முன்பு அடுத்து Page:

ஆத்தூரில் பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்

ஆத்தூரில்  பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்

ஆத்தூர், ஜூன் 23 ஆத்தூரில் கடந்த மே 19, 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்று இயக்க வரலாற்றில் முத்திரை பதித்தது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர்  பெ.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் பயிற்சிக்கு  உழைத்த தோழர்களைப் பாராட்டி களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியரணி பயிற்சி பட்டறைக்கு  பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் ரூ.2500 மகிழ்வுடன் வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்....... மேலும்

23 ஜூன் 2018 15:19:03

உலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் "தமிழர் வரலாற்றுத் தொன்மை" கருத்தரங்கம்

நாள்: 23.6.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை இடம்: சிறீகோவிந்த் மகால், காந்தி சாலை, மன்னார்குடி வரவேற்புரை: மரு.இலரா பாரதிசெல்வன் (வரவேற்புக் குழுத் தலைவர்) தலைமையுரை: ந.மு.தமிழ்மணி (செயலாளர், நாயகம், உ.த.பே.) தலைப்பு: கீழடி அகழ்வாய்வு - வைகைக் கரை நாகரிகம் உரை: கி.அமர்நாத் இராமகிருட்டிணன் (கண்காணிப்பாளர், இந்தியத் தொல்லியல் துறை, அசாம்) தலைப்பு: வரலாற்றில் பூம்புகார் உரை: பேரா. ந.அதியமான் (தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்) நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜோ.ஜான்கென்னடி மாலை அமர்வு: தலைப்பு: அரிக்கமேடும், தமிழக....... மேலும்

22 ஜூன் 2018 15:25:03

திராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

பழையஆயக்குடி, ஜூன் 22- 20.6.2018 அன்று பழனி கழக மாவட்டம் பழைய ஆயக்குடி யில் ஜூலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு விளக்கம் மற்றும் இந்திய குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த இந் துத்துவா பார்ப்பனர்களை கண் டித்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைத் தலைவர் கா.நாகராஜ் தலைமை ஏற்றார்.பெரியார் பிஞ்சு கவி நிசா கடவுள் மறப்பு....... மேலும்

22 ஜூன் 2018 15:25:03

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்

ஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பழனி நெய்க்காரப்பட்டியில் கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.திராவிடச்செல்வன்,மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி,பெரியார் பிஞ்சு....... மேலும்

22 ஜூன் 2018 15:24:03

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

கழகத் தோழர்களின் உற்சாக வெள்ளம்! குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்! என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா....... மேலும்

21 ஜூன் 2018 15:17:03

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

லால்குடி, ஜூன் 21- லால்குடி (கழக) மாவட்ட ப.க. கலந் துரையாடல் கூட்டம் 16.6.2018 அன்று காலை 10 மணிக்கு டோல்கேட்டில் ப.க. மாவட் டத் தலைவர் அக்ரி.சுப்ரமணி யின் வர்த்தக வளாகத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர் அக்ரி சுப்ரமணியன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பினர் பொறி யாளர் முருகேசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் சுப்....... மேலும்

21 ஜூன் 2018 15:17:03

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்

பெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது. பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது........ மேலும்

19 ஜூன் 2018 16:21:04

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம…

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா  இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்!

தொகுப்பு: மயிலாடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பேருந்தில் இந்தி மொழியா? கழக முயற்சிக்கு வெற்றி!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து  - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும்  17/22 வழித்தடம்  பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம்  வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள்  நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்  தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர்  பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத்....... மேலும்

19 ஜூன் 2018 15:19:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்': வீதிமன்றத்திலும், நீதிமன்றத்திலும்
நமது போராட்டம் தொடரும்! தொடரும்!!

மாநில மாணவர் கழகக் கலந்துரையாடலில் நவமணி தீர்மானங்கள்

திருச்சி, மார்ச் 5 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து வீதிமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நமது போராட்டம் தொடரும் என்கிற தீர்மானம் உட்பட நவமணி (ஒன்பது) தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சிராப்பள்ளியில் நேற்று (4.3.2018) மாலை நடைபெற்ற மாநில மாணவரணிக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1 (அ):

இரங்கல் தீர்மானம்

கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடுகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட ரோஹித் வெமுலா, முத்துக் கிருஷ்ணன், விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்ட திருப்பூர் சரவணன், சந்தேகத்திற்குரிய மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாரப்பாளையம் சரத்பிரபு, ராமேஸ்வரம் கிருஷ்ணபிரசாத், நீட் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா, ஆந்திராவில் 60-க்கும் மேற்பட்டோர், பல தனியார் -அரசு கல்வி நிறுவனங்களில் இப்படியான மரணங்கள் கல்விக் கூடங்களில் நிகழ்கின்றன. கல்விச் சூழலும், கல்விக்கான போராட்டமும், கல்விக் கூடங்களில் ஜாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றின் காரணமாக கல்வி - ஆய்வுகளில் காட்டப்படும் பாகுபாடுகளும் இப்படி எண்ணற்ற உயிர்களைப் பலி கொள்வது கவலைக்கும் கண்டனத்திற்குமுரியதாகும். மறைந்த இந்த மாணவர்களுக்கு நம் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

தீர்மானம் எண் 1 (ஆ)
நிறுவனப் படுகொலைகளைத் தடுப்போம்!

மேற்கண்ட மாணவர்களின் மரணங்கள் தற்கொலை களோ, சந்தேகத்திற்குரிய மரணங்களோ அல்ல... அப்பட்ட மான நிறுவனப் படுகொலைகள் (மிஸீstவீtutவீஷீஸீணீறீ விuக்ஷீபீமீக்ஷீs) என இக் கூட்டம் குற்றம் சாட்டுகிறது. இத்தகைய கொலைகள், தற்கொலைகள் தொடரா வண்ணம் திட்டமிட்டுச் செயலாற்றவேண்டியதும், அச் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளாமல் இருப்பதும், மாணவர்களைப் பக்குவப்படுத்த வேண்டியதும், அரசு, கல்வித் துறை, கல்வியாளர்கள், பெற் றோர்கள், சமூக இயக்கங்கள் ஆகியோரின் கடமையாகும் என்றும் இக் கூட்டம் அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 2:
குடந்தையில் மாநாடு

கல்வி, சமூகநீதி, வேலைவாய்ப்பு, மதச்சார்பற்ற சூழல்களுக்கு கேடு சூழ்ந்துவரும் வேளையில், அவற்றிற்கு அறைகூவல் விடுக்கவும், எழுச்சிகரமாக கழகம் நோக்கித் திரண்டு வரும் திராவிடர் மாணவர்களை வரவேற்று அவர்களை நெறிப்படுத்தி, பெரியாரியப் பணியில் ஈடுபடுத்தும் விதமாகவும், இலட்சியத்தை நோக்கி இலட்சம் மாணவர்கள் என்ற முழக்கத்தோடு, திராவிடர் மாணவர் கழகத்தின் மாநில மாநாட்டினை கும்பகோணத்தில் ஜூலை 8 அன்று நடத்துவது எனவும், அம் மாநாட்டில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில் மாபெரும் உறுதியேற்பு நிகழ்வினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இம் மாநாட்டினை நடத்த அனுமதி அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3:
'நீட்' என்னும் கேட்டை ஒழிப்போம்

நீட் என்னும் பெயரில் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்பட்ட நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு பெருவாரியான இடங்களை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடமிருந்தும், அரசுப் பள்ளி, தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்களிடமிருந்தும் பறித்துள்ளது. தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டும், அழுத்தம் கொடுக்கப்பட்டும் கூட, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு சட்டத்திருத்த மசோதாக்கள் மத்திய அரசால் இன்னும் குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பப்படவில்லையென்பது சட்டவிரோதமும், சமூகநீதி விரோதமும் மாநில உரிமை மறுப்பும் ஆகும். அதிகார மமதையில் செயல்படும் மத்திய அரசு, மக்களின் குரலுக்கும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில், நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டுமெனவும், கால நெருக்கடி கருதி உடனடியாக அதற்கு தமிழ்நாடு அரசு முயற்சியெடுக்க வேண்டும் எனவும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. நீட் முற்றிலும் நீக்கப்படும்வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், அனைத்துத் தரப்பினரையும் இணைத்து, அயர்வின்றி போராடி வெற்றிபெறுவோம் என்றும் இக் கூட்டம் உறுதியேற்கிறது.

தீர்மானம் எண் 4:
புதிய கல்விக் கொள்கை மோசடி

பார்ப்பனிய சதித் திட்டங்கள் திணிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து முடக்கிப் போடப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்ற பல்வேறு அம்சங்களை தனித்தனியாக வேறு பெயர்களில் மத்திய அரசு செயல்படுத்திவருவதை இக் கூட்டம் அம்பலப்படுத்துவதோடு, இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்பது அதன் அம்சங்களுக்காக எதிர்க்கப்பட்டதேயன்றி, அதன் பெயருக்காக அல்ல. பழைய கள் புதிய மொந்தை என்று, அதே திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மக்களை ஏமாற்றும் மோசடியாகும். முக்கியக் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திற்கு உயர்த்துவது என்னும் பெயரில், அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதும் தான் மத்திய அரசின் திட்டமாகும். அதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ள நிலையில் அந் நிறுவனங்களைக் காக்க வேண்டியது நம் கடமையாகும் என்பதை சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவருக்கும் இக் கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் எண் 5:
இடஒதுக்கீடு குறித்து
வெள்ளை அறிக்கை தேவை!

மருத்துவக் கல்லூரியின் உயர் மருத்துவ இடங்களை மாநிலங்களிடமிருந்து பறித்த மத்திய அரசு, அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் உயர் மருத்துவப் படிப்பு இடங்களில், 27சதவீத அடிப்படையில் 2700 பேருக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக 165 இடங்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கென அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ மருத்துவப் படிப்பில் மட்டும் என்றல்ல. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டே வருகிறது. தனித்தனியாக தகவல் அறியும் உரிமை மூலமே இவற்றை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. சமூகநீதி சரியான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மட்டங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து அரசுகளும், ஆண்டுதோறும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அதற்கு சட்டபூர்வமான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:
கல்வி உதவித் தொகையைக்
குறைக்கக் கூடாது!

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுவரும் கல்வி உதவித் தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். முதல் தலைமுறையிலிருந்து ஏராளமானோர் பொறியியல் உள்ளிட்ட பிற தொழிற்படிப்புகளில் இணைவதற்கான வாய்ப்பு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசே நேரடியாகப் பணம் கட்டாமல், பணத்தை மாணவர்கள் கட்டியபின் காலந்தாழ்த்தி திருப்பி வழங்கும் நடைமுறையே பெரும் இடையூறை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2017 ஆகஸ்ட் 11 அன்று வெளியிடப்பட்ட இரண்டு அரசாணைகள் (51, 52) இந்த உதவித் தொகையினை முழுமையாக வழங்காமல் ரூ.85000லிருந்து, ரூ.50000 ஆகக் குறைத்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் படிப்பை வெகுவாகப் பாதிக்கும் என்பது தெரிந்தும் அரசு இத்தகைய நடவடிக்கைகளில் இறங்குவது நல்லதல்ல என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, இந்த அரசாணைகள் இரண்டும் திரும்பப் பெறப்பட்டு, முழுமையாக நேரடியாக அரசே கல்லூரிகளுக்குப் பணம் செலுத்தும் முறை மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும், அதற்கான தொகை அந்தந்த ஆண்டே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:
அரசியல் பயிற்றுவிப்போம்!

கல்வி வளாகங்களில் அரசியல்-ஜனநாயகப் பண்புகளை வளர்ப்பது அறிவுடைய நாட்டை உருவாக்க வழிவகுக்கும். கல்வி நிலையங்களில் அரசியல் பேசவும், விவாதிக்கவும் தடையை ஏற்படுத்துவதும், மாணவர் உரிமைகளைப் பறிப்பதும், வாயில் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை விநியோகிக்கவும் கூட தடை செய்வதும் எதிர்காலத்தில் அரசியல் அறிவற்றவர்களாக மக்களை மாற்றும் அரசு இயந்திரங்களின் முயற்சியாகும். இந்தப் போக்கை நீதிமன்றங்களும் ஊடகங்களும் சட்டம்-ஒழுங்கு, படிப்பில் கவனம் என்றெல்லாம் போலிச் சாக்குகளைச் சொல்லி ஆதரிப்பது ஏற்புடையதல்ல. அரசுக் கல்லூரிகளிலேயே இத்தகைய நிலை என்றால், தனியார் கல்லூரிகளின் நிலை சொல்லுந்தரமன்று. வட நாட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும் கல்வி நிறுவனங்களில் இத்தகைய போக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு, தமிழகத்தில் அரசியல் அறிவுடைய மாணவர்களை வளர்த்தெடுக்கும் சூழலை உருவாக்க வழிவகுக்க வேண்டுமென்று, அரசையும், கல்வியாளர்களையும், சமூக அக்கறை கொண்டோரையும் நீதிமன்றத்தையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 8 (அ):
சமஸ்கிருதம் - இந்தித் திணிப்பு

பள்ளிக்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்க முயலும் மத்திய அரசு, உயர்கல்வி நிறுவனங்களில் அதனைத் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை அய்.அய்.டி.யில் சமஸ்கிருதப் பாடல், கோழிக்கோடு அய்.அய்.எம்.மில் இந்தியில் பெயர் எழுதினால் தான் சான்றிதழ் என்று அடாவடித்தனமான மொழித் திணிப்பைத் தொடங்கியுள்ளது. இத்தகைய போக்குகள் மீண்டும் இந்தி-சமஸ்கிருத எதிர்ப்புப் போரைத் தொடங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அமைதியான கல்விச் சூழலைத் தராமல், இத்தகைய திணிப்புகள் மூலம் மாணவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளுவது சரியானதல்ல என்று இக் கூட்டம் மத்திய அரசை எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 8 (ஆ):
அறிவியல் விரோதம் -
அரசமைப்புச் சட்ட விரோதமே!

மனிதவளமேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ஒருவர் டார்வின் சித்தாந்தம் தவறு என்பதும், நியூட்டனின் புவி ஈர்ப்பு - வேத மந்திரங்களிலே முன்பு உள்ளது என்பதும், வாஸ்து அடிப்படையில் பள்ளி, கல்லூரி கட்டடங்கள் கட்டப்படல் வேண்டும் என்று கூறுவதும், ஜோதிடத்தைப் பாடமாக்குதலுமாக அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51ணீ(லீ)க்கு முரணாகத் தொடர்ந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனை இக் கூட்டம் கண்டிப்பதோடு மத்திய அரசின் அறிவியல், அரசமைப்புச் சட்ட விரோதமான இந்நடவடிக்கைகளை மாணவர்கள் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புதல் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 9:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இடம் மாற்றக் கூடாது!

சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தை ஒட்டி 125 ஆண்டுகளாக அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இரண்டாகப் பிளந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிதாக அமையவுள்ள கல்லூரிகளில் கொண்டுபோய்ச் சேர்ப்பதை சட்டக் கல்லூரி மாணவர்களும், சட்டத் துறையிலுள்ளோரும் கடுமையாக எதிர்க்கின்றனர். பழைய கட்டடம் என்பதைக் காரணம் காட்டி, மாணவர்களை வெளியேற்றிவிட்டு, அதே கட்டடத்தை புதுப்பித்து, அதை உயர்மட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கானதாக மாற்றுவதாகக் கூறுவது ஏமாற்று வித்தையே ஆகும். மேலும் ஏழை, எளிய மாணவர்கள் நீதிமன்றங்களுக்கு அருகிலேயே பயின்று, அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பைத் தடுத்து, அதை (ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ், ஹானர்ஸ் போன்றவற்றை உள்ளே கொண்டுவந்து) உயர் வர்க்கத்தினருக்கானதாக மாற்றி, சட்டக் கல்வியிலும் வர்ணாசிரமத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, உயர்நீதிமன்றத்தை ஒட்டியுள்ள அதே வளாகத்தில் தொடர்ந்து செயல்படவும், கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைக் கொண்டு அவற்றை புதிய கல்லூரிகளாகவே அறிவித்து மாணவர்களைச் சேர்க்கலாமெனவும் இக்கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

திராவிடர் மாணவர் கழக மாநில மாநாடு

நாள்: 8.7.2018,          இடம்: கும்பகோணம்

வரவேற்புக்குழு

தலைவர்: பிரின்சுஎன்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்),

துணைத் தலைவர்கள்: ச.அஜிதன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), ஆ.பிரபாகரன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), நா.பார்த்திபன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), ப.மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்), கே.அ.ஓவியா (வேலூர் மண்டல மாணவரணி செயலாளர்)
செயலாளர்: சே.மெ.மதிவதனி (மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர்)

துணைச் செயலாளர்: தி.இலக்கியா (மாநில மாண வரணி  துணைச் செயலாளர்), அ.அர்ஜூன் (காஞ்சி மண்டல மாணவரணி செயலாளர்), தா.தம்பிபிரபாகரன் (விழுப்புரம் மண்டல மாணரணி செயலாளர்), க.பெரியார் செல்வன் (அரியலூர் மண்டல மாணவரணி செயலாளர்)

பொருளாளர்: எ.சிற்றரசு (தர்மபுரி மண்டல மாணவ ரணி செயலாளர்)

விளம்பரக்குழு: முனைவர் முரளிதரன் (திருச்சி மண்டல மாணவரணி செயலாளர்), அண்ணா.மாதவன் (தஞ்சை மண்டல மாணவரணி செயலாளர்), நாத்திக பொன்முடி (திருவாரூர் மண்டல மாணவரணி செயலாளர்), ப.வெற்றிவேல் (ஈரோடு மண்டல மாணவரணி செயலாளர்), அருண்குமார் (திண்டுக்கல் மண்டல மாணவரணி செயலாளர்), சு.சித்தார்த் (மதுரை மண்டல மாணவரணி செயலாளர்), சா.வீரமணி (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்), கோ.சதீஷ் (புதுக்கோட்டை மண்டல மாணவரணி செயலாளர்)

நிதிக்குழு: அ.சவுந்தரபாண்டியன் (நெல்லை மண்டல மாணவரணி செயலாளர்), பிரபாகரன் (கோவை மண்டல மாணவரணி செயலாளர்), அ.இ.தமிழர் தலைவர் (சேலம் மண்டல மாணவரணி செயலாளர்)

உறுப்பினர்கள்: மாவட்ட மாணவர் கழக பொறுப் பாளர்கள், மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கழக பொறுப்பாளர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner