Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப். 4- அண்ணா அவர்களது 43ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது சிலைக்குத் தோழர்கள் பல ஊர்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்குடி

அறிஞர் அண்ணா அவர்களின் 43 ஆவது நினைவு நாளை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அண்ணா அவர்களின் முழு உருவ சிலைக்கு, திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி. திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அப்போது மாவட்ட கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட கழக செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மண்டல செயலாளர் சாமி.சமதர்மம், தேவகோட்டை நகர கழக தலைவர் தி.கலைமணி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் சிவ.கிருட்டிணன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி செயலாளர் ப.சுந்தரம், மாவட்ட ப.க.தலைவர் ந.செகதீசன், தி.தொல்காப்பியன், காரைக்குடி நகர கழக செயலாளர் அ.கோவிந்த ராஜன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி

அறிஞர் அண்ணாவின் 43ஆவது நினைவு நாளையொட்டி புதுச்சேரி திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் சிவ.வீரமணி தலைமையில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் வே.அன்பரசன், துணைத் தலைவர் கி.அறிவழகன், சு.துளசிராமன், பகுத்தறிவாளர் கழக செயலாளர், கோ.மு.தமிழ் செல்வன், துணை செயலாளர்கள் த.கண்ணன், ஆ.சிவராசன், துரைசிவாஜி, தி.க.இளைஞரணி செயலாளர் சே.கா.பாஷா, இரா.நா.முத்துவேல், சு.வீரசேகரன், செ.இளங்கோவன், கல்பனா துளசிராமன், மு.ஆறுமுகம், இளங்கோவன், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்

கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அறிஞர் அண்ணாவின் 43ஆவது நினைவு நாளை யொட்டி, பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் அண்ணா சிலைக்கு கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.க.இராசசேகரின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, மா.து. செ.க.ரா சதாசிவம், நகரத்தலைவர் தி.செல்வராஜ், இளைஞரணி செயலாளர் தே.அலெக்ஸ், கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவகாம சுந்தரி, நகர துணை செயலாளர் புருஷோத்தமன், அம்மாள் பாலசுந்தரம், அல்கு பசுபதி, பி.டி.குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்