முன்பு அடுத்து Page:

டிசம்பர் 2 சுயமரியாதை நாள் கருத்தரங்கம்

டிசம்பர் 2 சுயமரியாதை நாள் கருத்தரங்கம்

கிருட்டினகிரி, டிச. 9 கிருட்டினகிரி விடுதலை வாசகர் வட்ட கருத் தரங்கம் 17.11.2018 அன்று மாலை 4 மணிக்கு கிருட்டினகிரி வெல் கம் மகாலில்  வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் எல்அய்சி மனோகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் பெ.மதிமணியன் துவக்க உரை யாற்றினார். வாசகர் வட்டச் செயலாளர் கா.மாணிக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி னார். மாவட்ட துணைச்செய லாளர் சு.வனவேந்தன்....... மேலும்

09 டிசம்பர் 2018 17:02:05

காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி கலந்துரையாடல்

காஞ்சிபுரம், டிச.9 25.11.2018 அன்று மாலை 4 மணியளவில் செங்கற்பட்டு பெரியார் படிப் பகத்தில் மாவட்ட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் இரா. கோவிந்தசாமி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம், மாவட்ட அமைப்பாளர் பொன்.இராஜேந்திரன், மாவட்ட மு.செ.ப.முருகன், ஆ.செல்வ மணி ஆகியோர் முன்னிலையில் செந்தமிழ் செல்வன், தமிழ் செல்வன், சு.புவியரசி, விஷ்ணு, ஜெ.சவுந்தர்யா மற் றும் மாணவர்கள் கலந்து....... மேலும்

09 டிசம்பர் 2018 17:02:05

கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்

கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்

கரூர், டிச.9 கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 27ஆம் தேதி காலை யாசிகா போட்டோ ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ப.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செய லாளர் ம.காளிமுத்து வரவேற்புரை நிகழ்த் தினார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, முன்னிலை வகித்தார். கூட் டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன், தலைமை கழக பேச்சாளர்....... மேலும்

09 டிசம்பர் 2018 17:01:05

திராவிடர் கழகப் பொருளாளர் மறைவு

திராவிடர் கழகப் பொருளாளர் மறைவு

மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி இரங்கல் இங்கு பேசியவர்கள் எடுத்துச் சொன் னதைப் பார்க்கும் போது கிட்டதட்ட பத்தாயிரம் பேருக்கு அம்மையார் பிரசவம் பார்த்தார் என்று சொன்னார்கள். இது ஓர் ஆச்சரியமான தகவல்தான். ஓர் அர்ப் பணிப்பு மனப்பான்மை இல்லாமல் இந்த சாதனையை யாரும் செய்திருக்க முடியாது. இத்தகு சேவை மனப்பான்மை உள்ள ஒருவர் திராவிடர் கழகத்துக்குப் பொருளாளராகக் கிடைத்தது பெரு மைக்குரிய ஒன் றாகும். அவர் மறைவு திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்ட....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

கஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்…

திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்! சென்னை, டிச. 9 கஜா புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க கோரியும், மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும், நிவாரண உதவிகளை அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்குவதுடன் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திதிராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில்எழுச்சியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் விவரம் வருமாறு: புதுக்கோட்டை புதுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்டங்களின் சார்பில்....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

டிசம்பர் 18இல் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்

டிசம்பர் 18இல் திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்  : 18-12-2018 செவ்வாய் காலை 10.30 மணி. இடம் : பெரியார் திடல் (துரை. சக்ரவர்த்தி நினைவகம்) சென்னை - 600 007. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், தஞ்சை, திருவாரூர் மண்டலத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

07 டிசம்பர் 2018 14:39:02

திராவிடர் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவு

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல் திராவிடர் கழகப் பொருளாளர் பிறைநுதல் செல்வி மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- திராவிடர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி குன்னூருக்கு பயணம் செய்த வழியில் விபத்துக்குள்ளாகி மரணம் எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றோம். பெரியாரிய கொள்கைகளை தானும் பின்பற்றி - தன் குடும்பமும்....... மேலும்

07 டிசம்பர் 2018 14:13:02

திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, டிச. 7 கஜா புயலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க கோரியும், மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும், நிவாரண உதவிகளை அனைத்து கட்சிப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு வழங்குவதுடன் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட மத்திய....... மேலும்

07 டிசம்பர் 2018 14:03:02

தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிகப் பயிற்சியா - ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?

தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிகப் பயிற்சியா - ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா?

தஞ்சை பெரியகோயிலில் வாழும் கலை அமைப்பு சிறீசிறீ ரவிசங்கர் இன்றும் நாளையும் ரூ.3000 கட்டணத்தில் ஆன்மீகப் பயிற்சி நடத்த உள்ளதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் நீலமேகம், சிபிஅய் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சந்திரகுமார்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அயனாபுரம் ....... மேலும்

07 டிசம்பர் 2018 13:40:01

ஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்…

ஜாதி ஒழிந்த சமுதாயம் - சம வாய்ப்புள்ள சமுதாயம் சமைப்பதே  ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் உரை சென்னை, டிச.6 ஜாதி ஒழிந்த சமுதாயம், சமத்துவ சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு 26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம்....... மேலும்

06 டிசம்பர் 2018 15:02:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலாபுர்க்கி, பிப்.27 கருநா டகாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாஜக தலைவர் அமித் ஷா, விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் மழுப் பினார். சில இடங்களில் கேள் விகளை தவிர்க்கும் வகையில் விவசாயிகளைச் சந்தித்தும் பேசாமல் சென்றார்.

கருநாடக மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா கர்நாடக, ஆந்திரா எல்லைப்பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து பிரச்சினைகளையும், குறைகளையும் கேட்டு வரு கிறார்.

அதன்படி, கலாபுர்க்கி மாவட்டத்துக்கு அமித் ஷா நேற்று சென்று இருந்தார். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். ஆனால், அவரிடம் பெரும்பாலான விவசாயிகள் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை. 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மட்டும் அமித்ஷாவிடம் குறை கள் கேட்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது, ஹம்னாபாத் பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து அமித்ஷா குறைகளைக் கேட்டார். அங்கிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் சித்த ராமப்பா அனந்தூர், பாஜக தலைவர் அமித்ஷாவிடம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எப்படி, விவசாயிகள் பிரச் சினைகளை சமாளிக்கிறது, எதிர்கொள்கிறது? என கேள்வி எழுப்பினார்.

மேலும், கார்பரேட் நிறுவ னங்களின் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு நிதி இருக்கிறது. ஆனால், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்ய உங்கள் அரசி டம் பணம் இல்லை. நாங்கள் எல்லாம் சாதாரண விவசாயிகள், சாமானிய மக்கள்தான், நாங்கள்தான் வாக்களித்து உங்களை ஆட்சியில் அமர வைத்தோம், தொழில் அதிபர்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அமித் ஷா சற்று அமைதியானார்.

அதேசமயம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்பது குறித்து விவசாயிகளின் கேள்விக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல் படுத்துகிறோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துவிட்டு, பின்னர் அதையும் செய்யவில் லையே என்றும் விவசாயிகள் கேட்டனர்.

மேலும், சிவப்பு பருப்பு கொள்முதலில் தடை கொண்டு வருவது குறித்தும், இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு வரி விதிப் பது குறித்தும் விவசாயிகள் எழுப்பிய கேள்வி களுக்கு அமித்ஷா பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner