முன்பு அடுத்து Page:

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

வழக்குரைஞர் கிருபா முனுசாமி 1938-இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்து “என் மனம் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது” என்றார் தந்தை பெரியார். அதுபோல, ஏன் அவர் பெரியார்? என்பதை, பெரியார் திடலில், அதுவும் பெரியாரின் பிறந்த நாளன்று பேசுவதை எண்ணும் போது என் மனமும் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது. சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் தலைமை யிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான....... மேலும்

15 டிசம்பர் 2018 12:52:12

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, டிச.11 கடந்த 2.12.2018 அன்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்  86ஆவது பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை சுடரொளி மேனாள் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 86ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி (பெரியார் வீரமணி, பெரியார் சாமிதுரை) விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் த.பெரியசாமி, ....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுஆயக்குடி, பிப். 27 பழனி கழக மாவட்டம், புதுஆயக்குடியில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 4.2.2018 அன்று மாலை 6 மணியளவில் ஜாதி, மதவெறி ஒழிப்பு - அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் ஏன்? எனும் தலைப்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குண.அறிவழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளை ஞரணி செயலாளர் சி.ஆறு முகம், பழனி ஒன்றிய செய லாளர் தே.பெரியார் சுரேசு, ஆயக்குடி கிளைக்கழக தலை வர் கா.நாகராசு ஆகியோர் முன்னிலையேற்றனர். கூட்ட துவக்கத்தில் சு.அழகர்சாமி அவர்கள் மந்திரமா? தந்திரமா எனும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கக்கூடிய அறிவியல் நிகழ்ச்சியை குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சிறப்பாக செய்து காட்டினார். மாவட்ட தலைவர் பெ.இரணியன் உரையாற்றினார்.

தலைமை கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் பேசுகையில் நான் பல முறை ஆயக்குடிக்கு பேசுவதற்கு வந்து இருந்தாலும், குறிப்பிட்ட இந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம், இந்த பகுதியில் தான் மாவட்ட தலைவர் இரணியன் அவர்களும், தலைமை கழக இளம் வயது சொற்பொழிவாளர் பொன்.அருண்குமார் அவர்களும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குண.அறிவழ கன் மற்றும் பல தோழர்களும் சிறப்பாக செயல்பட்டு கொண் டிருக்கிறார்கள். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் அவர் களின் கொள்கைகளை, தத்து வங்களை தாங்கி கடைபிடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் இருக்கும் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. மற் றும் சங்பரிவார் அமைப்புகளை சார்ந்தவர்கள் எப்படியாவதும் இந்த பகுதியில் அமைப்பு கட்டிவிட முடியாதா, பிள் ளையார் சிலை ஊர்வலம் நடத்திவிட முடியாதா என் றெல்லாம் தப்பு கணக்கு போட்டு இந்த பகுதியில்  சிலர் குறிப்பாக மிஸ்டு கால் கட்சிக்கு ஆள் சேர்ப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். நண் பர்களே இது பெரியார் மண், டாக்டர் அம்பேத்கர் மண் கடந்த சில மாதங்களுக்கு முன் னாள் தமிழ்நாட்டில் சாரண, சாரணிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜாவுக்கு எப்படிபட்ட அடிவிழுந்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கட்சி வேட் பாளர்களோடு போட்டி போடாமல் நோட்டாவோடு போட்டியிட்டு அதிலும் கேவ லமான தோல்வி. நன்றியை மறந்தவர்களே தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம் பேத்கர் அவர்களது உழைக் காமல் இருந்திருந்தால் உனக்கு எப்படி கல்வி, வேலை வாய்ப்பு? சங்பரிவார் அமைப் புகள் என்ன வேலை செய் கிறார்கள், சகோதரர்களாக இருக்கக்கூடிய நம்மிடத்தில் சண்டையை மூட்டிவிடுவார்கள் இதுதான் அவர்களுடைய சதி திட்டம். எனவே அவர்களுடைய முயற்சி ஒருக்காலும் முடியாது என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் இந்த பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. கடந்த மத்திய பிஜேபி ஆண்டு கொண்டுவந்த "நீட்" தேர்வால் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எங்கள் சகோதரி அனிதா 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவராக முடிய வில்லை. காரணம் குஜராத்தில் ஒரு கேள்வி, தமிழ்நாட்டில் ஒரு கேள்வி குஜராத்தில் ஒரு மனித உடம்பில் எத்தனை தலையிருக்கும்? தமிழ்நாட் டுக்கு உண்டான கேள்வி ஒரு மனிதனின் தலையில் எத்தனை மயிர் அதாவது எத்தனை முடி இருக்கும்? இது எப்படிபட்ட தில்லுமுல்லு பாருங்கள். அம் பானி வகையறாக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒரே முறையில் படிக்கட்டும் பிறகு "நீட்" வையுங்கள் பார்க்கலாம். ஒருபோதும் இனி நாங்கள் ஏமாறபோவதில்லை. மத்திய பிஜேபி மோடி வித்தை என்பது மோசடி வித்தை என்பது அனை வருக்கும் தெரிந்துவிட்டது. மோடியால் முடியாமல் ஆன் மீக அரசியல் நடிகரை கொல் லைபுறத்தில் நுழையவிட்டா லும் ஈரோட்டுக் கண்ணாடியால் பார்க்கிறோம் அதுமட்டுமல்ல ஈரோட்டு தடியால் அதை விரட்டி, விரட்டி அழித்தொழிப் போம். இது பெரியார், அம் பேத்கர் மண் புரிந்து கொள் ளுங்கள். தமிழால் தமிழ் நாட்டில், தமிழ் மக்களால் சுகபோக வாழ்வை சுவாசிக் கக்கூடிய சங்கராச்சாரியே, கோமாளி பூச்சாண்டியே, தமிழ் தாய் வாழ்த்து பாடும்பொழுது எழுந்து நிற்காக வந்தேறியே, புரட்சி கவிஞர் பாரதிதாசனுக்கு பிறகு செம்மொழியாம் தமிழுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிற கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டுமா? வைரமுத்து என்ன சொன்னார் ஆதாரத்தோடு தான்சொன்னார். இயக்குனர் பாரதிராஜா சரியாக சொன்னார் ஒரு வேலை ஆண்டாள் விசயத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட் டால் என்னுடைய அரிவாள் தான் முதலில் வெட்டும் என் றாரே! இப்படிபட்ட தமிழர்கள் இருக்கும்வரை மோடி, எச்.ராஜா, சங்கராச்சாரிகள் தலை கீழாக நின்றாலும் தமிழ் நாட்டில் அது செல்லாது. இப்படி பல்வேறு நிலைகளைப் பற்றியும், திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப் பால் நாம் பெற்ற மான, இன உணர்ச்சியையும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டும்படி யாக சிறப்பாக பேசி முடித்தார்.

கலந்து கொண்டோர்

பெ.இரணியன், நா.நல்ல தம்பி, ச.திராவிடச் செல்வன், சே.மெர்சி ஆஞ்சலா மேரி, பொன்.அருண்குமார்,சு.அழகர்சாமி, சி.இராதாகிருஷ் ணன், தே.பெரியார் சுரேசு, கா.நாகராசு, கோரிக்கடவு கருப் புச்சாமி, அமலிசுந்தரி, ஜெயந்தி குண.அறிவழகன், பழனி முத் துக்குமார், ச.அங்கப்பன் மற் றும் பெரியார் பிஞ்சுகள் ம.எடி சன் செல்வா, அ.பிரபாகரன், ச.தமிழ்ச்செல்வன் மேலும் தலைமை கழக பேச்சாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட அமைப்பாளர் ஏ.வாஞ்சிநாதன் பயனாடை அளித்து மரியாதை செய்தார். கூட்டத்திற்கு வருகை தந்த கழக தோழர்களுக்கு இந்திய குடியரசு கட்சியின் தோழர் கரு.முருகானந்தம் தேநீர் விருந்து அளித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து கழக பேச்சாளர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் அனைவருக் கும் மாவட்ட தலைவர் பெ.இரணியன் அவர்கள் இல் லத்தில் புலால் உணவு விருந்து அளிக்கப்பட்டது. மாணவரணி தோழர் ம.விக்ரம் செல்வா நன் றியுரையாற்றி முடித்து வைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner