
சென்னை பிப். 21- பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக இந்த ஆண்டு திராவிட இயக்க நூற் றாண்டு விழா என்ற அடிப்படையில் 1912 ஆம் ஆண்டு மெட் ராஸ் யுனைடேட் லீக் என்ற அமைப்பை உரு வாக்க காரணமாகவும், வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருந்த டாக்டர் சி. நடே சனார் அவர்களின் 75 ஆவது நிறைவு (18.2.2012 )நினைவு நாள் நிகழ்த் தினார்கள்.
இந்த நினைவுநாள் நிகழ்விற்கு திராவிட இயக்க மூத்த ஆய்வாளர் க.திரு நாவுக்கரசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், செயலாளர் கி.சத்திய நாராயணன், பொருளா ளர் கு.மனோகரன், உறுப்பினர்கள் வே.சுப்பு ராமன் (செய லாளர், தொழிலாளர் முன்னேற் றப் பேரவை சங்கம்) ஆ.சி.அருணகிரி (துணை ஆசிரியர் உழைப் பாளி) நல்லாசிரியர் சண்முகசுந் தராம், அ.நா.பால கிருஷ்ணன், வேணுகோ பாலன், கு. தென்னவன், வெ.மு. பெருமாள், துரை.வரதராசன், மு.காளியப்பன், மு.சந் திரசேகரன், வின்சென்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த டாக்டர் நடே சனார் 75ஆவது நிறைவு நினைவு நாள் முன்னிட்டு சென்னை தியாகராய நகர் டாக்டர் நடேச னார் பூங்காவில் உள்ள சிலைக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செயலாளர் கி.சத்திய நாராயணன் வரவேற் புரையாற்றிய பின், திரா விடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர் கள் டாக்டர் நடேசனார் அவர்களைப் பற்றி சொற்பொழிவாற்றும் போது, முதன் முதலாக பல்கலைக் கழகப் பட் டம் பெற வரும் மாண வர்களை தான் உருவாக் கிய திராவிடர் மாண வர் விடுதியில் தங்க வைத்து, உண வளித்து, பட்ட தாரியான பின் வேலை வாய்ப்பளித்து வந்தார். அந்த வகையில் பலரை உருவாக்கி வந்தவர்களில் ஒருவர் ஆர்.கே.சண்மு கம் செட்டியார் அவர் களும் ஆவார். அவன் சென்னை மாநகராட் சிக்கு தலைவராக வர முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலும், அவரு டைய தம்பி தாதுலிங்க முதலியார் அவர்கள் தலைவர் ஆனார் என் பதையும், இதுபோன்ற பல நிகழ்வுகளையும் சுருக்கமாக கூறினார்.
தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் அவ ரைப் பற்றி திராவிட இயக்க நூற்றாண்டு விழாவில் நினைவு கூறி இந்த ஆண்டு முடிவில் மிகச் சிறப்பாக பெரும் திரளாக கூடி விழாவெடுப் போம் என்று கூறினார்.
இறுதியாக உழைப் பாளி நூல் துணை ஆசி ரியர் ஆ.சி.அருணகிரி நன்றி கூறி நிறைவு செய்தார்.