முன்பு அடுத்து Page:

26.8.2018 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்

26.8.2018 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 11 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர். திராவிடர் கழகம்) * பொருள்: அறிவாசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - அமைப்புப் பணிகள் - பிரச்சார திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட மாணவர் கழக....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:55:03

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

சென்னை, ஆக.20 உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல் படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. அதன் விவரம் வருமாறு: கோவை உயர்நீதிமன்றங்களில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி 16.8.2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திராவிடர் கழக மாநிலத் தலைமை கேட்டுக் கொண்டது.     அதன் அடிப்படியில், கோவை தெற்கு வட்டாச்சியர்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:55:03

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட முடிவு தஞ்சாவூர், ஆக. 19- 15.8.2018 அன்று மாலை 6.30 மணிக்கு தஞ்சை பூபதி நினைவு பெரி யார் படிப்பகத்தில் தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். கழக பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார், திராவி டர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 15:39:03

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

     நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

    சென்னை, ஆக. 17- நீதித்துறை யில் நீதிபதிகள் பணிநியமனங் களில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தி சமூக நீதியை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சென்னை மண்டல கழகம் சார் பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நேற்று (16.8.2018) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மகளிரணி தோழர்கள்: க.பார் வதி,....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 15:42:03

குருதிக்கொடை, உடல் உறுப்புகள் கொடை, உடற்கொடைகள் நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி

குருதிக்கொடை, உடல் உறுப்புகள் கொடை, உடற்கொடைகள் நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி

நலவாழ்வு சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பெருமிதம் சென்னை, ஆக.16 தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மருத்துவ குழுமம் இணைந்து  நலவாழ்வு சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டம் இதய துடிப்பு மாறுபாடுகள் எனும் தலைப்பில் நேற்று (15.8.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் நடைபெற்றது. வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் ஆடிட்டர் இராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு சொற்பொழிவுக்கூட்டத்தில் கலந்துகொண்ட....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:50:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி மாவட்டத்தில் பொங்கல் விழா!

துணைத்தலைவர் கவிஞர் கலந்து கொண்டு சிறப்புரை!

சென்னை, பிப். 6- கொள்கையில் ஓட்டை விழுந்தால் சரிசெய்து விடலாம். நாண யத்தில், ஒழுக்கத்தில் ஓட்டை விழுந் தால் சரிசெய்யவே முடியாது என்று தந்தை பெரியார் கூறியதை மிகப்பொருத் தமாகச் சுட்டிக்காட்டி, கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் பேசினார்.

ஆவடி மாவட்டத்தில் கடந்த (28-01-2018) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு உண்மை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்ட மும், மாவட்ட கலந்துரையாடல் கூட்ட மும் ஒருங்கே நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தைத் திங்கள் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ச்சியை பொங்கல் விழாவாகவும், 8 ஆண்டுகள் நிறைவடைந்து, 9 ஆவது ஆண்டு தொடக்க விழாவாகவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. இது 81 ஆவது நிகழ்வு என்பது குறிப்பிடத் தக்கது. பொங்கல் விழாவையொட்டி மாவட்டக் கழகத்தின் சார்பில் அம்பத் தூர் பகுதி செயலாளர் அய். சரவணன் இல்லத்தினர் அனைவருக்கும் இனிப் புப் பொங்கல் வழங்கி மகிழ்வித்தனர்.

மாவட்ட கலந்துரையாடல்

உண்மை வாசகர் வட்டம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மண்டல செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் சு. சிவ குமார், அமைப்பாளர் உடுமலை வடி வேல், இளைஞரணித் தலைவர் கார் வேந்தன், மண்டல மாணவரணிச் செயலாளர் பா. மணியம்மை, மாநில மாணவரணித் துணைச்செயலாளர் பார்த்தீபன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை, திருமுல் லைவாயில் இரணியன், மகளிர் பாச றைத் தலைவர் வனிதா, கார்ல்மார்க்ஸ், செம்மொழி, அம்பத்தூர் பகுதி பகுத் தறிவாளர் கழகத் தலைவர் நடராசன், அம்பத்தூர் பகுதி செயலாளர் அய். சர வணன்,  சோபன்பாபு, மகளிர் பாசறை ஜெயந்தி, செந்தமிழ்ச் செல்வன், கொரட்டூர் இளவரசு, இரா.கோபால், பகலவன், குட்டிமணி, வஜ்ரவேலு, தமிழ்மணி, கலைமணி, சுகந்தி, கி. மணிமேகலை, வ.ம. வேலவன், கனி மொழி, தென்றல் மணியம்மை, வை. கலையரசன், விஜய், தொண்டறம், பெரியார் மாணாக்கன், மகளிர் பாசறை பூவை செல்வி, ஸ்டீபன், ஆவடி நகரச் செயலாளர் முருகன், எல்லம்மாள், தமிழழகன், அம்பிகா, மரகதமணி, சு. சுதன், வீரப்பார் சுரேஷ், மேனாள் வட சென்னை மாவட்டத் தலைவர் தங்க மணி, தனலட்சுமி, கழக பகுதிப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடலின் இறு தியில் ஆவடி மாவட்டத்தை நான்கு ஒன்றியங்களாகப் பிரித்து, அதன் பிறகு, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் புதிய பொறுப்பா ளர்களைத் தேர்வு செய்து அறிவித்தார்.

புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!

நான்கு ஒன்றியங்களில் ஒன்று அம் பத்தூரை தலைமையாகக் கொண்டு கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல் லைவாயில், முகப்பேர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளையும்; அதற்குத் தலை வராக இராமலிங்கம், செயலாளராக ஏழுமலை ஆகியோரும், இரண்டாவது ஒன்றியமாக பூவிருந்தவல்லியைத் தலைமையாகக் கொண்டு மதுரவாயல், திருவேற்காடு, திருமழிசை ஆகிய பகுதிகளையும்; அதற்குத் தலைவராக பெரியார் மாணாக்கன், செயலாளராக எ, கண்ணன் ஆகியோரும், மூன்றாவது ஒன்றியமாக திருநின்றவூரைத் தலைமை யாகக் கொண்டு வேப்பம்பட்டு, பாக் கம், பட்டாபிராம் ஆகிய பகுதிகளையும்; அதற்குத் தலைவராக இரகுபதி, செய லாளராக பட்டாளம் பன்னீர்செல்வம் ஆகியோரையும், நான்காவது ஒன்றியமாக ஆவடியை தலைமையாகக் கொண்டு கோயில்பதாகை, திருமுல்லைவாயில், கன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளை யும்; அதற்குத் தலைவராக இரணியன், செயலாளராக தமிழ்மணி ஆகியோரும், புதிய பொறுப்பார்களாக மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்படும் விதத்திலும், கூடுதலாக மாவட்டத் துணைச் செயலாளராக கொரட்டூர் இளவரசும் செயல்படுவர் என்றும், மற்ற கிளை அமைப்புகள் ஏற் கனவே உள்ளபடி இயங்கும் என்றும் துணைத் தலைவரால் அறிவிக்கப்பட் டது.

சந்தாக்களும்! நன்கொடைகளும்!

தொடக்கத்தில் மாவட்டத்தின் சார் பில் துணைத்தலைவருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து துணைத்தலைவரிடம் சந்தாக்கள் வழங்கப்பட்டன. முதலில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் இராமதுரை 3 மாடர்ன் ரேசனலிஸ்ட் டுகளுக்கான சந்தா தொகையான ரூபாய் 900ஆம், மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல் காசோலையில் ஒரு ஆண்டுக்கான விடுதலை சந்தாவும், ஆவடி மகளிர் பாசறை சார்பில் பூவை செல்வி, ஜெயந்தி ஆகியோர் 10 உண்மை சந்தாக்களுக்கான தொகையான ரூபாய் 3,500ஆம் கொடுத்தனர். பிறகு மேனாள் வடசென்னை மாவட்டத் தலைவர் தங்கமணி, தனலட்சுமி இணையர் ஆவடி பெரியார் மாளிகையில் அமைந் துள்ள நூலகத்திற்கு 100 புத்தகங்களை துணைத்தலைவரிடம் அன்பளிப்பாகக் கொடுத்ததோடு, பெரியார் மாளிகையின் வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 2000ஆம் நன் கொடையாக வழங்கி, இது முதல் தவணை என்று பலத்த கைதட்டல் களுக்கிடையே குறிப்பிட்டுச் சொல்லிக் கொடுத்து மகிழ்ந்தனர்.

இன்றைய சர்ச்சைகள்!

கலந்துரையாடல், சந்தா வழங்கல் நிகழ்வுகளுக்குப்பிறகு, உண்மை வாச கர் வட்ட நிகழ்ச்சி தொடங்கியது. அதில் இன்றைய சர்ச்சைகள் என்ற தலைப்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். அதில் தற்போது ஆண்டாள், ஜெயேந் திரர் சர்ச்சைகளில் இந்துத்துவம் பேசு கின்றவர்களின் வரம்பு மீறிய பேச்சுக் களைச் சுட்டிக்காட்டியதோடு, அதற்கு பதிலடி தருவதற்காக தந்தை பெரியாரின் பண்புகளை தந்தை பெரியாரின் வார்த் தைகளிலேயே சொன்னார். அதாவது, கொள்கையில் ஓட்டை விழுந்தால் சரி செய்து விடலாம். நாணயத்தில் ஒழுக் கத்தில் ஓட்டை விழுந்தால் சரிசெய்ய முடியாது என்று கூறினார். இப்படிப் பட்ட அரிய பண்புகள் ஆரியத்தை எதிர்ப்பதற்கு இன்றும் அதிகமாகத் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்னார். மேலும் அவர், அப்படிப்பட்ட பெரி யார் மறைந்து 44 ஆண்டுகள் ஆகியும் அவர் வாழ்ந்த காலத்தைவிட, இன்றும் அவரது தேவையை கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் உணரப்படுகிறது என் றும் கூறினார். அதற்கு பார்வையாளர்கள் பலமாக கைதட்டி அதை முழுமையாக ஆதரிப்பதை தங்களின் கைதட்டல்களால் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து கவிஞர், தந்தை பெரியார், தன் கொள்கைப் பிரச்சாரத்தின் தாக்கத்தால் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் மிகநீண்ட பட்டியல் ஒன்றைக் கொடுத்தார். அதை மாற்றுவதற்கு இந் துத்துவத்துவ வாதிகள் முயற்சிப்பதை யும் அதுவும் தந்தை பெரியாரின் கொள் கைகளாலேயே நிச்சயமாக முறியடிக் கப்படும் என்றும் கூறினார். ஆவடி நகரக் கழகச் செயலாளர் முருகன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner