Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

நிகழ்ச்சிகள்

குமரி, மே 18-தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி மாண வர்கள், இளைஞர்கள் மத்தியில் உடல் வளத் தையும் உள்ள வளத் தையும் பேணும் வகை யில் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம், குருந்தன்கோடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாபெ ரும் கராத்தே பயிற்சி முகாம் கன்னியாகுமரி மாவட்டம், தலக்குளம் கரையான் விளையில் 18.5.2012 வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் திங்கள் நகர் ம.ப.நூர்தீன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், திராவிடர் கழக குருந்தன்கோடு ஒன்றிய தலைவர், பெ.சுப்பிர மணியம், கழக திங்கள் நகர் கிளைத் தலைவர் சா.பாலையன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். கழக மாநில பொதுக்குழு உறுப்பி னர் ம.தயாளன், கராத்தே பயிற்சிமுகாமினை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

கழக கன்னியாகுமரி மாவட்ட அமைப்பா ளர் ஞா.பிரான்சிஸ், கழக மாவட்ட மகளி ரணி தலைவர் ச.ச.மணி மேகலை, நாகர்கோவில் நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முக மது, திங்கள் நகர் கிளைக் கழக செயலா ளர் தா.ஜெபராஜ், மயிலாடி கிளைக் கழக தலைவர் கே.வெங்கடா சலம், வெட்டூர்மணி மடம் ம.செல்வராசு, மணி மற்றும் ஏராளமா னோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கராத்தே பயிற்றுநர் தலக்குளம் ஆ.சிவக் குமார் மாணவர்கள் மற்றும் இளைஞர் களுக்கு கராத்தே பயிற்சி வகுப்பினை நடத்தினார். திங்கள் நகர் தலக்குளம் பகுதியினை சார்ந்த 40க்கும்மேலான மாணவ-மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வீர விளையாட்டான கராத்தே பயிற்சி பெற் றனர். இந்த பயிற்சி முகாம் மே 18 (இன்று) தொடங்கி மே 30 வரை தொடர்ந்து நடைபெறு கிறது.

தஞ்சாவூர், மே 18 - தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கட்டளைப்படி பெரியார் வீர விளையாட்டு கழகம் சார்பில் தஞ்சாவூர் அன்னை சிவகாமி நகரில் 18.05.2012 காலை 7 மணியளவில் சிலம்பம், கராத்தே, சடுகுடு (கபாடி) பயிற்சி முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் தலைமையேற்றார். கழக துணைப் பொதுச் செயலாளர் இரா.குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளரும் பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார், பெரியார் வீரவிளை யாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் த.ஜெகநாதன், தி.மு.க. பிரமுகர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் தஞ்சை மாவட்ட அமசிசூர் கபாடி கழக தலைவர் கே.பாஸ்கர் முகாமினை தொடங்கி வைத்தார். பெரியார் வீர விளையாட்டு கழக உறுப்பினர் தண்டர் விளையாட்டு கழக நிறுவனர் தே.பொய்யாமொழி, சிலம்பாட்ட பயிற்றுநர் இரா.மாயன், கபாடி பயிற்றுநர் சிகாமணி, கராத்தே பயிற்றுநர்கள் எட்வின் இன்பராஜ், வசந்த் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம், மாவட்ட துணைத் தலைவர் ப.தேசிங்கு, மாவட்ட ப.க. செயலாளர் கோபு. பழனிவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.இளவரசன், ஒன்றிய அமைப்பாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் பாக்கியம், நகரச் செயலாளர் சு.முருகேசன், பூவை. முருகேசன், கிராமத் தலைவர் விஜயராகவன், வெட்டிப்பாளையம் செல்வா, நல்லேந்திரன், வார்டு உறுப்பினர் மருதையன், ரவிச்சந்திரன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் ராஜீ, ஆசிரியர் லெட்சுமணசாமி, ஒன்றிய இளை ஞரணி துணைச் செயலாளர் தேவா, மகளிரணி முருகம்பாள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர் களும், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

இறுதியாக அன்னை சிவகாமி நகர் கிளைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார். பயிற்சி முகாமில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

இந்திய கபாடி அணியின் முன்னாள் தலைவர் கே.பாஸ்கர் உரையாற்றுகையில், பெரியார் வீரவிளை யாட்டு கழகம் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்கள் தமிழ்நாட்டில் கபாடிக்கு புத்துயிர் ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலும், இந்திய அளவிலும் கபாடி போட்டியினை  ஆண் களுக்கும், பெண்களுக்கும் சமஅளவில் ஒரு லட்சம் பரிசினை அறிவித்து மிகச்சிறப்பாக நடத்தி வரு கிறார்கள்.

இப்பொழுது கராத்தே, சிலம்பம் போன்ற தமிழர்களின் வீரவிளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27 இடங்களில் பயிற்சி முகாமினை நடத்துகின்ற பெரியார் வீரவிளையாட்டு கழகத்தினை பாராட்டுகின்றேன். நமது இளைஞர்கள், மாணவிகள் நன்கு பயன்படுத்தி நல்ல உடல் தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.

 

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்குடி தோழர் சாமி.திராவிடமணி அவர்கள், ஆங்காங்கு நடைபெறும் நமது இயக்க, மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நூலகங்கள், படிப்பகங்கள், கட்டடங்கள் பற்றிய ஆய்வுக்கு மேன்மைப்படுத்த ஆலோசனை கூறுமுகத்தான் அந்தந்த பகுதிகளுக்கு வருகை தரவிருக்கிறார்.
மே 16ஆம் தேதி முதல் அவர் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார் - தலைமைக் கழகம் சார்பில். அருள்கூர்ந்து அவருக்கு நல்ல வண்ணம் உதவிகரமாய் இருந்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
- கி.வீரமணி
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்