முன்பு அடுத்து Page:

திருவாரூர் பகுதியில் பெருந்திரளானோரிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி த…

திருவாரூர் பகுதியில்  பெருந்திரளானோரிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தேர்தல் பரப்புரை தொடங்கினார்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மக்களவைத்  தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து, பழையவலம், சோழங்கநல்லூர் பகுதிகளில் இன்று காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை தொடங்கினார். பாசிச பாஜக ஆட்சி மீண்டும் வரக்கூடாது ஏன்? திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் ஏன்? எனும் கழக வெளியீடான புத்தகம் வெளியிடப்பட்டது........ மேலும்

26 மார்ச் 2019 16:53:04

எந்த சனாதனத்தை எதிர்த்து காலம் எல்லாம் போராடினோமோ அந்த சனாதனம் வடக்கிலிருந்து வருகிறது - தொடர்ந்து ம…

எந்த சனாதனத்தை எதிர்த்து காலம் எல்லாம் போராடினோமோ அந்த சனாதனம் வடக்கிலிருந்து வருகிறது - தொடர்ந்து முறியடிப்போம் வாரீர்!

தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ முழக்கம் தஞ்சை, மார்ச் 26 எந்த சனாதனத்தை, ஆரியத்தை எதிர்த்து காலமெல்லாம் போராடினோமோ அந்த சனா தனம், ஆரியம் நம்மை ஆதிக்கம் செய்ய வடக்கே இருந்து வருகிறது. இந்த ஆபத்தை முறியடிப்போம் என்றார்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ  அவர்கள். 23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடை பெற்ற திராவிடர் கழக....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

27.03.2019 - புதன்கிழமை தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி   எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேரம்: மாலை 5 மணி இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: மு.இராமதாசு (மன்னை நகரச் செயலாளர்) * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்) பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்) மு.தமிழ்ச்செல்வம் (மன்னை ஒன்றியத் தலைவர்) கா.செல்வராசு (மன்னை ஒன்றியச் செயலாளர்) * தொடக்கவுரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர்கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தமிழர் தலைவர்....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

திராவிடர் கழக மாநில மாநாட்டில் முதன்முதலாக பேசும் வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் வீரமணிக்கு நன்றி!

திராவிடர் கழக மாநில மாநாட்டில் முதன்முதலாக பேசும் வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் வீரமணிக்கு நன்றி!

ஏச்சு வரும், தண்டனை வரும் என்று தெரிந்தே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் தந்தை பெரியார் தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ சூட்டிய புகழாரம் தஞ்சை, மார்ச் 25 தந்தை பெரியார் மாலையும், வரவேற்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பொதுத் தொண்டை மேற்கொள்ளவில்லை; எதிர்ப்பும், ஏளன மும், சிறைவாசமும் கிடைக்கும் என்று தெரிந்தே பொதுத் தொண்டை மேற்கொண்டார் என்றார்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்....... மேலும்

25 மார்ச் 2019 16:49:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

சாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன், விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூர் நாள்: 29.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி இடம்: வடக்கு ரத வீதி, சாத்தூர். தலைமை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) வரவேற்புரை:  இல.திருப்பதி (மாவட்டதலைவர்) முன்னிலை: வானவில். வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கே,கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். (தெற்கு மாவட்ட செயலாளர்- திமுக) சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு (வடக்கு மாவட்ட செயலாளர் - திமுக) சிறப்புரை: முனைவர் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) முனைவர்....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

திருவாரூர் சட்டமன்ற தொகுதி பூண்டி கே.கலைவாணன் நாகை நாடாளுமன்ற தொகுதி எம்.செல்வராஜ் நாள்: 26.3.2019 செவ்வாய்கிழமை மாலை 6 மணி இடம்: பனகல் சாலை, திருவாரூர் வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)) சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்) எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) தொடக்க உரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர் திராவிடர் கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) சிறப்புரைரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தனுஷ் எம்.குமார் நாள்: 29.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி இடம்: மதுரை ராசா கடைத் தெரு, இராசபாளையம் தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: பூ.சிவக்குமார் (நகரத்தலைவர்) முன்னிலை: டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்) விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்) தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். (தெற்கு மாவட்ட செயலாளர்- திமுக) சட்டமன்ற உறுப்பினர்  தங்கம் தென்னரசு (வடக்கு மாவட்ட அசெயலாளர் - திமுக) சட்டமன்ற....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

பெரியார் குடும்பம் என்னும் ஒரு பல்கலைக் கழகத்தில் பெருமைக்குரிய நினைவேந்தல் நிகழ்ச்சி!

பெரியார் குடும்பம் என்னும் ஒரு பல்கலைக் கழகத்தில்  பெருமைக்குரிய நினைவேந்தல் நிகழ்ச்சி!

பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் தொண்டறச் செம்மல்" கல்வியாளர் மானமிகு கோ. அரங்கசாமி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னைப் பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் 23.3.2019 மாலை கொள்கை சார்ந்து வாழ்ந்த ஒருவரின் போற்றுதலுக்குரிய பண்பு நலன்களைச் சீர்தூக்கும் நல் விழாவாக அமைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு இரண்டாண்டு களுக்கு முன் அவருடன் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் எடுத்த செவ்வியின்  காணொலிக் காட்சி திரையிடப்பட்டது. படத்திறப்புக்கு....... மேலும்

25 மார்ச் 2019 16:02:04

மாநாட்டு நன்கொடை வசூல்: தோழர்களுக்கு நன்றி!

பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெற்ற  திராவிடர் கழக மாநில மாநாடு - சமுகநீதி மாநாடுகளில் கிடைத்த நன்கொடைகளில், மாநாட்டுச் செலவுகள் போக மீதித் தொகை ரூ.15,70,382 (ரூபாய் பதினைந்து லட்சத்து எழுபதாயிரத்து முந்நூற்று எண்பத்தி இரண்டு மட்டும்)  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குறுகிய காலத்தில் உழைத்த தோழர்களுக்கும், கடைவீதிகளிலும், வீடுகளிலும் வசூல் செய்து கொடுத்த மகளிரணி, இளைஞரணி ....... மேலும்

25 மார்ச் 2019 15:07:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன.12 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக 10.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத் தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்றத்தின் செயலர் பேராசிரியர் கே.ஏ.எஸ். முகமது சபீஃக்  வரவேற்புரையாற்றினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்கள்  பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தமது உரையில்:

வியர்வை துளிகளை மண்ணில் சிந்தி மகிழ்ச்சியை அறுவடை செய்யக்கூடிய திருநாள்தான் தைத்திருநாள் என்றும் பண்டிகைகளையும், விழாக்களையும் பெரிதும் எதிர்த்த அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களால் இனம் காட்டப்பட்ட ஒரே விழா, ஒப்பற்ற விழா பொங்கல் விழா என்றும் உரையாற்றினார்.

மேலும் ஜாதி, மத பேதம் கடந்து சமத்துவத்தை எடுத்துரைக்கும் பொங்கல் விழாவை மட்டும்தான் அய்யா அவர்கள் தமிழன் விழாவாக  அறிவித்தார்கள். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக் காரன் என்ற பாகுபாடு இல்லாமல்

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒரே விதமாக கொண்டாடக்கூடியது பொங்கல் விழா என்றும் உரையாற்றினார்.

தற்பொழுது இந்தியாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நடை பெற்ற அறிவியல் கருத்தரங்கில் இதிகாச, புராண கதைகள் அறிவியலின் அடிப்படை என்று சுட்டிக்காட்டியிருப்பது கல்வியா ளர்களின் மத்தியிலும், பகுத்தறிவாளர் களின் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தி யிருப்பதாகவும் இவற்றை யெல்லாம் எதிர்த்து குரல்கொடுத்து அறிவியல் உண் மைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதில் நம் நிறுவனத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு பகுத்தறிவான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல்  நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொண்டார்.

முனைவர் க.அன்பழகன்

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் க. அன் பழகன் அவர்கள் தை முதல் நாள் தமிழர் திருநாள் என்ற தலைப்பில் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில்:

தமிழர்களின் புகழை பறைசாற்றும்  பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் பெரியார் மருந் தியல் கல்லூரியின் நிகழ்ச்சியில் பங்கேற் பதில் பெருமகிழ்ச்சியடைவதாக உரை யாற்றினார்.

உழைப்பை முன்னிறுத்தி திராவிட இனத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள தமிழின மக்களால் கொண் டாடப்பட்டு வருகிறது என்றும் சமத்து வத்தை நிலைநாட்டும் தைத்திருநாளை மாணவ சமுதாயம் ஒன்றிணைந்து கொண் டாட வேண்டும் என்றும் உரையாற்றினார்.

மேலும் உழுபவர்களின் பின்னால் தான் இவ்வுலகம் செல்கிறது. அவர் களுடைய மேன்மையையும், உழைப் பையும் போற்றும் விதமாக உள்ள பண்டி கைதான் பொங்கல் பண்டிகை என்றும் மற்ற பண்டிகைகள் அனைத்தும் ஜாதி, மத, மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடியது என்றும் உரையாற்றினார். உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தமிழனுக்கென ஒரு இனம், மொழி, நாடு உள்ளது போன்று தமிழர்களுக்கென்ற ஒரு விழா பொங்கல் விழா என்பதனை தெளிவாக தமிழின மக்களுக்கு எடுத்து ரைத்தார்.

மாணவ சமுதாயம் மற்ற செயல் பாடுகளில் காட்டக்கூடிய அக்கறை களையும், எழுச்சிகளையும், தமிழ் இனம் மற்றும் மொழி சார்ந்த உணர்வுகளில் காட்ட வேண்டும் என்றும் எடுத்துரைத்து ஆரியர்கள் காட்டிய அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள் குறித்த ஆபாசங் களையும் தீபாவளி, ஆயுத பூஜை குறித்த புரட்டுக்களையும் மாணவர்களுக்கு சிறப் பாக எடுத்துரைத்தார்.

இவ்விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர்  அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் ச. குண சேகரன், செயலாளர் எம். வெங்கடேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தலைவர் எம். பிரிய தர்ஷினி நிகழ்ச்சியினை தொகுத்து வழங் கினார்.

சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப் பித்த இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சு. பாரதி நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner