முன்பு அடுத்து Page:

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்   திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை  தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்

20 பிப்ரவரி 2019 17:08:05

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

காரைக்குடி திராவிட மணி சார்பில் ரூ.ஒரு லட்சத்தினை என்னாரெசு பிராட்லா தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சிறீவில்லிபுத்தூர், 17.2.2019) இராஜபாளையம் இல.திருப்பதி மாநாட்டுநிதியாக ரூ.30 ஆயிரம், விடுதலை ஆதவன் ரூ.10 ஆயிரம், வானவில் மணி ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சிறீவில்லிப்புத்தூர், 17.2.2019) திராவிடர் கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூர் சேகர் ரூ. ஒரு லட்சத்தினை மாநாட்டுநிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 20.2.2019) சென்னை மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், மாநாட்டு நிதியாக....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசு…

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு!  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசுகள்!

சென்னை.பிப். 20 ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பேசி, பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் கடந்த 4.2.2019 ஆம் தேதி பெரியார் 1000 வினாவிடைப்....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:59:03

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சென்னை, பிப்.20 நம்மை சூத்திரன் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் 7.2.2019 அன்று தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தினரால் எரிக்கப்பட்டது. அவ்விவரம் வருமாறு: ஈரோடு 07.02.2019 வியாழன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் ஒன்று கூடி மனுதர்மத்தை ஒலி முழக்கத்துடன் எரிக்க முயன்ற போது 28 தோழர்கள் ஈரோடு மாநகர காவல்துறையினரால் கைது....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:58:03

கழகக் களத்தில்...!(22,16,17.2.2019)

22.2.2019 வெள்ளிக்கிழமை ‘பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு’ சென்னை: * நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை * இடம்: அறை எண் 48, நவீன குளிரூட்டப்பட்ட அரங்கு,  டவர் கிளாக் கட்டடம், இந்திய வரலாற்றுத் துறை,  சென்னை பல்கலைக்கழகம் *  தலைப்பு: ‘பெரியாரின் நடைமுறைத் தத்துவம்’ * உரையாற்றுபவர்:  பேராசிரியர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், மேனாள் தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் * அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், தலைவர் இந்திய வரலாற்றுத் துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:50:03

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

காரைக்கால் மண்டலத்தில் சமுக நீதி மாநில மாநாட்டிற்கான கடைவீதி வசூல் பணியில் காரைக்கால் மண்டல இளைஞர் அணியின் தலைவர் நாத்திக பொன்முடி, மண்டல இளைஞர் அணியின் செயலாளர் பெரியார் கணபதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல துணை தலைவர் பதி.செயசங்கர், பொதுக் குழு உறுப்பினர் அன்பானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்

20 பிப்ரவரி 2019 15:44:03

ஒழுங்கு நடவடிக்கை

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி:  நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்

19 பிப்ரவரி 2019 16:17:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொன்னேரி, பிப். 3 "பெரியாருக்கு முன்னும் பின்னும் தமிழ்நாடு’’ என்ற தலைப்பில் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு சிறப்புரை ஆற்றினார்.

தந்தை பெரியாரின் 140 ஆம் பிறந்த நாளை யொட்டி பொன்னேரியிலுள்ள அரிஅரன் கடைவீதி யில் கடந்த 5.2.2019 அன்று பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டம் பொன்னேரி நகர, மீஞ்சூர் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கழக பொன்னேரி நகர செயலாளர் மு. சுதாகர் அனைவரை யும் வர வேற்றுப் பேசினார். கழக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன் தலைமையேற்றுச் சிறப்பித் தார். இரா.விசயகுமார், சு.இராச சேகர், வ.ரவி, பாஸ் கரன், செ.உதயகுமார், மு.க.தமிழ்ச்செல்வன், வழக்கு ரைஞர் கே. மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டிபன் பாக்சுக்கு தீட்டுக்

கழித்த பார்ப்பனர்கள்?

இறுதியில் சிறப்புரையாற்றிய செயலவைத் தலைவர் தனது உரையில், “1910 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து, பின்னாளில் துணை வேந்தராக வந்தவரான டி.எம்.நாராயணசாமிப் பிள் ளையாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய நாடாராக இருந்தாலும் சரி, சோறு விற்கும் பார்ப்பான் கடையில் டிபன் பாக்சை வைத்து, அதன்மீது காசை வைத்து விட்டு சென்றுவிட வேண்டும். பிறகு அந்த சோற் றுக்கடைப் பார்ப்பான் டிபன் பாக்சின் மீது தண்ணீர் தெளித்து தீட்டுக் கழித்து விட்டு, அதில் சாப்பாடு வைத்து ¢அவரவர் பெயரைச் சொல்லி அழைப்பான். அதன் பிறகு அதை வாங்கிவந்து கூவம் நதிக்கரையிலே உட்கார்ந்து சாப்பிடவேண்டும். இதுதான் நமது அன்றைய நிலை. இந்த நிலையைப் போக்கத்தான் நடேசமுதலியார் 1914 இல் திராவிடர் விடுதியைத் தொடங் கினார். அதுமட்டுமா? திருச்சி காவேரி படித்துறையில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க வேண்டும் என்று பார்ப்பனர்களின் தூண்டுதலால் பொன்னுசாமித்தேவர் கொடுத்த தீர்மானத்தின்படி, முனிசிபாலிட் டியில் அப்படி ஒரு பெயர்ப்பலகையே வைக்கப்பட்டது. இதுதான் நமது அன்றைய நிலை. 1916 இல் பார்ப்பனரல்லாதோர் கொள்கைப்பிரகடனம் வந்த துணிச்சலில் 1918 இல் அந்த பெயர்ப்பலகை உடைத் தெறியப்பட்டது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெரியா ருக்கு முன் மகாராஜராஜன் சுப்பிரமணியன் மகன் சூத்திரன் அறிவுக்கரசுதானே? பெரி யாருக்கு முன் மகாராஜராஜன் சுப்பிரமணி யன் மகன் பஞ்சமன் அறிவுக்கரசுதானே? என்று தன்னையே உதாரணமாக்கி அன்றைய நமது நிலையை பளிச்சென்று உணர்த்தினார். நீதிக்கட்சியைச் சேர்ந்த பனகல் அரசர்தானே அதை மாற்றினார். மந்திரியோனாலும் மாண்புமிகு சூத்திரன் தானே?" என்று கேள்வி மேல் கேள்விகள் கேட்டு, "இந்த வரலாறெல்லாம் இன்றைக்கிருக்கிற தமிழ்தேசியவாதி களுக்குத் தெரியுமா?’’ என்று கூடுதலாக ஒரு கேள்வி கேட்டுவிட்டு, “பெரியார் மட்டும் இல்லை யென்றால், பார்ப்பான் நமது நெற்றியிலேயே சூத்திரன் பஞ்சமன் என்று எழுதி யிருப்பானே?’’ என்று சனாதனத்தின் கொடூரத்தைச் சுட்டிக்காட்டினார். இந்தப் பெயரை நமக்குச் சூட்டக் காரணமாக இருந்தவன் ராஜராஜன் என்று கூடுதலாக ஒரு தகவலைச்சொன்னார். அது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இப்படி பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சுவையாகப் பட்டியலிட்டு விட்டு, “அப்படியிருந்த நாம் இந்தளவுக்கு மாறி வந்திருக்கிறோம் என்றால், இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணம் திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும்தான் என்று கூறி இன்று மத்திய மாநில அரசுகளால் வந்திருக்கும் ஆபத்தைச் சுட்டிக் காட்டி, பெரியாரின் வழியில் அப்படியே பின்தொடரும் திராவிடர்கழகத்தின் இன் றைய தலைவர் ஆசிரியர் வீரமணி  அவர் கள் சுட்டிக் காட்டுகிற பாதையில் அனை வரும் நடைபோட வேண்டும். அதுதான் நமது மீட்சிக்கு ஒரே வழி’’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக “தமிழ்தேசியத்திற்கு எதி ரானவரா தந்தை பெரியார்?’’ என்ற தலைப்பில் மாநில மாண வர் கழக மகளிரணி இணைச் செயலாளர் பா.மணி யம்மை உரையாற்றினார். மாநில அமைப்புச் செயலா ளர் வி.பன்னீர் செல்வம் அவர்கள் இந்நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கழக சோழவரம் ஒன்றியத் தலைவர் சக்ரவர்த்தி, வடசென்னை மாவட்டம் கண்ணதாசன் நகர் பகுதித்தலைவர் ஜீவா, புழல் ஒன் றியச் செயலா ளர் ஜனாதிபதி, பொன்னேரி மாவட்ட திராவிட மகளிரணி பாசறைச் செயலாளர் செல்வி, புழல் மாவட்டத் தலைவர் த.ஆனந்தன்  ஆகியோர் உரை யாற்றினர்.

கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்!

நிகழ்ச்சியில் க.ச.க.இரணியன், மு.இராணி, க.எழில், இரா. இரமேசு, க. கார்த்திகேயன், ச.நதியா, அறிவுமாணன், தெய்வசிகாமணி, சு.மல்லிகார்ஜூ னன், மு.பாபு, மா.இளையராணி, மு.ராமு, சு. துர்கா, அருணகிரி, இரா.சோமு, க.சுகன்ராஜ், வடகரை செகத் விசயகுமார், ந.கசேந்திரன், ஜெகந்நாதன் ஆகியோரும், கிளைக்கழக அமைப்பாளர்களான ரா.வினோத், மதி வாணன், ஏ,முரளி, கோபி ஆனந்தராஜ், சு.பாலாஜி, கோடீஸ்வரன், இரணியன், இராஜேசு ஆகியோரும், மாணவர் கழகத் தோழர்களான இரா. தேன்மொழி, ரா.வேணி, ச.கோமதி, மு. மாரியம்மாள், நீ.ஞான சேகர், ச.கோமதி, சு.சாந்தி, மு.பொன்னரசி, சி.தமி ழேந்தி, இரா.முருகேசுவரி, து.ஆகாஷ், ர.அரிஅரன், கா.சுபலட்சுமி, த.லட்சுமி ஆகியோரும், இளை ஞரணித் தோழர்களான கோபி, கவியரசு ஆகி யோரும், பெரியார் பிஞ்சுகளான மு.இரா.பவதாரணி, ம.பாவேந்தர், வே.இரா.எழில்மாறன், சு.க. இனிய வன், த.அன்புச்செல்வன், வி.செ.வெண்பா, ச.கோ.பகுத்தறிவு, ச.கோ. நக்கீ ரன், ந.யாழினி, த.மலர்விழி ஆகியோரும், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல், பெரியார் வலைக்காட்சி சுதன், செந்துறை இரா.இராசேந்திரன், தாம்பரம் மாவட்டத் தோழர் மோகன்ராஜ், தி.மு. க.மாவட்டத் துணைச் செயலாளர் கதிர வன், முன்னாள் நகரச் செயலாளர் நக்கீரன், தி.மு.க. வெல்டன் வாசகர் மற்றும் ஏராள மான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.  இறுதியில் கழக பொன்னேரி மாவட்ட நகரத் தலைவர் வே.அருள் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner