையை, அரசியலமைப்புச் சட்டம் 51ஏ(எச்) பிரிவின்படி (நூலகங்களுக்குச் சட்டப்படி) வளர்க்கத் துணை நிற்கும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, Modern Rationalist போன்ற ஏடுகளையும், இன்னும் இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஏடுகளையும் தடை செய்வது எந்த விதத்தில் நியாயமென்று புரியவில்லை. இந்த லட்சணத்தில்....... மேலும்

11 ஆகஸ்ட் 2018 17:04:05

உயர்கல்வியில் இன்றைய சவால்கள் - கருத்தரங்கம் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை

உயர்கல்வியில் இன்றைய சவால்கள் - கருத்தரங்கம் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை

புதுச்சேரி, ஆக. 11 புதுச்சேரி மண்டல பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் 5.8.2018 அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை உயர் கல்வியில் இன்றைய சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரி மண்டல பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் கே.வி.இராஜன் வரவேற்புரையாற் றினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல பொதுக்குழு....... மேலும்

11 ஆகஸ்ட் 2018 16:39:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, டிச.4 தூத் துக்குடியில் "உண்மை" வாசகர் வட்டம் தொடக்கம் தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கில் விழா நடைபெற்றது.

25.11.2017 அன்று மாலை சரியாக 6 மணிக்கு விழா தொடங்கியது. உண்மை வாசகர் வட்டச் செயலாளர் ச.காசி அனைவரையும் வர வேற்றும் தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமையேற்றும் உரையாற்றினார்கள்.

சிறப்புரையாக, ‘குறள் வழிச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் உலகத் திருக்குறள் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோ.அன் பழகன் உரையாற்றினார்.

அவர்தம் உரையில், திருக்குறள் ‘வீடு' பேறு என்ற ஒன்றினை ஏற்காது, வாழ்வ தற்கு அறம், பொருள், இன்ப மெனும் மூன்று உறுதிப் பொருளினை வலியுறுத்திக் கூறிய நூல் என்றார். எவர் எது சொன்னாலும் உண்மைப் பொருளை அறிந்து ஏற்றுக் கொள்வது; வாய் + மெய் பேசுவதே மனித வாழ்வு; மக்கள் சமூகம் ஏற்றுக்கொண்ட நற்செயல்களைச் செய்தால் சடை வளர்த்தல், நீட்டல் வேண்டாம் என்றார்.

எல்லா உயிர்களும் பிறப் பில் ஒன்றே என்பதும், அந் தணர் என்போர் அறஞ்செய் வோரே, பிற உயிர்களை வருத் துவோரல்லர் என்பதும் உண் டது செரிமானம் ஆனபின் உண்டால் உடலுக்கு மருந்தே வேண்டாமென்பதும், பிறர் செய்த உதவியை என்றும் மறவாதிருப்பதும், பெரியோர் அரிய செயல்களையும் செய்து முடிக்கக் கூடியவரென்பதை யும், வானிலிருந்து நீர்த்துளிகள் வீழவில்லையாயின் உலகே பசியால் செத்துவிடுமென்பதும், திருவள்ளுவரின் கருத்தாகு மென்றார். பாரதிதாசனார், அண்ணா, கண்ணதாசன், கலைஞர் ஆகியோர் தங்கள் இலக்கியங்களில் திருக்குறளை எடுத்தாண்டுச் சிறப்பித்துள் ளனர் என்று கூறினார்.

தந்தை பெரியார் அவர்கள் திருக்குறளுக்காக மாநாடு கூட்டி அதனை மக்கள் இலக் கியமெனப் பறைசாற்றியவர் என்றார். பேச்சாளர்கள் கையா ளும் சொற்கள் கூட பிறரின் சொல் வென்றிடாதவாறு சொற் களைக் கொண்டு பேச வேண் டுமெனக் கூறியவர் திருவள் ளுவர் என்றார். திருவள்ளுவரின் பிறப்பையே கலைஞர் ‘தமிழ்ப் புத்தாண்டு' என அறிவித்தார். அதுவே தமிழரின் வரலாற்றுச் சான்றும் கூட என்றார். இன்பத் துப்பாலில் கூட ‘ஊடல்' போராக மாறாது உப்பைப் போல் ஊடி ஒன்று கூடிடும் உறவாக இருக்க வேண்டுமென் பதை மென்மையாக எடுத்துக் கூறுவது திருக்குறள் எனச் சிறப்பாக விளக்கிக் கூறினார்.

மாவட்டப் ப.க. தலைவர் ச.வெங்கட்ராமன் நன்றி கூறிடச் சரியாக குறித்தபடி இரவு 8 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் மு.முனி யசாமி முன்னிலை ஏற்றார். நெல்லை மாவட்டத் தலைவர் இரா.காசி, செயலாளர் ச,இரா சேந்திரன், மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, இரா.பானுமதி, பொதுக்குழு உறுப் பினர் பெ.காலாடி, மாவட்ட கழக துணைத்தலைவர் பொ.செல்வராஜ், மாவட்ட ப.க. செயலாளர் மா.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் த.செல்வராசு உட்படத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner