முன்பு அடுத்து Page:

இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது!

இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது!

பெரியார் அனைவருக்கும் உரியார்; இதைத் தெரியார்'' நரியார் மட்டும்தான்! திராவிடர் திருநாள் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஜன.19  இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது என்றும், பெரியார் அனைவருக்கும் உரியார்; இதைத் தெரியார் நரியார் மட்டும்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா இரண்டாம் நாள் 17.1.2019 அன்று சென்னை பெரியார்....... மேலும்

19 ஜனவரி 2019 17:17:05

மலேசிய திராவிடர் கழக முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமியின் பேரன் பொறியியல் பட்டம…

மலேசிய திராவிடர் கழக முன்னாள் தேசியத் தலைவர்  திருச்சுடர் கே.ஆர். இராமசாமியின் பேரன் பொறியியல் பட்டம் பெற்றதற்கான வாழ்த்து

படம் 1 : மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகனின் புதல்வரும், மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னோடித் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமியின் பேரனும் ஆகிய அரவிந்தன் மலேசிய பேராக் மாநிலத்தில் அமைந்திருக்கும் பெட்ரோனாஸ் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான அரவிந்தனின் மூத்த சகோதரர் டாக்டர் அன்பரசன் மற்றும் மூத்த சகோதரி....... மேலும்

19 ஜனவரி 2019 17:02:05

திருச்சி திருவானைக் கோவிலில் எருமை மாடுகள் ஊர்வலம், எருமை மாட்டுப் பொங்கல் விழா

திருச்சி திருவானைக் கோவிலில் எருமை மாடுகள் ஊர்வலம், எருமை மாட்டுப் பொங்கல் விழா

திருவானைக்கோவில், ஜன.19 மனிதர்களுக்கு இடையே வர்ணபேதம் காட்டுவதை போல மாடுகளில் பசு என்றால் உயர் வர்ணம்; எருமை என்றால் பஞ்சமம் & சூத்திரம் & பிறவியிலேயே கருப்பு என்ற நிலை இங்கு உண்டு. பசும் பாலைவிட எருமைப்பாலில் கொழுப்பு சத்து அதிகம். மேலும், கட்டித் தயிரும், கெட்டிப் பாலும், நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிகம் தேவைப்படுவது எருமை தான். அதனால் எருமை மாட்டை போற்றும் வகையில்....... மேலும்

19 ஜனவரி 2019 17:02:05

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர் சங்கம் முன்னாள் முதல்வர்கள் திருவுருவப் படத்திறப்பு விழா

நாள்: 23.1.2019 மாலை 4.30 மணி இடம்: வழக்குரைஞர் சங்க கூட்ட அரங்கம், திருச்சிராப்பள்ளி டாக்டர் எம்.ஜி.ஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது உருவப்படங்களை திறந்து வைத்து சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கே.பன்னீர்செல்வன் (தலைவர்) ஜெ.கே.ஜெயசீலன் (செயலாளர்) எம்.கமால்தீன் (துணைத் தலைவர்) டி.சதீஸ்குமார் (இணைச் செயலாளர்) மேலும்

19 ஜனவரி 2019 16:52:04

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

சென்னை, ஜன.18 திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் 16.1.2019 அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் தொடங்கியது. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கத்தினை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தொடங்கிவைத்தார். மக்கள் திரளின் மகிழ்ச்சியான ஆட்டத்தோடு பெரியார் திடல் நோக்கி ஊர்வலமாக வந்தது பறை முழக்கம். பெரியார்....... மேலும்

18 ஜனவரி 2019 16:25:04

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, பிப்.4 முழு நிலவு மறைவைப் (பூரண சந்திர கிரகணம்) பற்றிய மூட நம்பிக்கையை முறியடிக்க கருநாடக மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் தீவிர பரப்புரை செய்தனர்.

31-.1-.2018 அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி யாரும் வெளியே வரக் கூடாது; எதுவும் சாப்பிடக் கூடாது; சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட் டுத்தான் சாப்பிட வேண்டும் என்று மூடநம்பிக்கையாளர்கள் பரப்புரை செய்தார்கள்.

இதை முறியடிக்கும் வகையில் பகுத்தறிவு வாதிகள் பெங்களூரு நகர் மன்றத்தின் முன்பாக ஒன்று கூடி மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பல விதமான உணவுகளை உண்டு களித்தனர்.

ஒலி பெருக்கி மூலம் மூட நம்பிக்கை ஒழிப்பு பரப்புரை செய்தார்கள்.

சுண்டல், காராசேவு, பிஸ் கெட், சம்சா, வடை, பஜ்ஜி, போண்டா, பொரி கடலை, பழ வகைகள், பழரசம் போன் றவற்றை மகிழ்ச்சியுடன் சாப் பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க வைச் சேர்ந்த  ஆனந்த ராஜ், கருணாநிதி, பாரதி ராஜா, பொதுநல வழக்குரைஞர் நர சிம்மமூர்த்தி, கருநாடக மாநில திராவிடர்கழகத் தலைவர்

மு. சானகிராமன், செயலாளர், இரா. முல்லைக்கோ, கழக முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முத்துசெல்வன், கி.சு.இளங்கோவன், கஜபதி, எம். செயகிருட்டினன்,  இரா.இராசாராம், சண்முகம், பழனி வேல்,  ஆட்டோ பாஸ்கர், வழக்குரைஞர் பிரிவு குணவேந் தன், அருண் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கருநாடக தலித் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் கலந்து கொண்டார்கள். கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner