முன்பு அடுத்து Page:

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, டிச.11 கடந்த 2.12.2018 அன்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்  86ஆவது பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை சுடரொளி மேனாள் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 86ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி (பெரியார் வீரமணி, பெரியார் சாமிதுரை) விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் த.பெரியசாமி, ....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

ஓசூர், டிச. 11 முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டம் ஓசூரில் டிசம்பர் 30இல் நடைபெற உள்ள ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து சந்திப்பு நடைபெற்றது. தோழர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையேற்று மாநாட்டின் அலுவலகத்தை திறந்து வைத்து மாநாடு வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் டிசம்பர் 30 இல் ஓசூரில் நடைபெறவுள்ள ஜாதி, ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தையும்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை மார்ச் 5 அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘நீட்' எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சார்பில் தமிழகமெங்கும் 22.2.2018 அன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அதன் விவரம் வருமாறு:

கடலூர்

அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘நீட்' எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கடலூரில் 22.2.2018 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் எஸ்.பி.நடராசன் தலைமையில் திராவிடர் கழக மாணவரணி அமைப்பாளர் தா.பெரியார் செல்வம், காங்கிரஸ் மாணவரணி தலைவர் எஸ்.தீனதயாளன், விடுதலை சிறுத்தைகள் மாணவரணி அமைப்பளார் ப.சிறீதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அபூபக்கர், மறுமலர்ச்சி மாணவரணி அமைப்பாளர் நாக.ஆதித்யா, பாஸ்கர், மாணவர் தமிழ்பாதுகாப்பு இயக்க தலைவர் அகஸ்டின் பிரபாகரன், திமுக மாணவரணி துணை அமைப்பாளர்கள் மணிமாறன், சிவனேசன், கோகுல், பாலாஜி, பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாவட்ட கழக தலைவர் தென் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், கழக பேச்சாளர் புலவர் ராவணன், ஒன்றிய கழக தலைவர் கோ.குப்புசாமி, ஒன்றிய கழக செயலாளர் இரா.குணசேகரன், கடலூர் கழக செயலாளர் இரா.சின்னதுரை, இந்திரா நகர் கண்ணன், கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் ஆர்ப்பாட்ட முழக்கம் எழுப்பப்பெற்றது.

விழுப்புரம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்ட சமூகநீதிக்கான பேரவை சார்பில் அனைத்து மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ‘நீட்' தேர்வை விலக்கக்கோரும் கண்டன ஆர்ப்பாட்டம் 22.2.2-018 அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சே.வ.கோபண்ணா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பா.சிறீவினோத், மதிமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கா.பாண்டியன், செஞ்சி ஒன்றிய மதிமுக மாணவரணி அமைப்பாளர் இராமு, இ.யூ.மு.லீக் மாணவர் பேரவை மாவட்ட செயலாளர் சையத் பாபா, இந்திய மாணவர் சங்க மாவட்ட மாணவரணிச் செயலாளர் எஸ்.அறிவழகன், துணைச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் வி.அகத்தியன், மாவட்ட முற்போக்கு மாணவர் கழக துணை அமைப்பாளர்கள் மு.முரளி, எ.புஷ்பராஜ், ஏ.தலித்அரசன், எ.மதன்ராஜ், ம.ம.க. மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.முகம்மது ஹாபி, விழுப்புரம் நகர கழக செயலாளர் கோ.பூங்கான், கோலியனூர் கழக தலைவர் இராமலிங்கம், செஞ்சி நகர கழக அமைப்பாளர் பா.அர்ச்சுனன் உட்பட அனைத்துக் கட்சியின் இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் கழக மாண வரணியைச் சேர்ந்த கீ.கோ.இலக்கியா நன்றி கூறினார்.

புதுச்சேரி

கிராமபுற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை கண்டித்து புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகில் அனைத்து மாண வர்கள் அமைப்புகள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப் பாட்டம் 22.2.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

புதுச்சேரி பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் தோழர் ஜீ.சு.சுவாமிநாதன் ஒருங்கிணைத்தார். நீட் நுழைவுத் தேர்வை கண்டித்து சமூகநீதி பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற செயலாளர் தோழர் எழில், புதுச்சேரி திமுக மாணவர் அணி செயலாளர் மணிமாறன், புதுச்சேரி முற்போக்கு மாணவர் சங்க செயலாளர் தோழர் தமிழ்வாணன், சமூகநீதி மாணவர் இயக்க செயலாளர் தோழர் முகமது வயாஸ், திராவிடர் மாணவர் கழக தலைவர் தோழர் சு.மணிபாரதி, புதுச்சேரி மாநில திமுக தெற்கு பகுதி செயலாளர் சிவா (சட்டமன்ற உறுப்பினர்), புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் தோழர் இரா.விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இராஜாங்கம், திராவிடர் கழக மாநில தலைவர் சிவ.வீரமணி, செயலர் ஜி.அறிவழகன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் பஷீர் அகமது, விடுதலை சிறத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலர் தேவ.பொழிலன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் முருகானந்தம், மதிமுக பொதுக்குழு தலைவர் ஆ.சந்திரசேகரன், லோக் ஜனசக்தி மாநில தலைவர் புரட்சிவேந்தன், புதுச்சேரி சமூகநீதி கட்சி தலைவர் நவீன் தனராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைத் தலைவர் கீதநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட மாணவர் கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்யாறு

22.2.2018 அன்று காலை 10.30 மணிக்கு செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் முன் ‘நீட்'_இல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சமூகநீதி பாதுகாப்பு பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் அ.நாகராஜன் வரவேற்க திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வ.அன்பழகன் அறிமுக உரை நிகழ்த்தினார். நீட் நாட்டுக்கு, வீட்டுக்கு ஆபத்து என்பதனை வலியுறுத்தி சிபிஅய்எம் சார்பாக சோலை பழனி, விடுதலை சிறுத்தைகள் சார்பாக குப்பன், மாணவர் அமைப்பின் சார்பாக ஆசிரியர் கா.கோவேந்தன், தமிழ்நாடு மு.மு.கழக சார்பாக ஆசிரியர் கா.கோவேந்தன், தமிழ்நாடு மு.மு.கழக சார்பாக எச்.கமால், மதிமுக சார்பாக சி.ஆர்.நேரு, வழக்குரைஞர் சீத்தாராம், திராவிடர் கழகம் சார்பாக அ.இளங்கோவன், பேராசிரியர் மு.தமிழ்மொழி உரையாற்ற நீட் எதிர்ப்பு ஒலி முழக்கங்கள் எழுப்பப் பட்டன. தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண் டறிக்கைகள் மக்களுக்கு, மாணவர்கட்கு வழங்கப்பட்டது.

கழக தோழர்கள் என்.கஜபதி, என்.சீனிவாசன், தங்கம் பெருமாள், கோவிந்தன், பொன்.சுந்தர், கன்னியப்பன், வரதராஜன், திமுக தோழர்கள் ஏ.என்.சம்பத், ஆ.மோகன வேல், ராஜேந்திரன், ப.க. மணிவண்ணன், சிபிஅய்எம் தோழர்கள் வெங்கடேசன், சங்கர், கோபாலகிருஷ்ணன், மதிமுக தோழர்கள் ரவி, ரமேஷ், பப்லு, கமலேஷ், சிசர்குப்பன், மாணவர் அமைப்பு மணிகண்டன், அரவிந்த், சிவசந்திரபிரகாஷ், தினேஷ்குமார், நவீன்குமார், மற்றும் தமுமுக தோழர்கள் ஹயாத்பாஷா, லத்திப்சரிப், ரவி, ஷாரு, மூர்த்தி, முத்தையா, ஷரீப், சல்மான், சுலைமான், ஜாகிர், சித்திக், அஸ்லாம் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இறுதியில் நகர கழக தலைவர் தி.காமராஜ் இரண் டொரு கருத்தை கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சமூகநீதி பாதுகாப்பு மாணவர் பேரவை சார்பில் தமிழகத்துக்கு மருத்துவக் கல்வியில் தேசியத் தகுதி நுழைவுத்தேர்வு ‘நீட்'க்கு நிரந்தரவிலக்குக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சார்பில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக் தலைமை வகித்தார்.திராவிடர் கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெ.அன்பரசன் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் காங்கிரசு கட்சியின் சார்பில் மாணவரணி அமைப்பாளர் க.திருநாவுக்கரசு, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் குமாரவேல் விக்னேஷ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் மு.செல்லமுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் க.செந்தமிழ்வளவன், இந்தியன் முஸ்லீம் லீக்கின் மாணவரணி மாவட்டச் செயலாளர் முகம்மது ஜவஹருதீன், இணைச் செயலாளர் முகம்மது யாசர், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது அசாருதீன், கிழக்கு மாவட்டச் செயலாளர் அப்துல் லத்தீப், வழக்குரைஞர் சங்கவிதர்மா, திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டு விளக்கவுரையாற்றினார்கள்.

மேலும் ப.க. மலர்மன்னன், மாவட்ட துணைச் செய லாளர் செ.இராசேந்திரன், மாணவரணியைச் சேர்ந்த அறி வழகன்,ஆறு.தமிழன்பு,அனைத்திந்திய மாணவர் பெரு மன்றத்தின் சார்பில் ப.உதயகுமார், மு.விஜய், சு.மனோ, விசிக.சிலம்பரசன், விடுதலைச் செய்தியாளர் ம.மு. கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அன்னவாசல் ஒன்றிய மாணவரணித் தலைவர் மு.ஸ்டாலின் நன்றி கூறினார்.

ஆலங்குடி

22.2.2018 அன்று மாலை 4.30 மணியளவில் அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் தோழமை கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் நீட் தேர்வு நிரந்தர விலக்கு கோரி மய்ய அரசையும், மாநில அரசையும் வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவரணி க.தர்மசாஸ்தா தலைமை ஏற்று உரை யாற்றினார். மாணவரணி க.யோகேஷ் வரவேற்புரையாற் றினார். மாணவ தோழர்கள் க.ரமேஷ், எஸ்.நிஷாந்த், எஸ்.கார்த்தி, கே.நவீன், எம்.சாய்ராம்,. டி.அஜய் ராமநாதன், சிவசுப்பிரமணியன், சுதர்சன், யோகராஜ், புரோஸ்தீன், நரேஷ் உரையாற்றினார்கள். மற்றும் அஞ்சுகா, அய்ஸ் வர்யா, ஆண்டனி, ப.அபிநயா, எஸ்.கற்பகம், நித்திஷா, சி.கவிதா, எஸ்.சந்தியா, கு.தேன்மொழி மற்றும் பெருந் திரளாக மாணவர்கள் பங்கேற்றனர். பலமுறை ஒலி முழக்கம் செய்யப்பட்டன.

மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்ட செய லாளர் இரா.இளங்கோ, ஒன்றிய செயலாளர் துரை.குமார், நகர கழக தலைவர் சீனிவாசன், புதுக்கோட்டை விடுதி கழக செயலாளர் வீ.தங்கவேல், சி.சசிகுமார், ப.க. தோழர், ஆசிரியர் பிரபாகரன் மற்றும் தோழமை கட்சி வருகை தந்துள்ளனர். மாணவரணி தோழர் ஆதித்யன் நன்றியுரை கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner