முன்பு அடுத்து Page:

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, டிச.11 கடந்த 2.12.2018 அன்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்  86ஆவது பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை சுடரொளி மேனாள் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 86ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி (பெரியார் வீரமணி, பெரியார் சாமிதுரை) விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் த.பெரியசாமி, ....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

ஓசூர், டிச. 11 முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டம் ஓசூரில் டிசம்பர் 30இல் நடைபெற உள்ள ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து சந்திப்பு நடைபெற்றது. தோழர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையேற்று மாநாட்டின் அலுவலகத்தை திறந்து வைத்து மாநாடு வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் டிசம்பர் 30 இல் ஓசூரில் நடைபெறவுள்ள ஜாதி, ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தையும்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.28 "நீட்" எதிர்ப்பில் அடுத்த கட்ட நகர்வு தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று (27.2.2018) மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவைரையும் வர வேற்று தொடக்க உரையாற்றினார்.

3.4.2018 டில்லியில்
போராட்டம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்றினார். நீட் தேர்வை எதிர்த்தும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரும் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் பெற வலியுறுத்தியும் டில்லியில் 3.4.2018 அன்று  நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடைபெறும் என்று போர்ப்பிரகடனமாக அறிவித்தார்.
மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஏ.கே.ராஜன், அரிபரந் தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நூல் வெளியீடு

தந்தை பெரியார் எழுதிய புதியதோர் உலகு செய்வோம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியாரின் பண்பாட்டுப்புரட்சி, ந.சி. கந்தையாப்பிள்ளை எழுதிய திராவிட இந்தியா ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. மூன்று நூல்களுக்கான நன்கொடை ரூ.120. சிறப்புக் கருத்தரங்கில் ரூ.20 கழிவுடன் ரூ.100க்கு அளிக்கப் பட்டது.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மதிமுக அமைப்புச்செயலாளர் ஆ.வந் தியத்தேவன், நீதிபதி பரஞ்சோதி, பேராசிரியர் ப.அரங்கசாமி, ஆர்.டி.வீர பத்திரன்,  மாணிக்கம்,  சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் முத்தையன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தலைமைசெயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி, தங்க.தனலட்சுமி, மகளிர் பாசறை உமா, பசும்பொன் செந்தில்குமாரி, தமிழ் செல்வி, கி.சத்தியநாராயணன், அகில இந்திய கிராமப்புற மாணவர்கள் சங்கம் அமுதரசன், ராஜேந்திரன், தாம்பரம் லட்சுமிபதி, ஆ.சீ.அருணகிரி,  தருமபுரி தமிழ்செல்வன், தஞ்சை விசிறி சாமியார் உள்பட ஏராளமானவர்கள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிட மிருந்து பெற்றுக்கொண்டார்கள்..

கலந்துகொண்டோர்

சிறப்புக் கருத்தரங்கக் கூட்டத்தில் வழக்குரைஞர் தியாகராசன், திராவிடர் வரலாற்று ஆய்வுமய்ய செயலாளர் பேராசிரி யர் ந.க.மங்களமுருகேசன், பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேனாள் மக்கள்தொடர்பு அலுவலர் பி.வரதராஜன், சிறீசுதர்சன் கட்டுமான நிறுவன மேலாண் இயக்குநர் சுதர்சன்ரவி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி,   பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன், க.பார்வதி, சி.வெற்றிசெல்வி, சுமதி, சீர்த்தி, க.வெண் ணிலா, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, இளைஞரணி தலைவர் செ.தமிழ்சாக்ரட்டிஸ், கோ.வீ. ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தரமணி மஞ்சநாதன்,மயிலை குமார், சண்முகப்பிரியன், கணேசன், பெரியார் மாணாக்கன், விடுதலைநகர் செயராமன், மோகன்ராஜ், குணசேகரன், கூடுவாஞ்சேரி ராசு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner