முன்பு அடுத்து Page:

உலக புத்தக நாளில் “புத்தகர்" விருது

உலக புத்தக நாளில் “புத்தகர்

சென்னை புத்தக சங்கமத்தின் சார்பில் நூல் வாசிப்பு மற்றும் நூலக வளர்ச்சிக்கு பாடுபட்டு வருபவர்களை அடையாளம் கண்டு, உலக புத்தக நாளில் “புத்தகர்" விருது அளிக்கப்பட்டு வருகிறது. 23.4.2019 அன்று முனைவர் பா.பெருமாள், பொன்.மாரியப்பன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். புத்தகர் விருது பெற்றவர்கள் குறித்த....... மேலும்

25 ஏப்ரல் 2019 17:24:05

சென்னை புத்தகச் சங்கமத்தில் ’புத்தகத் தேனீ'’ யானார் தமிழர் தலைவர் கி.வீரமணி!

சென்னை புத்தகச் சங்கமத்தில் ’புத்தகத் தேனீ'’ யானார் தமிழர் தலைவர் கி.வீரமணி!

உரையரங்கத்தில் பிறவி பேதத்தைச் சாடிய திரைக்கலைஞர் ரோகிணி! சென்னை, ஏப். 25 சென்னை புத்தகச் சங்கமத்தில் தமிழர் தலைவர் வாசகர்களோடு வாசகராக புத்தகங்களை வாங்கினார். திரைக்கலைஞரும், சமுக செயல்பாட்டா ளருமான ரோகிணி, மாலை உரையரங்கத்தில் கலந்து கொண்டு, எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் தலைமையில் படைப்பூக்கம் தரும் புத்தக வாசிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். புத்தக வாசிப்பு குறித்த ஒரு தேடலை குழந்தை களிடமும், பெரியவர்களிடமும் ஒருசேர உருவாக்குவது தான் சென்னை புத்தகச்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

இலக்கிய சொற்பொழிவு

இலக்கிய சொற்பொழிவு

சென்னை புத்தக சங்கமத்தில் ”அறிவியக்கப் புலமை கண்ட செந்தமிழ்நாடே!” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய இலக்கிய சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார். மேலும்

24 ஏப்ரல் 2019 16:03:04

2019 - புத்தகர் விருது - பாராட்டு

2019 - புத்தகர் விருது - பாராட்டு

சென்னை புத்தகச் சங்கமத்தில், உலக புத்தக நாளை முன்னிட்டு நூல்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் அயராது பணியாற்றும் தோழர்கள் நூலக ஞானி பேராசிரியர் பா.பெருமாள், பொன். மாரியப்பன் ஆகியோருக்கு புத்தகர் விருது வழங்கி, நினைவுச்சின்னமும், இயக்கப்புத்தகங்களும் வழங்கி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் (சென்னை, பெரியார் திடல், 23.4.2019). மேலும்

24 ஏப்ரல் 2019 15:15:03

சென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்…

சென்னையில் 27.4.2019  சனியன்று  திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருள்: கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம். சட்டத் துறையினரும் கலந்து கொள்க! - & கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

23 ஏப்ரல் 2019 16:42:04

"நான் நிறையப் புத்தகங்களைப் படித்ததால்தான்; இன்னும் நிறையப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றே தெரிந…

அறிஞர் சாக்ரட்டீசின் அனுபவத்தைக் குறிப்பிட்டு, கவிஞர் நெல்லை ஜெயந்தா உரைவீச்சு! சென்னை. ஏப். 23 சென்னை புத்தகச் சங்கமத்தில் மூன் றாம் நாள் உரையரங்கில் கவிஞர் நெல்லை ஜெயந்தா வாசிப்பைச் சுவாசிப்போம்! என்ற தலைப்பில் தன்னு டைய வாசிப்பு அனுபவங்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக இன்றைய இளைய சமுகத்திடம் வாசிப்புத் திறன் குறைந்துகொண்டே செல்கிறது என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால், புத்தகங்களின்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:54:03

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

ராஜசேகரன் & -கவுமாரீஸ்வரி மகன் கவுதம் ஜீனாவுக்கும், சிவானந்தம் & பத்மாவதி மகள் உமாசிறீக்கும் இணையேற்பு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். (சென்னை 22.4.2019) மேலும்

22 ஏப்ரல் 2019 16:22:04

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத…

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத்தலாம் - புத்தகங்களைப் படிக்க வேண்டும்!

சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற அர்த்தமுள்ள விவாத அரங்கம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விவாதத்தில் பங்கேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருக்கும் இயக்கப் புத்தகங்களைக் கொடுத்து சிறப்பு செய்தார். சென்னை, ஏப்.22, சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாம் நாள் மாலைநேரக் கருத்தரங்கில் இளம் படைப் பாளிகள், வாசகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய இளைய சமுகம் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர். சென்னை....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:00:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சூளுரை

கோவை, பிப்.11 மதவெறிக்கும் - ஜாதி வெறிக்கும் நாட்டில் இடமில்லை என்று காந்தியார் நினைவு நாளில் உறுதியெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சூளுரைத்தார்.

31.1.2019 அன்று  கோவையில் நடைபெற்ற காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.  அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆரிய சமாஜ் என்பது ஏமாற்று வேலை என்றார் காந்தியார்!

ஆரிய சமாஜ் என்பது ஏமாற்று வேலை என்று காந்தியார் பேசிவிட்டார்.

ஆரிய சமாஜைப்பற்றி எப்படி இவர் தாக்கிப் பேசலாம்? அதை வைத்துத்தானே நாங்கள் எல்லாவற் றையும் கொண்டு வரலாம் என்று நினைத்தோம். வெவ்வேறு புனைப் பெயரிலும், வெவ்வேறு முகமூடிகள் அணிந்திருப்பார்கள் - அந்த வாய்ப்புகளைப் பயன் படுத்தலாம் என்று நினைத்தார்கள்; ஆனால், அவர் களால், அது முடியவில்லை.

இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள், காந்தியா ரைக் கொல்வதற்கான காரணங்கள்பற்றி. நிறைய காரணங்கள் அதில் இருக்கிறது.

ஆகவே, அவர்களுடைய அடிப்படை என்னவென் றால், மதவெறி, பார்ப்பனிய சனாதனத்தைக் காக்க வேண்டும்; சமூகநீதி எல்லோருக்கும் எல்லாமும் கிடைக் கக்கூடாது. அவர்களுக்கு மட்டும்தான் ஏகபோகம், கல்வித் துறை உள்பட.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், அறிவைக் கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள்.

சட்டத்தை மதிக்காமல்

இராமன் கோவிலா?

அரசியல் சட்டத்தில் உள்ளவற்றை உங்களுக்கு எடுத்துச் சொன்னோம். அரசியல் சட்டம் அமலான போது, நவம்பர் 26 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸினுடைய பத்திரிகை சஞ்சன்யா' இந்தி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்கள்.

என்னவென்றால், அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது; அதற்குப் பதிலாக மனுநீதிதான், மனுதர்மம்தான் சட்டமாக வரவேண்டும் என்று.

அவர்கள்இன்றைக்குஎப்படிசட்டத்தைமதிக் காமல்ராமன் கோவில் கட்டுவோம் என்று அடிக்கல் நாட்டுகிறார்களோ, உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல், வழக்கைப்பற்றி கவலைப்படாமல், இடம் இல்லை என்று சொன்னாலும், நீங்கள் கட்டாயமாக இடம் கொடுக்கவேண்டும்; மற்றவர்களுடைய இடங் களை நாங்கள் வாங்குவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தால், அதனுடைய அடிப்படை என்ன?

பிரதமர் எடுத்த வாக்குறுதி என்னாயிற்று?

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. அதனை செயல்படுத்துவதற்கு, அங்கேயுள்ள கேரள அரசாங்கம் முயற்சி செய்கிறது. ஒரு பிரதமர் அங்கே சென்று அதனைக் கண்டிக்கலாமா? அப்படி என்றால், பிரதமர் எடுத்த வாக்குறுதி என்னாயிற்று? அரசியல் சட்டத்தைக் காப்போம் என்றுதானே பதவிப் பிராமணம் எடுத்துக் கொள்கிறீர்கள்.

எனவேதான் நண்பர்களே, முழுக்க முழுக்க இவர்களுடைய ஆதிக்கம் என்பது பார்ப்பன ஆதிக்கம். பா.ஜ.க. என்றால், பார்ப்பன பனியா கட்சி. அவர்களுக்குக் கோபம் வந்தது என்பதற்காகத்தான் இப்பொழுது அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம்.

இதை அனுபவிக்கப் போவது, அவர் சொன்னதுபோல, பார்ப்பனர்கள்தான். இது நம்மாட்களுக்குப் புரியாமல், ஏழைகளுக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.

மோடியினுடைய கணக்கில், ஏழை யார் தெரியமா? ஏழைகளின் பக்கம் நான் நிற்கிறேன் என்று சொல்கிறார். பிரதமராக இருக்கின்ற ஒருவர் ஏழைகளின் பக்கம் நிற்கக்கூடாது; ஏழைகளே இல்லாத பக்கம்தான் அவர் நிற்கவேண்டும்.

2,300 ரூபாய் ஒரு நாளைக்குச் சம்பாதிப்பவர்தான், ஏழையாம் - மோடியினுடைய கணக்குப்படி.

அரசாங்கக் கணக்குப்படி வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் யார் என்றால், கிராமமாக இருந்தால் ஒரு நாளைக்கு 27 ரூபாய். நகரமாக இருந்தால், 34 ரூபாய்.

36 சதவிகித ஜி.எஸ்.டியை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாங்கள் மாற்றமாட்டோம் என்றார்.

இதே ஜி.எஸ்.டி.யை குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபொழுது அவர்தான் எதிர்த்தார்.

ஆதார் அட்டை என் பிணத்தின்மீதுதான் வரவேண் டும் என்று சொன்னவரும் அவர்தான்.

கிங்காங்கை பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்களா?

55 அகலம் மார்பளவுள்ள ஒரு பிரதமர் இருக்கிறாரே, இஞ்ச் டேப் வைத்து அளந்த ஒரே ஒரு பிரதமர் இந்தி யாவிலேயே மோடிதான்.

மார்பளவு எவ்வளவு என்றா பார்க்கவேண்டும்? அப்படிப் பார்த்தால், கிங்காங்கை பிரதமராகத் தேர்ந் தெடுப்பார்களா?

பசு மாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு, மனிதர்களுக்கு இல்லையே!

மூளையினுடைய அகலத்தை சொல், அதுதான் மிக முக்கியம். அதைவிட இதயத்தினுடைய ஆழத் தைச் சொல். ஏழைகளுக்கு இரங்குகின்ற இதயம்; ஒடுக்கப்பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு.

பசு மாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு, மனிதர்களுக்கு இல்லையே, இந்த ஆட்சியில்.

பசு பாதுகாப்பாம்; அதனால்தான், எருமை மாட்டை ஊர்வலம் விட்டோம். எருமை மாடு என்ன பாவம் செய்தது? எருமை மாடு கருப்பு என்பதினாலா? எருமை மாட்டுப் பால்தான், மிகவும் கெட்டியானது; எருமை மாட்டு தயிர்தான் நல்லது.

அடுத்த ஆண்டு முழுக்க எருமைகளையே விடு வோம். கலாச்சாரப் பண்பாடு; வெள்ளைச் சர்க்கரை ஆபத்து; கருப்பு சர்க்கரை, நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்தும். விடாது கருப்பு - அதுதான் முக்கியம். எல்லா இடத்திலும் கருப்பு.

ஆகவே, அந்த வாய்ப்புகள் என்பது சாதாரணமா? இன்றைக்குத் தமிழ்நாட்டில் அவர்கள் திணறுகிறார்கள்; மற்ற இடங்களில் அவர்களால் ஏமாற்ற முடிகிறது; மற்ற இடங்களில் அவர்களால் வித்தை காட்ட முடிகிறது.

பெரியார் இல்லையென்றால்....

இங்கே இருப்பவர்கள் எல்லாம் பெரியார் வழி வந்த கருத்துள்ளவர்கள். அவர் நாமம் போட்டிருப்பார்; அவர் விபூதி பூசியிருப்பார். அவர் என்ன சொல்வார், பெரியார்தான் எங்களுக்கு; அவர் இல்லை என்றால், என்னுடைய பையன் படித்திருக்க முடியாது; அவர் இல்லை என்றால், என்னுடைய பையன் வேலைக்குப் போயிருக்க முடியாது'' என்று சொல்பவர்கள் நிறைய பேர்.

வெளிநாட்டு அம்மையார் ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டார், உங்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?'' என்று.

கண்களுக்குத் தெரிந்தவர்கள்;

கண்களுக்குத் தெரியாதவர்கள்

எங்களுடைய இயக்கத்தில் இரண்டு வகையான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒன்று, கண்களுக்குத் தெரிந்தவர்கள்; மற்றொன்று கண்களுக்குத் தெரியாத வர்கள்'' என்றேன்.

உடனே அந்த அம்மையார், பேனாவை கீழே போட்டுவிட்டு, நீங்கள் என்ன இரகசிய இயக்கம் நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள்.

பயப்படாதீர்கள். கருப்புச்சட்டை அணிந்துகொண்டு எங்களோடு இருப்பவர்கள் வெளிப்படையாக கண் ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள்.

கருப்புச் சட்டை அணியாத உறுப்பினர்கள் ஏராள மாக எங்களுடைய கொள்கைகளை, பெரியாரை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள்.

அதுதானே இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை.

முதலில் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தோல்வியை, பா.ஜ.க.வுக்கு, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு ஏற் படுத்தியவர்கள் நாம்.

மண்டல் கமிசனைக் கொண்டு வந்த இயக்கம்!

அதனால்தான், மோடி கோ பேக்' என்பதைப் பார்த்தவுடன், அவர் மதுரையில் பேசுகிறாரே, சில இயக்கங்கள் இதுபோன்று செய்கின்றன'' என்று. சில இயக்கங்கள் இல்லை; இந்த இயக்கம்தான் என்ன செய்கிறது என்று உங்களுக்குத் தெரியும். இது இந்தியா முழுவதும் பாடுபட்டு, மண்டல் கமிசனைக் கொண்டு வந்த இயக்கம். இந்த இயக்கத்தினால்தான், நீங்கள் சிந்துவெளி நாகரிகத்திற்குப் பதிலாக, கங்கை வெளி நாகரிகத்தை உண்டு பண்ணலாம் என்று பார்க்கிறீர்கள்; அதனை தடுக்கின்ற இயக்கம் நம்முடைய இயக்கம்.

இங்கே உரையாற்றிய பழனியப்பன் அருமையாக சொன்னார். இருந்தாலும், நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றார்.

பொய் சொல்வதில் அவர்கள் வல்லவர்கள்; கோய பல்சு மிகவும் முக்கியமானவன். அதற்கு அடுத்த கட்டம் என்னவென்றால், தீவிரவாதியை கொல்வது எப்படி? என்பதுதான்.

லட்சியத்திற்காக செத்தால், அதைவிட பெருமை வேறு எங்களுக்குக் கிடையாது!

நாளைக்கு நாங்களும் கொல்லப்படலாம்; ஆனால், ஒன்று, பெரியார் அய்யா சொன்னார், எங்களைப் பொறுத்தவரையில், நோயினால் சாகக் கூடாது; விபத்தினால் சாகக்கூடாது; ஒரு லட்சியத்திற்காக செத்தால், அதைவிட பெருமை வேறு எங்களுக்குக் கிடையாது.

நம்மை தீவிரவாதி, தீவிரவாதி என்கிறார்கள். நாங்கள் எல்லாம் தீவிரவாதியாம். திருமுருகன் காந்தி தீவிரவாதி; தேச பக்தி இல்லாதவர். கண்ணையா குமார் தேசபக்தி இல்லாதவர். காம்ரேட் ராஜாவினுடைய மகள் தேச பக்தி இல்லாதவர், தேசப் பற்று இல்லாதவர்கள்.

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன், ஏனென்றால், மத் திய அரசினுடைய காதுகள் இங்கே இருக்கிறது; மாநில அரசினுடைய காதுகள் இங்கே இருக்கின்றன. அது செயல்படுகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.

Shadow Armies: Fringe Organizations and
Foot Soldiers of Hindutva

இதோ என் கைகளில் இருப்பது Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Dhirendra K. Jha  என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர்தான்.

அந்த நூலில் அவர்,

Four of these organisations – the Bajrang Dal, the Bhonsala Military School, the Hindu Aikya Vedi and the Rashtriya Sikh Sangat – are affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS). Others – the Sanatan Sanstha, the Hindu Yuva Vahini, the Sri Ram Sene and Abhinav Bharat

இந்த அமைப்புகளில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி சுடுவதற்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். இந்த அமைப்புகளிலே உள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பு தான் தபோல்கரை கொலை செய்தது, கோவிந்த்  பன்சாராவை கொலை செய்தது, கவுரி லங்கேசை கொலை செய்தது. இந்திய ராணுவப் படையில் இருந்த துப்பாக்கி மருந்து களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயன் படுத்தியிருக்கிறது.

Bhonsala Military School

இதில் பல அமைப்புகள் இருக்கிறது - அதிலே கொலை அமைப்புகள் இருப்பது மட்டுமல்ல,  Bhonsala Military School என்று இருக்கக்கூடிய அமைப் பில், ராணுவத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், இத்தாலிக்குச் சென்று முசோலி னியினுடைய பாசிசத்தைக் கற்றுக்கொண்டு வந்த இந்து மகாசபை தலைவர் மூஞ்ஜே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்குச் சொல்லிக் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ். அதைப் பயன்படுத்தி, நடைபெற்றதுதான் மாலேகான் குண்டுவெடிப்பு.

காந்தியார் நினைவு நாளில் அந்த உறுதி வரவேண்டாமா?

ஒரே துப்பாக்கி நான்கு பேரை கொன்றிருக்கிறது. பெரியாரிடம்தான் அணுகுமுறையில் வரவில்லை; புத்தரைகூட காலி செய்துவிட்டார்கள்; பெரியாரிடம் வராது; ஏனென்றால், பெரியாரிடம் கடைசிவரைக்கும் ஏன் அவன் வரவில்லை என்றால், முடியாது என்று சொல்ல முடியாது; பாதுகாப்பு இல்லாத காந்தியாரைக் கொன்றதுபோல, பெரியாருக்கும் பாதுகாப்பில்லை. அதேபோன்றுதான் எங்களுக்கும். எங்களை சுற்றி இசட் பிளஸ் பாதுகாப்பு இருக்கிறதா? எங்களுக்கு ஒரு பிளசும் கிடையாது. எந்த நேரமும் எங்கள் வாழ்க்கை அனாதை வாழ்க்கை; தைரியமாக இருக்கிறோம்; பயனுள்ள வாழ்க்கையாக இருக்கவேண்டும்; பயனில்லா வாழ்க்கையாக இருக்கக்கூடாது. காந்தியார் நினைவு நாளில் அந்த உறுதி வரவேண்டாமா?

இதெல்லாம் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனவே, தமிழ்நாட்டில் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொறிந்து கொள்ளாதீர்கள். கோவைக்கு என்ன பெருமை தெரியுமா? கொங்கு நாடு என்பதுதான். ஒருமுறை ஏமாந்திருக்கலாம்; மீண்டும் ஏமாறக்கூடாது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்ன கருத்தி லேயே எனக்கு மிகவும் பிடித்த கருத்து என்னவென்றால், தமிழனிடத்தில் எனக்கு இருக்கின்ற கவலை என்ன வென்றால், அவன் விழுவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை; நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுகிறானே, புது இடத்தில் விழுந்துத் தொலைக்கக்கூடாதா?'' என்பார்.

இன்றைக்கு எச்சரிக்கையாக இருங்கள்; காந்தியார் நினைவு நாளில், மதவெறிக்கு இடமில்லை; ஜாதி வெறிக்கு இடமில்லை.

நம்முடைய உணர்வுகள் இருக்கவேண்டும் என்பது தான் மிக முக்கியம். ஆனால், இன்றைக்கு நாம் வெற்றி பெற்ற உணர்வு பெறுகிறோம்.

'விஜயபாரத'த்தின் தலையங்கம்

பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை. இது ஆர்.எஸ்.எஸினுடைய அதிகாரபூர்வமான பத்திரிகை விஜயபாரதம்' ஆகும்.

அந்தப் பத்திரிகையில், உண்மையைத் தவிர மற்ற வற்றை அழகாக எழுதுவார்கள். அப்படிப்பட்ட அந்தப் பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறார்கள், பாருங்கள்.

தமிழ்நாட்டிற்கு மோடி வந்து போயிருக்கிறார்; அதற்குமுன் அமித்ஷா வந்து போனார்; அவருக்கு முன்னால் பியூஸ் கோயல் வந்து சென்றார்.

வடநாட்டிலிருந்து இங்கே கூட்டணி பற்றி பேச வருகிறார்கள்.  தி.மு.க. தலைமையில், காங்கிரசு மற்ற அமைப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அறிவித்துவிட்டார்கள். அது பலமான கூட்டணியாக இருக்கிறது. அதுதான் வெற்றி பெறப் போகின்ற கூட்டணியாகும். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. 40-க்கும் 40 தமிழ்நாட்டில் பெறப்போவது உறுதி.

பா.ஜ.க.வோடு கூட்டணி என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது

மோடி இங்கே வந்து சென்ற பிறகும்கூட, அவர் களோடு கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை. அ.தி.மு.க. நண்பர்களில் சிலர்கூட, பா.ஜ.க.வோடு கூட்டணி சேரமாட்டோம் என்று சொல்கிறார்கள். ஒன்றிரண்டு பேரை தவிர, அவர்களுடைய குடுமியை மத்தியில் வைத்திருப்பால், அவர்கள் ஆட்டுவதற்கு, இவர்களும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தவிர பா.ஜ.க.வோடு கூட்டணி என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது.

என்னிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள், அ.தி.மு.க. வோடு பா.ஜ.க. கூட்டணிபற்றி என்ன சொல்கிறீர்கள் என்றார்கள்?

முதலில் அ.தி.மு.க.வில் கூட்டணி ஏற்படட்டும். பிறகு அவர்கள் மற்ற கட்சியோடு கூட்டணியைப்பற்றி சிந்திக்கலாம் என்றேன்.

போதுமே இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் மவுன விரதம்? என்ற தலைப்பில் தலையங்கத்தை எழுதியிருக்கிறது விஜயபாரதம்' பத்திரிகை.

பா.ஜ.க.வை தோளில் சுமந்துகொண்டு, அ.தி.மு.க. நடப்பதற்கு என்ன பாவம் செய்தோம்? என்றும் பா.ஜ.க.வை வளர்ப்பது எங்கள் வேலை இல்லை என்றும் தம்பிதுரை பேசி வருகிறார். தம்பிதுரையும், மேலும் சிலரும் இதுபோல பேசி வருவதால், இவர்கள் தி.மு.க.வின் கையாட்களாக இருக்கலாம் என்பது உள்பட பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.''

தி.மு.க.வினுடைய கையாளாக என்ன இருக்கிறது; அ.தி.மு.க. என்றாலே, தி.மு.க. உள்ளே இருக்கிறது என்றுதானே அர்த்தம்; தி.மு.க. என்றாலே, தி.க. இருக் கிறது என்றுதானே அர்த்தம். தி.க. என்கிற இரண்டு எழுத்தைவிட்டுவிட்டு ஒரு கவையும் சொல்ல முடி யாதே நீங்கள்!

மேலும், விஜயபாரதத்தின் தலையங்கத்தில்,

பா.ஜ.க. இல்லாத அ.தி.மு.க. ஏதாவது கூட்டணி அமைக்குமானால், அது தி.மு.க.வின் மெகா கூட்ட ணியை சமாளிக்க இயலாது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற்றால்தானே அந்த நிலை வரும்.''

எனவே அ.தி.மு.க. வெற்றி பெறாது என்பது உங்களுக்கும் தெரிந்துவிட்டது; அ.தி.மு.க.வினருக்கும் தெரிந்து விட்டது. பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால், டெபாசிட்டே வாங்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறீர் களே, மேலும், விஜயபாரதத்தின் தலையங்கத்தில்,

ஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது காணப் பட்ட நிலவரமே வேறு; இன்று அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி பிளவுபட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க. கூட்ட ணியை எதிர்த்து களம் காண, அ.தி.மு.க. பலமான கூட்ட ணியை அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்!''

எந்த பலம்? பண பலமா? பத்திரிகை பலமா? ரவுடிகள் பலமா?

எல்லாவற்றையும்தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

இதை எல்லாவற்றையும்தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதுதான் மைண்ட் பவர்!

விஜயபாரதத்தின்' தலையங்கத்தில்,

ஒருவேளை அ.தி.மு.க. தனித்து நின்று, தி.மு.க. அத்துணை இடங்களிலும் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரசு ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க. ஆட்சி ஒரு நாள்கூட நீடிக்கப் போவதில்லை. எனவே, தேச எண்ணம் கொண்ட பலரும் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டதைப் போன்று, அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. - தே.மு.தி.க. - புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஒரு அணியில் திரளுவது நல்லது!''

பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் உருவாவதற்கு இந்தியா முழுவதிலும் இடமில்லை!

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், பா.ஜ.க.வோடு கூட்டணியா? என்று ஒவ்வொருவரும் தெறித்து ஓடுகிறார்கள். வேறு யாராவது அவர்களோடு கூட்டணி சேர்ந்தால், அதனுடைய விளைவுகளை அனுபவிக்கட்டும்!

காந்தியார் நினைவு நாளில், மதவெறிக்கு இடமில்லை, ஜாதி வெறிக்கு இடமில்லை. பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் உருவாவதற்கு இந்தியா முழுவதிலும் இடமில்லை என்பதைக் காட்ட உறுதியெடுத்துக் கொண்டு,

வருகின்ற தேர்தலில், மீண்டும் மோடிக்கு இடமில்லை,

பா.ஜ.க.வுக்கு இடமில்லை, ஆர்.எஸ்.எசுக்கு இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. ராமன் இந்த முறை வெற்றி பெறமாட்டான்; இராவணன் மீண்டும் வெற்றி பெறுவான் என்பதுதான் மிக முக்கியமானது.

ராமன் கைகொடுக்க மாட்டான்;

இராவணன்தான் தமிழனாக எழுந்து நிற்பான் என்று சொல்லி,

வருகின்ற ஆட்சி சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஆட்சியாக இருக்கும்!

வருகின்ற ஆட்சி நல்லாட்சியாக, குடியாட்சியாக, மதச்சார்பற்ற ஆட்சியாக, சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றிகூறி, விடைபெறுகிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner