முன்பு அடுத்து Page:

நீட் தேர்வை எங்களிடம் நீட்ட வேண்டாம்!

நீட் தேர்வை எங்களிடம் நீட்ட வேண்டாம்!

ஆவடி, மே 26 உண்மை வாசகர் வட்டத்தில், டி.ஆர்.ஆர். செங் குட்டுவன் நீட் தேர்வின் கேடு களையும், ஏற்கனவே தமிழ்நாடுசுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவதையும் சுட்டிக்காட்டிப் பேசும் போது, “நாங்கள் இந்தியா வில்தான் இருக்க எண்ணுகிறோம். மீண்டும் எங்களை பிரிவினை யைப் பேசத் தூண்டாதீர்கள்” என்று குறிப்பிட்டார். ஆவடி மாவட்டம் பெரியார் மாளிகையில் மாதந்தோறும் நடைபெறும் உண்மை வாசகர் வட்டம்  13-.05.2018 அன்று காலை 11 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில்,....... மேலும்

26 மே 2018 15:42:03

மது போதையும் மறுவாழ்வும்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

மது போதையும் மறுவாழ்வும்: விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே 26 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை மற்றும் சிறீவிக்டோரியா மதுபோதை மறுவாழ்வு மய்யம் இணைந்து நடத்திய மதுபோதை மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி கண்டிதம்பட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. சமூகப்பணித்துறை முதலமாண்டு மாணவி பி.தமிழ்த் தென்றல் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் முதல் முறையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கண்டிதம்பட்டு பஞ்சாயத்து அளவிலான கூட் டமைப்பு செயலாளர், அ.செபஸ்டி அம்மாள் நன்றி தெரிவித்தார்........ மேலும்

26 மே 2018 15:38:03

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வடக்குத்து, மே 24 வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம் 21.5.2018 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மண்டல மகளிரணி செயலாளர் இரமாபிரபா ஜோசப், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்குத்து சி.தர்மலிங்கம், மாவட்ட....... மேலும்

24 மே 2018 16:38:04

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

புதுக்கோட்டை, மே 24 புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் கடைவீதியில் தந்தை பெரியார் 139-ஆவது பிறந்தநாள் விழா தெரு முனைக் கூட்டம் 22.5.2018 அன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட் டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன் தலைமை வகித்தார். ப.க. தோழர் ஆ.க. ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட் டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலை....... மேலும்

24 மே 2018 16:38:04

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக நடத்தப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 128ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்புக்கூட்டத்தில் புரட்சிக்கவிஞரின் ஒளிப்படத்தினை மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி திறந்து வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், முனைவர் ஏ.தானப்பன், பி.எல்.இராமச்சந்திரன் மற்றும் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 23.5.2018) மேலும்

24 மே 2018 15:56:03

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

நாகர்கோவில், மே 23- கன்னியா குமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட் டம் 14.4.2018 காலை 10 மணிக்கு நாகர்கோவில்,ஒழுகினசேரி  பெரியார் மய்யத்தில் நடந்தது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே. ரி. ஜூலியஸ் தலைமை தாங்கி னார்.  செயலாளர் ச.பழனி சங் கர நாராயணன், அமைப்பாளர் இரா.லிங்கேசன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் பரிமள செல்வி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நிலை குறித்த தலைப் பில்....... மேலும்

23 மே 2018 17:53:05

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

திருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு....... மேலும்

23 மே 2018 17:53:05

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

கருங்கல், மே 23- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மை யார் நினைவு நாள் பொதுக்கூட்டம்  17.03.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் வரவேற்று பேசி னார். கிள்ளியூர் ஒன்றிய தலை வர் தெ. சாம்ராஜ் தலைமை தாங்கினார். தக்கலை ஒன்றிய தலைவர் ராஜீவ் லால், பகுத் தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ்....... மேலும்

23 மே 2018 17:16:05

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, மே 23- காரைக்குடி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத் தின் வன்கொடுமையிலிருந்து எஸ்.சி,எஸ்.டி,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப் பாட்டம் அய்ந்து விளக்கில் நடைபெற்றது. வி.சி.க.வடக்கு மாவட்ட செயலாளர் சங்கு.உதயகுமார் தலைமை வகித்தார். மாநில இ.அ.து.செயலாளர் சி.சு. இளைய கவுதமன் முன்னிலை வகித்தார். தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் கே.எஸ். எம்.மணிமுத்து, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.குண சேகரன், ம.தி.மு.க.மாவட்ட....... மேலும்

23 மே 2018 17:16:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம், பிப்.1 காஞ்சிமண்டல திராவிடர் கழகச் செயலாளர் காஞ்சி கதிரவன் - ஆசிரியர் தமிழ்  (எ) உஷா இணையரின் ‘ பெரியார் இல்லம், ‘அறிமுக விழா, காஞ்சிபுரம்- வையாவூர் சாலையில் உள்ள எச்.எஸ் அவென்யூ குடியிருப்புப் பகுதியில்  26.1.2018  அன்று காலை 9.00  மணியளவில்  காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி அசோகன் தலைமையில் நடை பெற்றது.

பெற்றோர்களுக்கு முதல்மரியாதை

கதிரவன் - -உஷா இணையரின் பெற்றோர்கள் பாவாடை -- உண் ணாமலை, ரங்கநாதன் - - அம்சா ஆகியோர்,  கழகத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந் திருக்க   பெரியார் இல்லத்தைத் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரி யார் பிஞ்சுகள் உ.க. அன்பரசி, உ.க. அறிவரசி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப்  பாடினர்.   காஞ்சி கதிரவன் தம் வரவேற்புரையில் , எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை ; மத நம்பிக்கை இல்லை; ஜாதி நம்பிக்கை இல்லை; மூடநம்பிக் கைகள் இல்லை; தன்னம்பிக்கை உண்டு; பகுத்தறிவு உண்டு;  தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வு உண்டு  என்று குறிப் பிட்டு அனைவரையும் வரவேற் றார்.

காஞ்சி மண்டல திராவிடர் கழகத்  தலைவர் பு. எல்லப்பன், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கி. இளையவேள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     திராவிடர் கழகக்கொடி பெரியார் இல்லத்தின் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்ட கொடிக்கம் பத்தில் ஏற்றப்பட்டது.   திரா விடர் கழக அமைப்புச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண் டோ சங்கச் செயலாளரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பி னருமான சி.வி.எம்.அ. சேகரன், மாநில தேகுவாண்டோ சங்கப் பொதுச்செயலாளரும் இந்தியா வின் மிகமூத்த பயிற்றுருமான மாஸ்டர் ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் உரைக்குப்பின் திரா விடர் கழக துணைத்தலைவரும் விடுதலை நாளேட்டின் பொறுப் பாசிரியருமான ‘நடமாடும் பெரியார் கணினி ‘கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பெரியார் இல்ல அறிமுக உரையாற்றினார்.

கவிஞர் தம் உரையில், ‘கதிர வன் குடும்பத்தினரின் கொள்கை உறுதியைக் குறிப்பிட்டுவிட்டு, பெரியாரின் தொண்டு, பெரியா ரால் சமுதாயம் அடைந்துள்ள ஏற்றங்கள் , மொழி உணர்வுடனும் இனஉணர்வுடனும் நாம் வாழ வேண்டியதன் அவசியம், தமிழர் உரிமைகாக்க திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்  கி.வீரமணி  அவர்களின் செயற் பாடுகள்’ முதலியவை குறித்து எளிமையாக மக்கள் மனதில் பதியுமாறு குறிப்பிட்டார்.

படத்திறப்புகள்

இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் சிந்தனையாளர் என்று பெரியாரால் குறிப்பிடப்பட்ட புத்தர் ,  பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர், பச்சைத் தமிழர் காமராசர், தேகுவாண்டோ என்ற கொரிய தற்காப்புக்கலையை வடிவமைத்த மாஸ்டர் ஜெனரல் சாய் ஹாங்கி ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப் பட்டன.

‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் நூல் அனைவருக்கும் வழங்கப் பட்டது. சிறப்பு விருந்தினர் களுக்கு தமிழர் தலைவரின் ‘வாழ்வில் சிந்தனைகள்’ நூல் வழங்கப்பட்டன.      உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பி னரும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளருமான க. சுந்தர்,  மாநில திமுக மாணவரணி  செய லாளரும்,   காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண் டோ சங்கத்தின் தலைமைப் புரவல ருமான வழக்குரைஞர் சி.வி. எம்.பி. எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும் காஞ்சிபுரம் மாவட்ட தேகுவாண்டோ சங்கப் புரவலருமான மருத்துவர் உ.சோபன்குமார் , திமுக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன்,  காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செங்கை பூ. சுந்தரம், மாவட்ட துணை செய லாளர் இ.ரவிந்திரன்,  மண்டல மாணவரணிச் செயலாளர் அர்ஜுன், மாவட்ட இளைஞ ரணித்  தலைவர்  மு. அருண் குமார், பிள்ளையார் பாளையம் சுப்பிரமணியன் ,  குடும்ப நண் பர்கள் விஜயகுமார், தேவேந் திரன், யவனமுருகன் மற்றும் இயக்கத் தோழர்கள், தேகு வாண் டோ சங்கத்தவர்கள் , குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

பார்ப்பனரில்லாமல், சமஸ் கிருத மந்திரமில்லாமல், பசு மாடில்லாமல், பூசணிக்காய் உடைக்காமல், திருஷ்டி பொம் மை கட்டாமல் நடந்த பெரியார்  இல்ல அறிமுக விழாவை அப்பகுதி மக்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரும் வியப்புடன் பார்த்து,  கவிஞரின் உரையை வெகுவாகக் கவனித்தனர்.

பெரியார் இல்ல அறிமுக விழா பகுத்தறிவுக் கொள்கை விழாவாக நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner