முன்பு அடுத்து Page:

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. 70'' என்ற தலைப்பில் தந்தி'' தொலைக்காட்சியில் உரையாற் றிய நிகழ்வு, செப்டம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருங்குளம், பிப். 27 17.2.2018 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளம் நால் ரோட்டில், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில், திராவிடர் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம், தஞ்சை ஒன்றிய துணைத் தலைவர் மா.பாஸ்கர் தலை மையில் நடைபெற்றது. இக் கூட்டத்திந்கு திராவிட முன்னேற்ற கழக மா.கணபதி, சு.சொக்கர், உ.கோவிந்தராசு, ஆ.சுந்தரமூர்த்தி, ப.கண்ணப் பன், இரா.வீரபாண்டியன், பொ.சம்பந்தமூர்த்தி, ந.அறிவு டைச்செல்வன், சா.சிவாஜி கணேசன், க.கொடியரசன், இரா.அப்பர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி கோ.சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக மா.லெட் சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

தஞ்சை மாவட்ட இளை ஞரணி செயலாளர் வே.இராஜ வேல் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கோபு.பழனிவேல் கொள்கை விளக் கப் பாடல்களை பாடி கருத் துரை ஆற்றினார். நெல்லுப் பட்டு இராமலிங்கம், மாநகர தலைவர் நரேத்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.தலைவர் அ.தனபால், மாநில கலைத்துறை செயலா ளர் ச.சித்தார்த்தன், மாநில அமைப்பாளர் இரா.குணசேக ரன் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி தொடக்க வுரையாற்றினார். திராவிடர் கழக தலைமைக் கழக சொற் பொழிவாளர் இராம.அன்ப ழகன் சிறப்புரையாற்றினார்.

இளைஞர்கள், மாண வர்கள், தமிழின பெருமக்கள் மத்தியில் அறியாமை இரு ளகற்றி, மூடநம்பிக்கை முறி யடித்து மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர்கள் எவ் வாறெல்லாம் பார்ப்பனர்களி டம், சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் மானத்தை பொருளை இழக்கின்றனர் என்பதனை விளக்கிகூறியும், மதம் என்ற பெயரால் நடை பெறும் மூடத்தனங்களை முற் றிலும் முறியடிக்கின்ற வகை யில் பாடல்களை பாடியும், அறிவுலக பேராசான் தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கி எழுச்சி மிகுந்த சிறப் புரையாற்றினார். இக்கூட்டத் தினை தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.வெற்றிக்குமார் ஒருங்கி ணைந்து உரையாற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

தஞ்சை மாவட்ட அமைப் பாளர் ப.தேசிங்கு, மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பா ளர் பி.பெரியார்நேசன், தஞ்சை ஒன்றிய செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், உரத்தநாடு ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரம சிவம், மாவட்ட துணை செய லாளர் ச.சந்துரு, மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் ப.விஜயக்குமார், துணைச் செயலாளர் இரா.ராஜ்கிரன், தஞ்சை மாநகர அமைப் பாளர் வெ.ரவிக்குமார், உரத்த நாடு ஒன்றிய இளைஞரணி தலைவர் அ.சுப்பிரமணியன், மாவட்ட மாணவரணி தலை வர் வே.தமிழ்ச்செல்வன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.இரமேஷ், பொறியாளர் ச.பிரபாகரன், சமூக காப்பு அணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாணவ ரணி தோழர்கள் சிந்தனைச் செல்வன், அரவிந்த், வீரமணி, பெரியார் பிஞ்சு இளமாறன் மற்றும் பொதுமக்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மாவட்ட மாண வரணி தலைவர் வே.தமிழ் செல்வன் நன்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner