முன்பு அடுத்து Page:

ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

   ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற  திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

    ஈரோடு, ஜூன் 17 திராவிட மாணவர் கழகத் தின் ஈரோடு மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம் 9.6.2018 அன்று காலை 10.30 மணியவில் ஈரோடு பெரியார் மன்றத்திலும், நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 6 மணியளவில் குன்னூர் ஆசியன் சுற்றுலா தங்கும் விடுதியிலும் துவங்கி நடைபெற்றது. நிகழ்வுகளில் எதிர்வரும் சூலை 8ஆம் தேதியன்று கும்பகோணத்தில் நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இவ்விரு....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

கபிஸ்தலம், ஜூன் 16- 9.6.2018 சனி மாலை 6.00 மணிக்கு குடந்தை கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ஜூலை 8 திராவிட மாணவர் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சரியாக 6.30 மணியிலிருந்து மந்திரமா? தந்திரமா? நிகழ்வு குடந்தை ஜெயமணிகுமார் அவர்களால் நடத்தப்பட்டது.     கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வால் பொதுமக்கள் ஆங் காங்கே நின்றுகொண்டு கூட்டத்தினை கண்டனர். மந்தி ரமா? தந்திரமா? நிகழ்வு நடை பெற்றபோது மக்கள் நெருங்கி கவனித்தனர். தொடர்ந்து....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

குடியரசுத்  தலைவரை அவமதிப்பதா?

தாழ்த்தப்பட்டோர் என்பதால் கோவிலுக்குள் நுழைய விடாமல் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, ஜூன் 16  இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ் தானில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல்  தடுக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருப்பூர் இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ்தானில் கோவி லுக்குள் நுழைய தடுக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

காரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது

காரைக்குடியில் சிந்தனைக்களம்  முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது

காரைக்குடி, ஜூன் 16- காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் 09.06.2018 அன்று சனிக் கிழமை 5 மணி அளவில்  சிந்த னைக்களம் என்ற பெயரில் ஆய்வரங்க அமர்வு தொடங்கப் பட்டது. நிகழ்வுக்கு மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பேராசி ரியர் அ.மார்கஸ் தொகுத்த 'கல்விச் சிந்தனைகள் -பெரியார் என்ற நூலினை தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை தலைவரும், தேவகோட்டை ஒன்றிய ப .க. தலைவருமான அ.அரவரசன்....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு கலந்துரையாடல்

கல்லக்குறிச்சி, ஜூன் 16- வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி நடை பெறவுள்ள திராவிடர் எழுச்சி மாநாடு தொடர்பாக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 11.6.2018 கல் லக்குறிச்சி நெற்காடு எலக்ட் ரிக்கல் மாடியில் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலை மையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் குழ. செல்வராசு வரவேற்புரையாற் றினார். மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் மாநாடு சிறப்பாக நடைபெற தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி கருத்துரை....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!

மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!

மதுரை, ஜூன் 16- 09.06.2018 அன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் அரங்கத்தில் மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 65வது நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தங்கினார். விடுதலை வாசகர் வட்டத் தின் செயலாளர் பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரி. ச. பால் ராசு, வரவேற்புரை நிகழ்த்திய தோடு விடுதலையின் 84ஆவது ஆண்டுகால சாதனையை விவ ரித்து உரையாற்றினார். நிகழ்ச் சிக்கு முன்னிலை....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை நடத்தும்

அரசியல் ஆவணப்படங்கள் - பயிற்சிப்பட்டறை அரசியல் ஆவணப்படங்கள் பற்றிய ஒரு அறிமுகம், அதன் பன்னாட்டு, இந்திய, மாநில அளவிலான வரலாறு, அதன் வகைகள், அதற்கான இன்றைய தேவை, தமிழகத்தில் இன்றைய அரசியல் சூழல், ஆவணப் படங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நமது கூட்டுச் செயல்பாட்டிற்கான திட்டமிடல் என்கிற தலைப்பு களில் 9 அமர்வுகள் கொண்ட, ஆவணப்பட இயக்குனர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறையில் ஆர்வம் இருப்போரை கலந்து கொள்ள அழைக்கிறோம். இது....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

தீர்மானங்கள்- முக்கிய வேண்டுகோள்!

தீர்மானங்கள்- முக்கிய வேண்டுகோள்!

ஜூலை 8 இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு வரும் ஜூலை 8 ஆம் தேதி கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு - மாநில மாநாடாக நடைபெற உள்ளது. அந்தக் கும்பகோணத்தில்தான் முதலில் திராவிட மாணவர் கழகமே தோற்றுவிக்கப்பட்டது. அதனால்தான் அதன் பவள விழா மாநாடு அதே கும்பகோணத்தில். இம்மாநாட்டில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கழக மாணவர்கள், பொறுப்பாளர்கள், தோழர்கள் மாநாட்டில்....... மேலும்

15 ஜூன் 2018 15:00:03

சிவகங்கையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

சிவகங்கையில்  தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

திருப்பாச்சேத்தி நகரில் சிவகங்கை மண்டல கழக செயலாளர் அ. மகேந்திரராசன், மாவட்ட கழக தலைவர் பெ.ராசாராம், மாவட்ட செயலாளர் ச. அனந்தவேல், பொதுக்குழு உறுப்பினர் உ. சுப்பையா, வெ. அக்கினி, அ. புகழேந்தி, மதுரை சிவகுருநாதன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், ஊர் பொது மக்களும் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். (11.6.2018). மேலும்

14 ஜூன் 2018 16:16:04

"திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் திரளாக பங்கேற்போம்"

கிருட்டினகிரி கலந்துரையாடலில் தீர்மானம் கிருட்டிணகிரி, ஜூன் 14- கிருட்டி ணகிரி மாவட்டம் திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் கிருட்டிணகிரி விடு தலை வாசகர் தலைவர் நாரா யணமூர்த்தி அலுவலகத்தில் 10.6.2018 அன்று மாலை நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மு. துக்காராம், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் முன்னிலை வைத்தனர். திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் க.கா.வெற்றி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கதிர வன் கடவுள்....... மேலும்

14 ஜூன் 2018 15:59:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி

பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் மனித நேய மருத்துவ தொண்டறப் பணிகள்

சென்னை, டிச. 6- சென்னை பெரியார் திட லில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் டாக்டர் எம்.இராதாகிருஷ் ணன் (கண் மருத்துவர்) இம்முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் மகளிர் நோய் இயல், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரக இயல் ஆகிய துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்தி ருந்த பொதுமக்களுக்கு இலவச மருத் துவ சேவைகளை வழங்கினர். இதில் கலந்து கொண்டு சிறப்பித்தோர் விபரம்:

போசிரியர் டாக்டர் எம்.இராதா கிருஷ்ணன் (மேனாள் இயக்குநர், அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை), டாக்டர் கே.அறிவாழி -(காது, மூக்கு, தொண்டை நிபுணர்), டாக்டர் சி.மீனாம் பாள் (ஒருங்கிணைப்பாளர், மகளிர் நோய்இயல் மற்றும் குழந்தைகள் நலம், பெரியார் மருத்துவமனை, சென்னை), டாக்டர் மித்ரா (பல் மருத்துவ நிபுணர்), நிலைய மருத்துவர் திருமதி தங்கம் தியாகராஜன், வாசன் அய்கேர் நிறுவ னத்தில் இருந்து ஆர்.ஜி.ஸ்டோன் ஆகி யோர் மருத்துவக் குழுமத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

திருச்சி

சுந்தர் நகரில் அமைந்துள்ள பெரி யார் மருத்துவமனையில் 2.12.2017 அன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் மருத்துவ சிகிச்சைகளை மேற் கொண்டனர். இம்மருத்துவ முகாமில் டாக்டர் முனவர் சுல்தானா, திருமதி யாமினி ஆகியோர் கலந்து கொண்ட 120 பயனாளர்களுக்கு மருத்துவ சேவையை வழங்கினர்.

திருவாரூர்

பெரியார் மருத்துவ மனையில் 2.12.2017 அன்று சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் வந்திருந்த 77 பயனாளர்களுக்கு டாக்டர் பஞ்சாட்சரம் அவர்கள் மருத் துவசேவையினை வழங்கினார்கள்.

திருவெறும்பூர்

பெரியார் மருத்துவமனையில் 3.12.2017 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை யொட்டி பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக்டர் சுகு மாரன், டாக்டர் சிவக்குமார், டாக்டர் தியாக ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வந்திருந்த 204 பயனாளர்களுக்கு இல வச மருத்துவ சிகிச்சையளித்தனர்.

சேலம்

தமிழர் தலைவரின் 85ஆவது பிறந்த நாளையொட்டி சேலம் மரகதம் மாரி யப்பன் மருத்துவமனையில் (பெரியார் மருத்துக்குழுமத்துடன் இணைந்தது) இலவச பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக் டர் ராமநாதன் மற்றும் டாக்டர் சந் திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு 22 நபர்களுக்கு சிகிச்சையளித்தனர்.

மேற்கண்ட இலவச மருத்துவ முகாம் கள் சென்னை, திருச்சி, திருவெறும்பூர், திருவாரூர் (சோழங்க நல்லூர்), சேலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பெரி யார் மருத்துக் குழுமத்தில் இணைந் துள்ள மருத்துவ மனைகளின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85ஆவது பிறந்த நாளை யொட்டி நடை பெற்ற இம்முகாம்களில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து மருத்துவ வல்லு நர்களுக்கும் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் மருத்துவக் குழுமத்தை நிறுவி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சேவை களை வழங்கி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் 100 ஆண்டு கடந்து வாழ வேண்டும் என்பதே நம் அனை வரின் ஒட்டு மொத்த விருப்பமாகும்.

- டாக்டர் ஆர்.கவுதமன்

இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner