முன்பு அடுத்து Page:

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்

பெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது. பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது........ மேலும்

19 ஜூன் 2018 16:21:04

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம…

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா  இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்!

தொகுப்பு: மயிலாடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பேருந்தில் இந்தி மொழியா? கழக முயற்சிக்கு வெற்றி!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து  - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும்  17/22 வழித்தடம்  பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம்  வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள்  நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்  தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர்  பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத்....... மேலும்

19 ஜூன் 2018 15:19:03

ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

   ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற  திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

    ஈரோடு, ஜூன் 17 திராவிட மாணவர் கழகத் தின் ஈரோடு மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம் 9.6.2018 அன்று காலை 10.30 மணியவில் ஈரோடு பெரியார் மன்றத்திலும், நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 6 மணியளவில் குன்னூர் ஆசியன் சுற்றுலா தங்கும் விடுதியிலும் துவங்கி நடைபெற்றது. நிகழ்வுகளில் எதிர்வரும் சூலை 8ஆம் தேதியன்று கும்பகோணத்தில் நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இவ்விரு....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

கபிஸ்தலம், ஜூன் 16- 9.6.2018 சனி மாலை 6.00 மணிக்கு குடந்தை கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ஜூலை 8 திராவிட மாணவர் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சரியாக 6.30 மணியிலிருந்து மந்திரமா? தந்திரமா? நிகழ்வு குடந்தை ஜெயமணிகுமார் அவர்களால் நடத்தப்பட்டது.     கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வால் பொதுமக்கள் ஆங் காங்கே நின்றுகொண்டு கூட்டத்தினை கண்டனர். மந்தி ரமா? தந்திரமா? நிகழ்வு நடை பெற்றபோது மக்கள் நெருங்கி கவனித்தனர். தொடர்ந்து....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

குடியரசுத்  தலைவரை அவமதிப்பதா?

தாழ்த்தப்பட்டோர் என்பதால் கோவிலுக்குள் நுழைய விடாமல் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, ஜூன் 16  இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ் தானில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல்  தடுக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருப்பூர் இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ்தானில் கோவி லுக்குள் நுழைய தடுக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

காரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது

காரைக்குடியில் சிந்தனைக்களம்  முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது

காரைக்குடி, ஜூன் 16- காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பில் 09.06.2018 அன்று சனிக் கிழமை 5 மணி அளவில்  சிந்த னைக்களம் என்ற பெயரில் ஆய்வரங்க அமர்வு தொடங்கப் பட்டது. நிகழ்வுக்கு மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமை வகித்தார். பேராசி ரியர் அ.மார்கஸ் தொகுத்த 'கல்விச் சிந்தனைகள் -பெரியார் என்ற நூலினை தேவகோட்டை தமிழ் இலக்கிய பேரவை தலைவரும், தேவகோட்டை ஒன்றிய ப .க. தலைவருமான அ.அரவரசன்....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு கலந்துரையாடல்

கல்லக்குறிச்சி, ஜூன் 16- வருகிற ஆகஸ்டு 1ஆம் தேதி நடை பெறவுள்ள திராவிடர் எழுச்சி மாநாடு தொடர்பாக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 11.6.2018 கல் லக்குறிச்சி நெற்காடு எலக்ட் ரிக்கல் மாடியில் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலை மையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் குழ. செல்வராசு வரவேற்புரையாற் றினார். மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் மாநாடு சிறப்பாக நடைபெற தோழர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி கருத்துரை....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!

மதவெறி மாய்ப்போம்! மனித நேயம் காப்போம்!

மதுரை, ஜூன் 16- 09.06.2018 அன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் அரங்கத்தில் மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 65வது நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தங்கினார். விடுதலை வாசகர் வட்டத் தின் செயலாளர் பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரி. ச. பால் ராசு, வரவேற்புரை நிகழ்த்திய தோடு விடுதலையின் 84ஆவது ஆண்டுகால சாதனையை விவ ரித்து உரையாற்றினார். நிகழ்ச் சிக்கு முன்னிலை....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, பிப். 25- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம் 3.2.2018 சனிக்கிழமை மாலை  மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சுப.முருகானந்தம் பேசினார்.

சிறப்புக்கூட்டத்திற்கு தலைமை வகித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு "இன்று சிறப்புரையாற்ற வந்திருக்கும் கண்மணி தமிழரசன் 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் நமது திராவிடர் கழக மேடைகளில் முழங் கியவர். மதுரை மண்டலச்செயலாளர் மா. பவுன்ராசா அவர்கள் தனது சொந்தக்கிராம மான அய்யனார்குளத்தில் முதன் முதலில் கூட்டம் போட்டபோது நடைபெற்ற கல் லெறி சம்பவத்தை அடிக்கடி கூறுவார்.

எதிரிகள் கல்லை எறிந்ததால், கண் மணி தமிழரசன் அவர்களின்  நெற்றியில் காயம் பட்டு  இரத்தம் வர, தான் கட்டியிருந்த சேலையின் ஒரு பகுதியை கிழித்து நெற்றியில் கட்டிக்கொண்டு 3 மணி நேரம் பேசியதையும், அவரது பேச்சைக் கேட்ட பின்பு பலர் தங்களுக்கு ஆதரவு அளித்த தையும் கூறுவார்கள். இன்றைக்கு அவர் 'பாய்வது விடுதலை, பதுங்குவது பாது காப்பு' என்னும் தலைப்பில்  ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தந்தை பெரியா ருக்கு, அன்னை மணியம்மையாருக்கு, ஆசிரியர் அவர்களுக்கு எல்லாம் நன்றி கூறியிருக்கிறார். தன்னைப்பற்றிய விவரங் களையெல்லாம் அந்தப் புத்தகத்தில் எழு தியிருக்கின்றார்கள்.

திராவிட இயக்கம் நூற்றாண்டு சிறப்பு வெளியீடு என்று குறிப்பிட்டு சுயமரியாதை இயக்கப் பெண்கள் எனக்குறிப்பிட்டு நமது மறைந்த பெண் தலைவர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கின்றார்கள். நிறைய செய்திகள் அந்தப்புத்தகத்தில் இருக்கிறது. திராவிடர் இயக்கத்தைச்சார்ந்த ஒவ்வொரு வரும் இப்படிப் புத்தகங்கள் எழுதவேண் டும். தாங்கள் பட்ட இன்னலை, புகழை, பெருமையை எல்லாம் புத்தகத்தில் பதிய வேண்டும். அந்த வகையில் புலவர் கண் மணி தமிழரசன் அவர்களைப் பாராட்டுகி றேன், இந்த நிகழ்விற்கு வந்திருக்கின்ற பொறியாளர் முத்தையா, வாடிப்பட்டி தனபாலன், இராமசாமி போன்றவர்கள் அப்படி தன் வரலாறோடு இணைந்த புத்தகங்கள்  எழுதவேண்டும்" எனக் குறிப் பிட்டார்.

நூல் அறிமுகம் பகுதியில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதியுள்ள 'வியப்பின் மறுபெயர்  வீரமணி " என்னும் நூலினை மிகச்சிறப்பாக அறிமுகம் செய் தார். அவர் தனது உரையில் "மஞ்சை வசந் தனின் எழுத்துக்களை நாம் பார்த்தால், எல்லா இடத்திலும் ஆசிரியர் பேசுவது போலவே இருக்கிறது. அதுபோல மேற் கோள் காட்டுமிடத்தை நன்றாக அடை யாளம் காட்டியிருக்கின்றார் மஞ்சை வசந் தன்.   ஆசிரியர் பேசுமிடம், தந்தை பெரி யார் ஆசிரியரைப் பற்றிப் பேசும் இடம், இது போன்ற பல்வேறு விசயங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தடிமனான எழுத்துக்களால் (போல்டு லெட்டராக) போட்டிருக்கின்றார். ஆசிரியர் அவர்கள் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனித்தலையங்கமே போட்டு வரவேற் கின்றார். அந்தத் தலையங்கத்தைப் படித் தால்  ஆசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தின் தலைமைப்பொறுப்பை ஏற்கவேண் டும் என்பதனை பெரியார் அவர்கள் அப் போதே முடிவு செய்துவிட்டார் என்பது நமக்குப் புரிகின்றது. எந்த இடத்திலும் தந்தை பெரியாரைத் தாண்டியோ அம்மா மணியம்மையாரைத் தாண்டியோ எந்த விசயமும் ஆசிரியர் செய்ததில்லை என்பதனை நாம் கற்றுக்கொள்ள வேண் டும். எப்படி ஒரு மனிதர் இவ்வளவு சீராக இருக்க முடிந்திருக்கின்றது என்பது மிக வும் வியப்பிற்குரியது என்பதைத் தான் மஞ்சை வசந்தன் சுட்டிக் காட்டுகின்றார்.

உடல் நலத்தைப் பேணுவதிலும் சரி, மனதை வலிமைப்படுத்துவதிலும் சரி, ஆசிரியர் அவர்கள் சீரான நிலையைத் தான் கடைப்பிடித்திருக்கின்றார் என்ப தனை பல்வேறு நிகழ்வுகள் மூலம் நூலின் ஆசிரியர் சுட்டுகின்றார்." போன்ற செய்தி களைக் குறிப்பிட்டு ஒவ்வொரு நிகழ்வாக நூல் ஆசிரியர் மஞ்சை வசந்தன், ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை எப் படியெல்லாம் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கின்றார் என்பதனை உணர்வுபூர்வ மாக சுட்டிக்காட்டி  வழக்குரைஞர் சித் தார்த்தன் நூல் அறிமுகம் நிகழ்த்தினார்.

தந்தை பெரியார், காந்தியார், அண்ணா

சிறப்பு பேச்சாளர் கண்மணி தமிழரசன் அவர்களையும் அவரது நூல் 'பாய்வது விடுதலை, பதுங்குவது பாதுகாப்பு' என்ப தையும்  அறிமுகப்படுத்தி திராவிடர் கழ கத்தின் அமைப்புசெயலாளர் வே.செல்வம் நினைவுப்பரிசாக 'அய்யாவின் அடிச்சுவட் டில்' நூலினைக் கொடுத்து  உரையாற்றினார். இராசேஸ்வரி இராமசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளருக்கு பயனாடை போர்த்தினார். தொடர்ந்து 'பாய்வது விடுதலை, பதுங் குவது பாதுகாப்பு' என்னும் நூலினை பல தோழர்கள் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய புலவர் கண் மணி தமிழரசன் "அய்யனார்குளம் நிகழ் வினை நேரு குறிப்பிட்டபோது நான் கண் கலங்கினேன். அந்தக் காலத்தில் பெண்கள் நாங்கள் மேடை ஏறுகின்றபோது எவ் வளவு எதிர்ப்புகள் இருந்தது. அன்னை மணியம்மையார் அவர்களின் அறிவுரைப் படி உள்ளாடைக்குள் உள்ளாடை அணிந்து கொண்டு மேடை ஏறினோம். அந்தக் கடைசி உள்ளாடைக்குள் ஒரு கத்தியை மடக்கி வைத்திருப்போம். இன்றைக்கு காந்தியார் நினைவு நாள், அண்ணா நினைவு நாள் இரண்டையும் இணைத்து இந்தத் தலைப்பை கொடுத்துள்ளீர்கள்.

காந்தியாரும், அண்ணாவும் எளிமை விரும்பிகள். மேல் ஆடை இல்லாமல் இருப்பதை மதுரையில் இருந்துதான் காந் தியார் தொடங்கினார். மேல் ஆடையில் இருக்கும் பொத்தான் பற்றியோ அது ஒழுங்காக இருப்பதைப் பற்றியோ கவலைப்படாதவர் அறிஞர் அண்ணா. இருவரும் மாற்றுக்கருத்து உள்ளவர்களுக் கும் மரியாதை அளித்தவர்கள். தந்தை பெரியார் ஒரு எரிமலை, அவர் ஒரு பூகம் பம். அண்ணா வழியும் பெரியார் வழியும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். அண்ணா சட்டசபைக்குப் போவதன் மூலம் அய்யாவின் கருத்துகளை சட்டமாக்கலாம் என்று எண்ணினார், அதன்படி செயல்பட் டார்" எனக்குறிப்பிட்டு காந்தியார், தந்தை பெரியார், அண்ணா வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். ஆசிரியர் அவர்களை பெங்களூரில் சந்திந்தேன். அதே பழைய அன்போடும் பாசத்தோடும் என்னிடம் பேசினார்கள். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாலும் திராவிடர் கழகம் நடத்தும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொள்வேன். நான் கலந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனக்குறிப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்பாக சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதி யில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத்தின் செயலாளர் பா.சடகோபன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் பேராசிரியர் முனைவர் இ.கே.இராமசாமி, திராவிட முன்னேற்றக் கழக அவைத்தலைவர் மோகன், பகுதிக் கழகச் செயலாளர் பாண்டியராசன், திராவி டர் கழக மண்டலத்தலைவர் அ.முருகானந் தம், மாவட்ட செயலாளர் மா.பவுன்ராசா, வாடிப்பட்டி தனபாலன், பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் செல்ல.கிருட்டி ணன், துணைச்செயலாளர் செல்வ.சேகரன், உசிலை மாவட்ட திராவிடர் கழகத்தலை வர் சிவகுருநாதன். வழக்குரைஞர் அணி மாநிலதுணைச்செயலாளர் நா.கணேசன், இளைஞர் அணிச்செய்லாளர் பேக்கரி கண் ணன், கா.அழகர், நா.முருகேசன், பொறி யாளர் முத்தையா, புதூர் பாக்கியம், சொ. நே.அன்புமணி, மளிகைக்கடை மாரி முத்து, ஆசிரியர் சேகரன் உள்ளிட்ட பல ரும் கலந்துகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner