முன்பு அடுத்து Page:

.பெரியாரை எதிர்த்து அழிக்க முடியாதவர்கள் - அணைத்து அழிக்க முயல்கிறார்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லக்…

.பெரியாரை எதிர்த்து அழிக்க முடியாதவர்கள் - அணைத்து அழிக்க முயல்கிறார்கள்  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு

தியாகதுருகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அழைப்பு   தியாகதுருகம், மே 22- பெரியாரை எதிர்த்து அழிக்க முடியவில்லை. பெரியாரை அணைத்து அழிக்கலாம் என்பதுதான் அவர்களுடைய திட்டம்; அதனை எதிர்த்து செயல்படவேண்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம் பயன்படுகிறது. உங்களுக்கு இதை மேலும் விளக்குவதற்கு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கல்லக்குறிச்சியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி....... மேலும்

22 மே 2018 17:20:05

கழகக் களத்தில்...!

23.5.2018 புதன்கிழமை சிவகங்கை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிங்கம்புணரி: காலை 11 மணி * இடம்: சிறீராம் லாட்ஜ், சிங்கம்புணரி * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.சு.கண்மணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.இன்பலாதன் (வழக்குரைஞரணி), சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), பெ.இராசாராமன் (மாவட்டத் தலைவர்,), ச.ஆனந்தவேல் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு....... மேலும்

22 மே 2018 16:49:04

குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் அய்நூறு மாணவர்கள் பங்கேற்க தஞ்சை மாணவர் கழகம் ம…

குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் அய்நூறு மாணவர்கள் பங்கேற்க தஞ்சை மாணவர் கழகம் முடிவு

தஞ்சாவூர், மே 21 தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2018 அன்று காலை 11 மணிக்கு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.தமிழ்ச் செல்வம் வரவேற்று உரையாற் றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார் பங்கேற்று மகளிரணி, இளைஞரணி மாநாடுகள் எழுச்சியோடு நடை பெற்றது. அது போன்று மாணவர் கழக மாநில....... மேலும்

21 மே 2018 16:03:04

கழக செயலவைத்தலைவர் நடத்தி வைத்த செந்தில்வேல் - ராஜேஸ்வரி இணைஏற்புவிழா!

கழக செயலவைத்தலைவர் நடத்தி வைத்த செந்தில்வேல் - ராஜேஸ்வரி இணைஏற்புவிழா!

காஞ்சிபுரம், மே 21- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கழக செயல வைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதைத் திரும ணம் 20.5.2018 ஞாயிறு காலை 10 மணி யளவில் ஓரிக்கை, மிலிடெரிரோட்டில் உள்ள தனலட்சுமி ஜெயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் மு. செந்தில்வேல் தஞ் சையில் துணைவட்டாட்சியராகப் பணியாற்றும் செந்தில்குமார் அவர்க ளின் தங்கை ரா.ராஜேஸ்வரி ஆகியோ ரின் வாழ்க்கை இணை ஏற்பு....... மேலும்

21 மே 2018 15:59:03

திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்

திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்

பட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 17.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை நகரம் அறந்தாங்கி முக்கம் மற்றும் அழகிரி சிலை அருகில் ஆகிய இடங்களில்   நடைபெற்ற கூட்டத்தில் கடலூர் திராவிடன் மற்றும் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினர். மேலும்

21 மே 2018 15:59:03

மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி

மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி

16.5. 2018  அன்று செங்கிப் பட்டியில் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. மேலும்

21 மே 2018 15:59:03

ப.சங்கரநாராயணனின் நினைவேந்தல் கூட்டம்

ப.சங்கரநாராயணனின் நினைவேந்தல் கூட்டம்

நாகர்கோயில், மே 21- பெரியார் பெருந்தொண்டர், திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட மேனாள் தலைவர் ப.சங்கர நாராயணன் அவர்கள்  3 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம். 16.5.2018 அன்று மாலை 5 மணிக்கு குமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நாகர் கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார்.  நகர துணை தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது முன்னிலை....... மேலும்

21 மே 2018 15:59:03

பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல்

மே 29 - பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல் - தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் சுற்றுப்பயணம் 25.5.2018 வெள்ளிக்கிழமை: முற்பகல் 12 மணி - மன்னார்குடி, பிற்பகல் 2 மணி  - நீடாமங்கலம், மாலை 4 மணி - கும்பகோணம்,  மாலை 6 மணி - பாபநாசம், இரவு 7 மணி, சாலியமங்கலம் 26.5.2018 சனிக்கிழமை: காலை 10 மணி - பேராவூரணி, முற்பகல் 12 மணி....... மேலும்

21 மே 2018 15:59:03

தி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' இதழ் வாசகர் வட்ட மாநிலத் தலைவராக டாக்டர் இரா.செந்தில் எம்.எஸ்.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' இதழ்  வாசகர் வட்ட மாநிலத் தலைவராக டாக்டர் இரா.செந்தில் எம்.எஸ்.

தமிழர் தலைவர் அறிவிப்பு தருமபுரி டாக்டர் இரா.செந்தில் M.S.,M.CH., FRCS அவர்கள் தி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' வாசகர் வட்டம் ஆகியவற்றிற்கான மாநிலத் தலைவராகக் கடமையாற்றுவார் என்று தருமபுரியில் 15.5.2018 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும்

21 மே 2018 15:06:03

கா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு

கா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சென்னை, மே 20- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்குரல் ஒலித்தவரும், பவுத்தம் வளர்த்து ஆரியம் வீழ்த்தியவரும், 1907ஆம் ஆண்டில் ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் தமிழ் ஏட்டைத் தொடங்கி, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி தமிழுணர்வு வளர்த்தவருமான பெருந்தகையாளர் கா.அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் 173ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு, சேத்துப்பட்டு - பிருந்தாவன், எஸ்.எம். நகர், அண்ணல் அம்பேத்கர் திடலில் உள்ள அன்னாரது சிலைக்கு வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில்....... மேலும்

20 மே 2018 16:32:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, பிப்.3, புதுச்சேரி மாநில திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.1.2018 அன்று அரியாங் குப்பம் ஏவிஆர்கே திருமண மகாலில் காலை 11 மணியளவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் புதுச்சேரி மாநில தி.க. தலைவர் சிவ.வீரமணி வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் இர.இராசு, செயலர் அறிவழகன், புதுச்சேரி மு.ந.நடராசன், ஆடிட்டர் இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் பழனி, விலாசினி, ஆசிரியரணி கி.வ.இராசன், வில்லியனூர் கொம்யூன் தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், ப.க. புரவலர் இரா.சடகோபன், த.கண்ணன், முகமது நிஜாம், காரை சிறீதேவி, மகளிரணி சரஸ்வதி, புதுச்சேரி நகராட்சி அமைப்பாளர் மு.குப்பு சாமி, இருசாம்பாளையம் செ.இளங்கோவன், அரியங் குப்பம் கொம்யூன் திராவிடர் கழக தலைவர் பூரணாங் குப்பம் இரா.ஆதிநாராயணன் ஆகியோர் கருத்துரைக்கு பின்கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், புதுச்சேரி கழக வளர்ச்சி பணிகள்குறித்து கருத்துரையாற்றினார். இறுதியாக தமிழர் தலைவர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் புதுச்சேரி திராவிடர் கழகத்தில் கழக முன்னோடிகளின் பெயர்களை குறிப் பிட்டு அவர்கள் எவ்வாறெல்லாம் இயக்க வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள் என்றும் புதுச்சேரியில் புரட்சி கவிஞர் காலத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் தாம் சிறு வயதில் கலந்துகொண்டதை மிகவும் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்.

மேலும் புதுச்சேரி திராவிடர் கழக நிர்வாகிகள் கோபப்படாமல் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி இயக்க பணிகள் செவ்வனே செய்ய வேண்டும் என்றும் மகளிரணி, இளைஞரணி அமைப்புகளை கிராமங்கள் தோறும் அமைத்திட வேண்டும் என்றும் உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் அனைத்து போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்த ஆயத்தமாக  இருக்க வேண்டும் எனவும், புதுச்சேரியில் கழக பணி சிறப்பாக இருப்பதை பாராட் டியும் சிறப்புரையாற்றினார். (கழக தலைவரின் உரை விடுதலையில் வரும்)

திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: புதுச்சேரி மாநிலத்தில் கொம்யூன் வாரி யாக கழக அமைப்புகளை ஏற்படுத்துவது, பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது.

தீர்மானம் 2: இயக்கத்தின் போர்வாளாம் விடுதலை நாளிதழ் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் அதிக அளவில் ஈடுபட்டு புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சந்தா திரட்டி தருவது

தீர்மானம் 3: புதுச்சேரி மாநிலத்தில் திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி அமைப்புகளை வலுப்படுத்து வது, பெரியாரியல் கருத்தரங்குகளை நடத்துவதுஎன தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4: தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமபுற மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை எதிர்த்து தீவிரமாக போராடுவது, நீட் தேர்வை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி, புதுவை மாநில முதல்வரை இக்கலந்துரையாடல் கூட்டம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.

கலந்துரையாடல் கூட்டத்தில் புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக புரவலர் இரா.சடகோபன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி கழக அமைப்பாளர் கே.குமார், புதுச்சேரி கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவ ழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, டிஜிட்டல் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த.கண்ணன், அமைப்பாளர் மு.குப்புசாமி, வில்லியனூர் கொம்யூன் தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், உழவர்கரை நகராட்சி அமைப் பாளர் ஆ.சிவராசன், துணை அமைப்பாளர் கா.நா.முத்துவேல், கல்லக்குறிச்சி பெரியார் பெருந்தொண்டர் கல்லை மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன், எஸ்.என்.எஸ்.நெடுஞ்செழியன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி இளை ஞரணி தலைவர் திராவிட இராசா, புதுச்சேரி மாணவரணி தலைவர் மணிபாரதி, பகுத்தறிவு ஆசிரியரணி அரியூர் கி.வ.இராசன், வெங்கடேசன், கதிர்காமம் ஆறுமுகம், கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், ஆசிரியர் யேசுராஜ், சேதராப்பட்டு ஏ.சிவக்குமார், காட்ராம்பாக்கம் கிளைக்கழக தோழர்கள் தி.க.அன்பரசன், சிவகவுரி, சிறீதர், வே.ப.மாரிமுத்து, இரா.விஜய், பெ.பிரேம்குமார், க.செல்லமணி, கோ.இராஜேஷ், புதுச்சேரி ஜீவன் சார்வாகன், தமிழர் தேசிய இயக்கம் இரா.அழகிரி, பெரியார் பெருந்தொண்டர் பொ.தட்சிணாமூர்த்தி, அ.வீரசேகரன், கலைமாமணி வி.பி.மாணிக்கம், காந்தி நகர் மன்னாதிலிங்கம், சஞ்சய்காந்தி நகர் பீம.கிருஷ்ண மூர்த்தி, அரியாங்குப்பம் கு.பாஸ்கர், முதலியார்பேட்டை இராமதாஸ், காண்ட்ராக்டர் வெங்கடேசன், பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, வெற்றி வேல், புதுச்சேரி மகளிரணி தோழர்கள் சரஸ்வதி தீனத யாளன், விமலா சிவராசன், தேவகிபழனி, பொற்செல்வி இளங்கோவன், மாலதி நெடுஞ்செழியன், சித்ராதேவி சக்திவேல், தமிழரசி சுந்தர், சுமதிகுமார், திவ்யா செல்ல மணி, சிவகாமி சிவக்குமார், பானுமதி கண்ணன், கிருபா சினி இராசா, லலிதா இராசன், கலைவாணி ஆதிநாராயணன், சுலோக்சனா, பெரியார் பிஞ்சுகள் இரா.இளவரசி, இரா.காவியா, தீ.கிஷோர், தி.இரா.பிரபாகரன், தி.இரா.அன்புச்செல்வன், கு.ஈழவன், கு.இனியவன், ப.இராகப்பிரியா, ப.தமிழ்பிரியன், செ.நிலாணி, சி.இராஜ்குமார், ச.சத்தியபாரதி, ச.சித்தார்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழர் தலைவரின் வருகையை ஒட்டி அரியங்குப்பம் சாலையில் கழக கொடிகள், வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner