முன்பு அடுத்து Page:

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

     நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

    சென்னை, ஆக. 17- நீதித்துறை யில் நீதிபதிகள் பணிநியமனங் களில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி சமூக நீதியை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை மண்டல கழகம் சார் பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நேற்று (16.8.2018) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மகளிரணி தோழர்கள்: க.பார் வதி,....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 15:42:03

குருதிக்கொடை, உடல் உறுப்புகள் கொடை, உடற்கொடைகள் நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி

குருதிக்கொடை, உடல் உறுப்புகள் கொடை, உடற்கொடைகள் நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி

நலவாழ்வு சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பெருமிதம் சென்னை, ஆக.16 தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மருத்துவ குழுமம் இணைந்து  நலவாழ்வு சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டம் இதய துடிப்பு மாறுபாடுகள் எனும் தலைப்பில் நேற்று (15.8.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது. வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் ஆடிட்டர் இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு சொற்பொழிவுக்கூட்டத்தில் கலந்துகொண்ட....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:50:04

பெரியார் பிஞ்சுகள் மாநாடு வெளியூர் தோழர்கள் கவனத்திற்கு

பெரியார் பிஞ்சுகள் மாநாட்டிற்கு வருகைதரும் வெளியூர் தோழர்கள் குளித்துக் கிளம்புவதற்கு திண்டுக்கல்,  சிலுவத்தூர் சாலை, ஒய்.எம்.ஆர்.பட்டியிலுள்ள,  மீனாட்சி மீட்டிங் ஹாலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்புகளுக்கு: மாணிக்கம், நகர தலைவர் - 9150751763, செபாஸ்டின் சின்னப்பர் - 9944965442 மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:24:04

சென்னை நாளையொட்டி நீதி நடை (Justice Walk)

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், சென்னை தினத்தை முன்னிட்டு 2018 ஆகஸ்ட் 19 அன்று வட சென்னையில் உள்ள திராவிடர் இயக்க நிகழ்வுகள் குறித்த பயணம் நடைபெறவுள்ளது. ரிப்பன் மாளிகை (சென்னை மாநகராட்சி கட்டடம்) - விக்டோரியா ஹால் - சர் பிட்டி தியாகராயா கல்லூரி (தண்டையார் பேட்டை) - சர் பிட்டி தியாகராயர் இல்லம் - இராயபுரத்தில் உள்ள இராபின்சன் பூங்கா (தற்போதைய அண்ண பூங்கா) - அறிவகம்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:23:04

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஆக.16 நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி சென்னை மண்டல திராவிடர் கழகத்தின்சார்பில் ஆர்ப்பாட்டம்  இன்று (16.8.2018) காலை 11.00 மணியளவில் சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எழுச்சியுடன் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை வகித்து ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 15:34:03

கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள்

சென்னை, ஆக.15 முத்தமிழறிஞர், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நினைவிடம் நோக்கி, திராவிடர் கழகத்தின் சார்பில் அமை திப்பேரணி நேற்று (14.8.2018) காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் அண்ணாசாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்றது. அமைதிப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு: தாம்பரம் மாவட்டம்: பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலைநகர் செயராமன், தாம்பரம் நகரத் தலைவர் சீ.இலட்சுமிபதி, தாம்பரம் நகர செயலாளர்....... மேலும்

15 ஆகஸ்ட் 2018 16:11:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேத்தால், ஜன. 26- அரியலூர் தோழர் மருத்துவர் வசந்தா அவர் களின் கணவரும், பொறியாளர் ஆம்ஸ்ட்ராங், பத்மா, அமுதா ஆகியோரின் தந்தையுமாகிய மதியழகன் (வயது 66) அவர்கள் 26.12.2018 அன்று மறைவுற்றார்.

அவரது படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்ச்சி 6.1.2018 அன்று அவரது சொந்த கிராமமான மேத் தால் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செந்துறை இரா ஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் முன்னிலை வகித்தார். அன்னாரது படத்தினை திருமழப் பாடி தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் ஆறுமுகம் திறந்து வைத்தார்.

இரங்கலுரை ஆற்றியவர்கள்

ஆலத்தியூர் ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல கழக செயலாளர் மணிவண்ணன், திருமழப்பாடி தமிழ்ச்சங்க செயலாளர் புலவர் திருநாவுக்கரசு, பொதுக்கழு உறுப்பினர் பெரம்பலூர் ஆறு முகம், மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலை வர் தங்க.சிவமூர்த்தி, புலவர் அரங்கநாடன், மருத்துவர் வானொலி, வழக்குரைஞர் பகுத் தறிவாளன், தலைமையாசிரியர் அல்லி, அரிமா சங்க தலைவர் நெப்போலியன், பகுத்தறிவாளர் கழக அப்துல் மஜித், பா.இளங்கோவன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி, அரியலூர் நகர கழக தலைவர் பொறியாளர் கோவிந்தராஜ், மகளிர் சுய உதவி குழு தலைவர் வள்ளி, அனைத் திந்திய மகளிர் சங்க தலைவர் மலர்க்கொடி ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக அன் னாரது புதல்வர்களும், மருத்துவர் வசந்தா அவர்களும் நினைவு ரையாற்றினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் இரத்தின இராமச் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், அரியலூர் ஒன்றிய செயலாளர் கோபால கிருஷ்ணன், அமைப்பாளர் செல்லமுத்து, அரியலூர் நகர கழக செயலாளர் காமராஜ், ஒன்றிய துணைத் தலைவர் மருத முத்து, அறிவு ஜீவா அச்சக உரிமையாளர் செல்லபாண்டியன் மற்றும் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர்பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner